EPS On CM Stalin : ஒன்றையுமே செய்யாத சூப்பர் முதலமைச்சராக ஸ்டாலின் உள்ளார் - எடப்பாடி பழனிசாமி பேச்சு
EPS on CM Stalin : தாழ்த்தப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்களின் வளர்ச்சிக்கு 46 ஆண்டுகள் பாடுபட்ட கட்சியாக புரட்சி பாரதம் உள்ளது என்றார்
விழுப்புரம் புதியபேருந்து நிலையம் அருகே உள்ள நகராட்சி திடலில் புரட்சி பாரதம் கட்சியின் மனிதம் காப்போம் மாநாடு அக்கட்சியின் தலைவர் ஜெகன் மூர்த்தி தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர் தங்கமணி, வேலுமணி கேபி முனுசாமி, பெஞ்சமின், சின்னைய்யா மற்றும் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் பங்கேற்றனர்.
விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகேயுள்ள நகராட்சி திடலில் புரட்சி பாரதம் கட்சியின் மனிதம் காப்போம் மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி , தமிழ்நாடே வியக்கின்ற அளவிற்கும் எதிரிகள் அஞ்சுகின்ற அளவிற்கு மனிதம் காப்போம் மாநாடு மிக சிறப்பாக எழுச்சியாக நடைபெற்றதாகவும், மனிதன் பிறக்கின்றான் வாழ்கின்றான் இறக்கின்றான் வாழும் காலத்தில் செய்யும் நன்மை தான் உலகம் போற்றும் என்றும் சட்டமன்ற தேர்தல் 2021 ஆம் ஆண்டு வந்தபோது கேவி குப்பம் தொகுதியை ஜெகன் மூர்த்தி கேட்ட உடனே கொடுத்தாகவும்,
உடலும் உயிரும் எப்படி உள்ளதோ அது போன்று புரட்சி பாரதமும் அதிமுகவும் உள்ளது அதை யாராலும் பிரிக்க முடியாது என்றும் கூட்டணியில் அங்கம் வகித்தாலும் ஆதிதிராவிட மானியக்கோரிக்கை நடைபெறும் போதெல்லாம் ஜெகன் மூர்த்திக்கு பேச வாய்ப்பு கொடுத்த போது ஒடுக்கப்பட்ட மக்களின் எண்ணத்தை அவர் சட்டமன்றத்தில் பிரதிபலித்து கொண்டிருப்பதாக தெரிவித்தார். தாழ்த்தப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்களின் வளர்ச்சிக்கு 46 ஆண்டுகள் பாடுபட்ட கட்சியாக புரட்சி பாரதம் உள்ளதாகவும், பாராளுமன்ற தேர்தல் வரவுள்ள நிலையில் பாராளுமன்ற தேர்தலுக்கு இந்த மாநாடு ஒரு முன்னோட்டமாக உள்ளதாகவும், இந்த மாநாடு பலருக்கு தூக்கத்தை கெடுத்துள்ளதாகவும், 40க்கு 40 என்று கருதுபவர்களுக்கும் ஸ்டாலினுக்கும் தூக்கத்தை கெடுத்துள்ளதாக தெரிவித்தார்.
எங்கு பார்த்தாலும் மாநாட்டின் கூட்டத்தை பார்க்கும் போது ஸ்டாலினுக்கு காய்ச்சல் வந்துவிடும் எனவும் ஸ்டாலின் தலைமையிலான கட்சி வலுவான கூட்டணி என்று நினைத்து கொண்டிருக்கிறார். ஆனால் மாநாட்டில் உள்ள கூட்டத்தினை பார்த்தாலே தெரியும் அதிமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் வலுவான கட்சிகள் என்றும் தெரியும்.
மதத்திற்கும் ஜாதிக்கும் அப்பாற்பட்ட கட்சியாக அதிமுக உள்ளதாகவும், இங்கு யாருக்கும் அடிமையில்லை திமுகவில் உள்ள கூட்டணி எல்லாமே சுயநலவாதி கூட்டணி அதிமுகவில் உள்ள கூட்டணி பொதுநலன் கொண்டது என தெரிவித்தார். அதிமுகவை பொறுத்தவரை எம்ஜிஆரும் ஜெயலிதாவும் இக்கட்சிக்கு கொடுக்கப்பட்ட கொடை ,இவர்கள் தங்களது பிள்ளைகளுக்கு கொடுப்பது போல் பல்வேறு திட்டங்களை மக்களுக்கு கொண்டு வந்ததாகவும் கல்வியில் அதிக நிதி ஒதுக்கீடு செய்து கல்வியில் புரட்சி செய்தவர்கள் தான் ஜெயலலிதாவும் எம்ஜிஆரும், ஏழை எளியோர்கள் பயன்பெறும் வகையில் தாலிக்கு தங்கம் திட்டம், மாணவர்கள் கல்வி பயில மடிக்கணினி திட்டம், அம்மா இருசக்கர வாகன திட்டம் நிறுத்தப்பட்டுள்ளது இது தான் திமுகவின் சாதனையாக உள்ளதாக எடப்பாடி பழனிசாமி கூறினார்.
திமுக ஆட்சிக்கு வந்தபோது 21 பொருள் பொங்கல் தொகுப்பு கொடுப்பதாக கூறி ரூ.500 கோடி கொள்ளைதான் அவர்கள் அடித்ததாகவும் ஏழை மக்களுக்கு கொடுத்ததில் ஊழல் செய்தது தான் திமுக அரசு என்றும் மிக்ஜாம் புயல் சென்னையில் பெய்த போது முன்னெச்சரிக்கை நடவடிக்கை இல்லை இதில் செயலற்ற அரசாக தான் திமுக உள்ளதாகவும் பருவமழை தொடங்குவதற்கு முன் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்த அரசாக தான் அதிமுக இருந்ததாக தெரிவித்தார்.
ஒன்னுமே செய்யாத சூப்பர் முதலமைச்சராக ஸ்டாலின் உள்ளதாகவும், ஊழல் செய்வதில் லஞ்சத்தில் திளைத்த அரசாங்கமாக திமுக உள்ளது. முதியோர் உதவித்தொகை ரூ.1000-லிருந்து ரூ.1500 உயர்த்தவில்லை, கவர்ச்சி கரமான உறுதிமொழி கொடுத்து கொள்ளை புறமாக ஆட்சிக்கு வந்து கொள்ளை அடிக்கும் அரசாக திமுக உள்ளது என்றும் , போதை பழக்கம் அதிகம் தமிழகத்தில் உள்ளது, சட்டம் ஒழுங்கு சீர் கெட்டுள்ளதாக பழனிசாமி குற்றஞ்சாட்டினார். வாரிசு அரசியலை கொண்டுள்ள திமுக மேடையில் உள்ளவர்கள் வந்தால் ஏற்றுகொள்ள மாட்டார்கள், விவசாய குடும்பத்தில் வந்த நான் இன்னும் விவசாயம் செய்து வருகிறேன். திமுகவில் கூட்டணியில் உள்ள கட்சிகளை நெறுக்குவது தான் ஆனால் அதிமுகவில் உள்ள கூட்டணி கட்சிகளை வளர்ப்பதாக தான் உள்ளது 40 தொகுதிகளிலும் டெபாசிட் திமுகவிற்கு இழக்க செய்ய வேண்டுமென பழனிசாமி கூறினார்.