TN Headlines: பொன்முடிக்கு 3 ஆண்டுகள் சிறை! தமிழ்நாட்டில் மிதமான மழைக்கு வாய்ப்பு - முக்கிய செய்திகள்
TN Headlines: தமிழ்நாட்டில் இன்று நடந்த முக்கிய நிகழ்வுகளை கீழே தலைப்புச் செய்திகளாக காணலாம்.
- Higher Education Minister: பொன்முடி சிறை; ராஜகண்ணப்பனுக்கு உயர் கல்வித்துறை அமைச்சராக கூடுதல் பொறுப்பு..
அமைச்சர் பொன்முடிக்கு சிறை தண்டனை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அடுத்த உயர் கல்வித்துறை அமைச்சராக ராஜகண்ணப்பனுக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடிக்கு எதிரான சொத்துக்குவிப்பு வழக்கில், அவரை குற்றவாளி என அறிவித்து 3 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மேலும் ரூ. 50 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. பின், மேல் முறையீட்டுகாக 30 நாட்களுக்குத் தீர்ப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும் படிக்க
- Ponmudi Case: பழிவாங்கும் நோக்கில் போடப்பட்ட வழக்கு.. விரைவில் மேல்முறையீடு.. பொன்முடி வழக்கில் திமுக..
பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சிக்கு எதிரான சொத்துக்குவிப்பு வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், குற்றம்சாட்டப்பட்ட இருவரையும் குற்றவாளிகள் என கடந்த 19ம் தேதி அறிவித்தது. இந்நிலையில், வருமானத்திற்கு அதிகமாக 60.49% அதாவது ரூ. 1.75 கோடி சொத்து சேர்த்ததாக கூறி, பொன்முடி மற்றும் அவரது மனைவிக்கு 3 ஆண்டுகள் சிறைதண்டனை மற்றும் 50 லட்ச ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்துள்ளது. மேலும் படிக்க
- TNPSC: அரசு வேலை இனி கனவுதானா? டிஎன்பிஎஸ்சி மூலம் 2024-ல் வெறும் 3772 பேருக்கு வேலை? : ராமதாஸ் கேள்வி
டி.என்.பி.எஸ்.சி மூலம் 2024-இல் வெறும் 3772 வேலை மட்டுமே அளிக்கப்பட உள்ளதா? தமிழக இளைஞர்களுக்கு அரசு வேலை இனி கனவுதானா என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவு: ’’தமிழக அரசுத் துறைகளுக்கு 2024ஆம் ஆண்டில் 18 வகையான பணிகளுக்கு சுமார் 3,772 பேர் போட்டித் தேர்வுகளின் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்திருக்கிறது. மேலும் படிக்க
- TN Rain Alert: வரும் 27-ஆம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு.. மீனவர்களுக்கான எச்சரிக்கை என்ன?
தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில்ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக வரும் 27 ஆம் தேதி வரை தமிழ்நாட்டில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 21.12.2023 முதல் 24.12.2023 வரை: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும் படிக்க
- EPS On CM Stalin : ஒன்றையுமே செய்யாத சூப்பர் முதலமைச்சராக ஸ்டாலின் உள்ளார் - எடப்பாடி பழனிசாமி பேச்சு
விழுப்புரம் புதியபேருந்து நிலையம் அருகே உள்ள நகராட்சி திடலில் புரட்சி பாரதம் கட்சியின் மனிதம் காப்போம் மாநாடு அக்கட்சியின் தலைவர் ஜெகன் மூர்த்தி தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர் தங்கமணி, வேலுமணி கேபி முனுசாமி, பெஞ்சமின், சின்னைய்யா மற்றும் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் பங்கேற்றனர். மேலும் படிக்க