TN Headlines: எண்ணூரில் வாயுக்கசிவு; மீண்டும் தென் மாவட்டங்களை அச்சுறுத்தும் கனமழை : முக்கிய செய்திகள் இதோ..
TN Headlines: தமிழ்நாட்டில் இன்று நடந்த முக்கிய நிகழ்வுகளை கீழே தலைப்புச் செய்திகளாக காணலாம்.
- டிச;31-ல் மீண்டும் தென் மாவட்டங்களை தாக்கும் கன மழை... எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா?
27.12.2023(இன்று) தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 28.12.2023: தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும், உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 29.12.2023 மற்றும் 30.12.2023: தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வடதமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும் படிக்க
- Ennore Gas Leak: எண்ணூரில் வாயுக்கசிவு - கோரமண்டல் ஆலையை தற்காலிகமாக மூட தமிழ்நாடு அரசு உத்தரவு
சென்னை எண்ணூரில் உள்ள கோரமண்டல் ஆலையில் உள்ள குழாயில் ஏற்பட்ட கோளாறினால் அமோனியா வாயு கசிந்து காற்றில் கலந்தது. இதனால் எண்ணூர் பகுதியில் 5 கிலோ மீட்டர் சுற்றுவட்டாரத்தில் உள்ள மக்களுக்கு கண் எரிச்சல், மூச்சுத்திணறல் மற்றும் மயக்கம் ஏற்பட்டது. இதனால் இதுவரை 30க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாத செய்திகள் வெளியாகியுள்ளது. மேலும் படிக்க
- Governor RN Ravi: நள்ளிரவில் திடீரென பரவிய வாயு.. பொதுமக்களுக்கு மூச்சு திணறல், மயக்கம் - ஆளுநர் ரவி கவலை..!
சென்னை எண்ணூரில் உள்ள கொரமண்டல் உரத் தொழிற்சாலையில் இரவு 12 மணியளவில் அம்மோனிய கசிவால் தொழிற்சாலை அருகில் உள்ள மீனவர்கள் வசிக்கும் பெரிய குப்பம், சின்ன குப்பம், எர்ணாவூர் குப்பம், அன்னை சிவகாமி நகர் உள்ள பகுதிகளில் பொதுமக்களுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது. இதையடுத்து, அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் உடனடியாக அருகில் இருந்த உறவினர்களிம் வீடுகளில் தஞ்சம் அடைந்தனர் மேலும், சிலர் திருமண மண்டபங்கள் மற்றும் சாலைகளின் ஓரத்தில் அமர்ந்திருந்தனர். மேலும் படிக்க
- Vijayakanth Hospitalised: மீண்டும் விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதி! என்ன ஆனது? தேமுதிக அதிரடி அறிக்கை..!
தேமுதிக தலைவர் விஜயகாந்த் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், வழக்கமான உடல் பரிசோதனைக்காக அனுமதி நாளை வீடு திரும்புவார் என தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஒரு மாதத்திற்கு முன்பாக உடல்நல குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த விஜயகாந்த், கடந்த 12ம் தேதி உடல் நலம் பெற்று வீடு திரும்பினார். மேலும் படிக்க
- AIADMK: நான் வாய் திறந்தால் திகாருக்கு செல்ல வேண்டி இருக்கும் - எடப்பாடி பழனிசாமியை இறங்கி அடித்த ஓபிஎஸ்
அதிமுகவின் முன்னாள் பொதுச்செயலாரும் தமிழ்நாட்டின் முதலமைச்சருமான ஜெயலலிதா கடந்த 2016ஆம் ஆண்டு மறைந்த பின்னர் அதிமுகவில் நடைபெற்ற உட்கட்சி அரசியல் சண்டை என்பது யாருமே எதிர்பார்க்காத ஒன்று. பல்வேறு உட்கட்சி மோதல்கள், பனிப்போர்ருக்கு மத்தியில் கடந்த 2021 சட்டமன்ற பொதுத் தேர்தலுக்குப் பிறகு, ஓபிஎஸ் மற்றும் அவரது சகாக்களை கட்சியில் இருந்து நீக்கி பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றினார் எடப்பாடி. மேலும் படிக்க