மேலும் அறிய

Newyear Chennai Traffic: புத்தாண்டு கொண்டாட்டம் - சென்னை கடற்கரை, முக்கிய சந்திப்புகளில் போக்குவரத்து மாற்றங்கள்

Newyear Chennai Traffic: புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு சென்னையில் கடற்கரைகள் மற்றும் முக்கிய சந்திப்புகளில் முக்கிய போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

Newyear Chennai Traffic: புத்தாண்டை முன்னிட்டு அறிவிக்கப்பட்டுள்ள போக்குவரத்து மாற்றங்களை கடைபிடித்து, பொதுமக்கள் பாதுகாப்பாக கொண்டாட காவல்துறை அறிவுறுத்தியுள்ளது. 

சென்னையில் புத்தாண்டு கொண்டாட்ட கட்டுப்பாடுகள்:

சென்னை போக்குவரத்து காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், “31.12.2023 அன்று புத்தாண்டு கொண்டாட்டங்களை முன்னிட்டு மெரினா கடற்கரை. எலியட் கடற்கரை மற்றும் பிற பொழுதுபோக்கு பகுதிகளில் ஏராளமான பொதுமக்கள் கூடுவார்கள். எனவே, சென்னை பெருநகர போக்குவரத்துக் காவல் துறையானது. ”உயிரிழப்பு இல்லா புத்தாண்டிற்கு முன்னாள்" என்ற நோக்கத்துடன் பின்வரும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

A. காமராஜர் சாலை மற்றும் எலியாட் கடற்கரை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் மேற்கொள்ளப்பட உள்ள போக்குவரத்து ஏற்பாடுகள்:

1. கடற்கரை உட்புற சாலை 31.12.2023 அன்று 1900 மணி முதல் 01.01.2024 அன்று 0600 மணி வரை போக்குவரத்துக்காக மூடப்படும். கடற்கரை உட்புற சாலையில் 1900 மணி முதல் வாகனங்கள் நிறுத்த அனுமதிக்கப்படாது. மேலும் அனைத்து வாகனங்களும் கலங்கரை விளக்கம் சந்திப்பு வழியாக மட்டுமே வெளியேற அனுமதிக்கப்படும்.

2. காமராஜர் சாலை போர் நினைவிடம் முதல் கலங்கரை விளக்கம் வரை 31.12.2023 2000 மணி முதல் 01.01.2024 0600 மணி வரை வாகனப் போக்குவரத்துக்காக மூடப்படும்.

3. அடையாறு பகுதியில் இருந்து காமராஜர் சாலைக்கு செல்லும் வாகனங்கள் கிரீன்வேஸ் சாலை, தெற்கு கால்வாய் சந்திப்பில் திருப்பி விடப்பட்டு மந்தவெளி ஆர்.ஏ. புரம் 2வது மெயின் ரோடு, ஆர்.கே மட் ரோடு, லஸ் மயிலாப்பூர் வழியாக சென்று அவர்களின் இலக்கை அடையலாம்.

4. டாக்டர் ஆர்.கே.சாலையில் இருந்து காமராஜர் சாலைக்கு செல்லும் வாகனங்கள் வி.எம். தெரு சந்திப்பில் திருப்பிவிடப்பட்டு ஆர்கே.மட் சாலை, லஸ் சந்திப்பு, மந்தவெளி, தெற்கு கால்வாய் கரை சாலை வழியாக சாந்தோம் ஹை மற்றும் கிரீன்வேஸ் சாலையை சென்றடையலாம்.

5. பாரிஸ் சந்திப்பிலிருந்து காமராஜர் சாலைக்கு செல்ல விரும்பும் வாகனங்கள் ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதையில் (வடக்கு) வடக்கு கோட்டை சுவர் சாலை. முத்துசாமி சாலை. முத்துசாமி பாலம், வாலாஜா பாய்ண்ட் அண்ணாசாலை வழியாக சென்று அவர்களின் இலக்கை அடையலாம்.

6. வாலாஜா பாயிண்ட் சுவாமி சிவானந்தா சாலை (தூர்தர்ஷன் கேந்திரா அருகில்) வாலாஜா சாலை (விக்டோரியா விடுதி சாலை அருகில், பாரதி சாலை x விக்டோரியா விடுதி சாலை. டாக்டர் பெசன்ட் சாலை (எம்ஆர்டிஎஸ் அருகில்) லாயிட்ஸ் சாலை x நடேசன் சாலை மற்றும் நடேசன் சாலை × டாக்டர் ஆர்.கே.சாலை சந்திப்பில் இருந்து காந்தி சிலை வரையில் போக்குவரத்து அனுமதி இல்லை.

7. தெற்கு கால்வாய் கரை சாலையிலிருந்து கலங்கரை விளக்கம் சந்திப்பு வரையிலான முழு வளைய சாலையில் வாகனப் போக்குவரத்து அனுமதிக்கப்படமாட்டாது

6. ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதையில் இருந்து (வடக்கு) ராஜாஜி சாலை மற்றும் வாலாஜா முனையிலிருந்து போர் நினைவிடம் நோக்கி கொடி மரச் சாலையில் 2000 மணி முதல் வாகனப் போக்குவரத்து அனுமதிக்கப்படாது.

9. அடையாரிலிருந்து பாரிஸ் நோக்கி செல்லும் மாநகர பேருந்துக்கள் அனைத்தும் தெற்கு கால்வாய் சாலை வழியாக திருப்பி விடப்பட்டு மந்தவெளி. வி.கே.ஐயர் சாவை, புனித மேரி சாலைஸ் சந்திப்பு, இராயப்பேட்டை கத்திட்ரல் ரோடு சாலை வழியாக உங்கள் இலக்கை சென்றடையலாம். 

10. மாநகர பேருந்துக்கள் பாரியிலிருந்து அடையார் திருவான்மியூர் தெற்கு நோக்கி செல்லக்கூடிய அனைத்து பேருந்துகளும் ஆர்மி சுரங்கபாதை வடபகுதிக்கு திருப்பிவிடப்பட்டு, என்.எப்.எஸ். ரோடு, முத்துச்சாமி சாலை, அண்ணாமலை, ஜெமினி மேம்பாலம், கத்திட்ரல் ரோடு, வி.எம். சாலை, லஸ் சந்திப்பு மந்தவெளி வழியாக தெற்கு கால்வாய் சாலையை சென்றடைந்து உங்கள் இலக்கை சென்றடையலாம்.

11. அனைத்து மேம்பாலங்களும் 31.12.2023 அன்று 2200 மணி முதல் 01.01.2024 அன்று 0600 மணி வரை போக்குவரத்துக்காக மூடப்படும்.

B. காமராஜர் சாலை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் செய்யப்பட்டுள்ள வாகன நிறுத்தத்திற்கான ஏற்பாடுகள்:

1. சுவாமி சிவானந்தா சாலை (தூர்தர்ஷன் கேந்திரத்திலிருந்து பெரியார் சிலை ஒற்றை வரிசை வாகன நிறுத்தம்)

2. வாலாஜா சாலை (தமிழ்நாடு மாநில விருந்தினர் மாளிகை அருகே அண்ணா சிலையை நோக்கி ஒற்றை வரிசை வாகன நிறுத்தம்)

3. பாரதி சாலை (விக்டோரியா ஹோட்டல் சாலை X பாரதி சாலை சந்திப்பில் - ஒற்றை வரிசை வாகன நிறுத்தம்)

4. பொதுப்பணித்துறை அலுவலகச் சாலை.

5. டாக்டர் பெசன்ட் சாலை (எம்ஆர்டிஎஸ் அருகே ஐஸ் ஹவுஸ் நோக்கி- ஒற்றை வரிசை வாகன நிறுத்தம் )

6. லாயிட்ஸ் சாலை (நடேசன் சாலையை நோக்கி மாற்றுத் திறனாளிகள் நல ஆணையர் அலுவலகம் அருகில் இருந்து - ஒற்றை வரிசை வாகன நிறுத்தம்)

7. இராணி மேரி கல்லூரி வளாகம்.

C. எலியாட் கடற்கரை பகுதியில் செய்யப்பட்டுள்ள போக்குவரத்து ஏற்பாடுகள்:

1. 31.12.2023 அன்று 2000 மணி நேரத்திற்குப் பிறகு 6வது அவென்யூ நோக்கி 01.01.2024 அன்று 0600 மணி வரை வாகனங்கள் அனுமதிக்கப்படாது.

2. 6வது அவென்யூ 5வது அவென்யூ, சந்திப்பு, 4வது மெயின் ரோடு சந்திப்பு. 3வது மெயின் ரோடு சந்திப்பு 16வது குறுக்கு தெரு சந்திப்பு மற்றும் 7வது அவென்யூ எம்ஜி ரோடு சந்திப்பில் அன்னை வேளாங்கண்ணி தேவாலயம் நோக்கி தடை செய்யப்படும்.

D. எலியாட் கடற்கரைக்கு அருகில் வாகன நிறுத்தத்திற்கான போக்குவரத்து ஏற்பாடுகள்:

1. பெசன்ட் நகர் 4வது அவென்யூ - ஒற்றை வரிசை வாகன நிறுத்தம்)

2. பெசன்ட் நகர் 3வது மெயின் ரோடு - ஒற்றை வரிசை வாகன நிறுத்தம்)

3. பெசன்ட் நகர் 4வது மெயின் ரோடு - ஒற்றை வரிசை வாகன நிறுத்தம்)

4. பொண்ட் நகர் 5வது அவென்யூ -ஒற்றை வரிசை வாகன நிறுத்தம்) 

5.பெசன்ட் நகர் 2 வது அவென்யூ ஒற்றை வரிசை வாகன நிறுத்தம்)

6. பெசன்ட் நகர் 3வது அவென்யூ- ஒற்றை வரிசை வாகன நிறுத்தம்)

மற்ற ஏற்பாடுகள்:

சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை, ANPR கேமராக்கள் மற்றும் சிசிடிவி கேமராக்களின் சேவைகளைப் பயன்படுத்தி வருகின்றன. இக்கேமராக்கள் மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் விதிமீறல்களில் ஈடுபடுபவர்களை கண்டறிந்து வழக்குகள் பதிவு செய்யப்படுகின்றன. மேலும் சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறையினர் புத்தாண்டை முன்னிட்டு வாகனம் ஓட்டுதல் / குடிபோதையில் வாகனம் ஓட்டுதல், அதிக வேகம் ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டுதல் /சாகச் சவாரி செய்தல், இருசக்கர வாகனத்தில் மூவர் செல்லுதல், தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டுதல், ஒலி மாசு ஏற்படுத்துதல் போன்றவற்றை கண்டறிந்து தொழில்நுட்ப முறையில் APR கேமரா மூலமாக தானகவே வழக்குகள் பதிவு செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அனைத்து வாகன ஓட்டிகளும் சாலை விதிகளை கடைபிடித்து பெருநகர போக்குவரத்து காவல்துறையினரால் ஏற்படுத்தப்பட்டுள்ள போக்குவரத்து ஏற்பாடுகளுக்கு ஆதரிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN 12th Hall Ticket: பிளஸ் 2 துணைத் தேர்வு: ஜூன் 19-ல் ஹால்டிக்கெட் வெளியீடு - பெறுவது எப்படி?
பிளஸ் 2 துணைத் தேர்வு: ஜூன் 19-ல் ஹால்டிக்கெட் வெளியீடு - பெறுவது எப்படி?
Breaking News LIVE: ஜூன் 22 வரை தமிழ்நாடு, புதுச்சேரியில் மிதமான மழைக்கு வாய்ப்பு..!
Breaking News LIVE: ஜூன் 22 வரை தமிழ்நாடு, புதுச்சேரியில் மிதமான மழைக்கு வாய்ப்பு..!
“நான் இறந்துவிட்டேன்” - சமூக வலைதளத்தில் பதிவிட்ட திமுக எம்.எல்.ஏ! அமைச்சர் நேருவுடன் மோதலா?
“நான் இறந்துவிட்டேன்” - சமூக வலைதளத்தில் பதிவிட்ட திமுக எம்.எல்.ஏ! அமைச்சர் நேருவுடன் மோதலா?
அனைத்து பள்ளிகளிலும் மாணவர்கள் மனசு புகார் பெட்டி: மாநில மகளிர் ஆணையத் தலைவர்
அனைத்து பள்ளிகளிலும் மாணவர்கள் மனசு புகார் பெட்டி: மாநில மகளிர் ஆணையத் தலைவர்
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

ADMK Vikravandi Bypoll | அதிமுக புறக்கணிப்பு ஏன்? யாருக்கு லாபம்? விக்கிரவாண்டி இடைத்தேர்தல்ADMK Boycotts Vikravandi By election | விக்கிரவாண்டி இடைத்தேர்தல்அதிமுக புறக்கணிப்பு!EPS அதிரடிVikravandi PMK Candidate | விக்கிரவாண்டியில் அன்புமணி போட்டி!பரபரக்கும் தேர்தல் களம்Modi Meloni | மீண்டும் #MELODI! மெலோனியுடன் மோடி! வைரல் PHOTOS

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN 12th Hall Ticket: பிளஸ் 2 துணைத் தேர்வு: ஜூன் 19-ல் ஹால்டிக்கெட் வெளியீடு - பெறுவது எப்படி?
பிளஸ் 2 துணைத் தேர்வு: ஜூன் 19-ல் ஹால்டிக்கெட் வெளியீடு - பெறுவது எப்படி?
Breaking News LIVE: ஜூன் 22 வரை தமிழ்நாடு, புதுச்சேரியில் மிதமான மழைக்கு வாய்ப்பு..!
Breaking News LIVE: ஜூன் 22 வரை தமிழ்நாடு, புதுச்சேரியில் மிதமான மழைக்கு வாய்ப்பு..!
“நான் இறந்துவிட்டேன்” - சமூக வலைதளத்தில் பதிவிட்ட திமுக எம்.எல்.ஏ! அமைச்சர் நேருவுடன் மோதலா?
“நான் இறந்துவிட்டேன்” - சமூக வலைதளத்தில் பதிவிட்ட திமுக எம்.எல்.ஏ! அமைச்சர் நேருவுடன் மோதலா?
அனைத்து பள்ளிகளிலும் மாணவர்கள் மனசு புகார் பெட்டி: மாநில மகளிர் ஆணையத் தலைவர்
அனைத்து பள்ளிகளிலும் மாணவர்கள் மனசு புகார் பெட்டி: மாநில மகளிர் ஆணையத் தலைவர்
Crime: வீட்டில் தனியாக இருக்கும் பெண்களே ஜாக்கிரதை! பட்டப்பகலில் மிளகாய்ப்பொடி தூவி நகை பறிப்பு!
Crime: வீட்டில் தனியாக இருக்கும் பெண்களே ஜாக்கிரதை! பட்டப்பகலில் மிளகாய்ப்பொடி தூவி நகை பறிப்பு!
Vikaravandi by election 2024: அதிமுக இடைத்தேர்தல் புறக்கணிப்பு... களத்தில் தீவிரம் காட்டும் பாமக...
Vikaravandi by election 2024: அதிமுக இடைத்தேர்தல் புறக்கணிப்பு... களத்தில் தீவிரம் காட்டும் பாமக...
வார விடுமுறை: தாம்பரம் - ராமநாதபுரம் சிறப்பு ரயில் குறித்து தெரிந்துகொள்ள முழுமையாக வாசிக்கவும் !
வார விடுமுறை: தாம்பரம் - ராமநாதபுரம் சிறப்பு ரயில் குறித்து தெரிந்துகொள்ள முழுமையாக வாசிக்கவும் !
TN 12th Revaluation 2024: நாளை மறுநாள் வெளியாகும் பிளஸ் 2 பொதுத்தேர்வு மறுகூட்டல்‌, மறுமதிப்பீடு முடிவுகள்‌; காண்பது எப்படி?
TN 12th Revaluation 2024: நாளை மறுநாள் வெளியாகும் பிளஸ் 2 பொதுத்தேர்வு மறுகூட்டல்‌, மறுமதிப்பீடு முடிவுகள்‌; காண்பது எப்படி?
Embed widget