மேலும் அறிய

Higher Education Minister: பொன்முடி சிறை; ராஜகண்ணப்பனுக்கு உயர் கல்வித்துறை அமைச்சராக கூடுதல் பொறுப்பு..

 அமைச்சர் பொன்முடிக்கு சிறை தண்டனை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அடுத்த உயர் கல்வித்துறை அமைச்சராக ராஜகண்ணப்பனுக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. 

 அமைச்சர் பொன்முடிக்கு சிறை தண்டனை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அடுத்த உயர் கல்வித்துறை அமைச்சராக ராஜகண்ணப்பனுக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. 

உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடிக்கு எதிரான சொத்துக்குவிப்பு வழக்கில், அவரை குற்றவாளி என அறிவித்து 3 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மேலும் ரூ. 50 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. பின், மேல் முறையீட்டுகாக 30 நாட்களுக்குத் தீர்ப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 

உச்ச நீதிமன்றம் சென்று, உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு இடைக்காலத் தடையைப் பெற, இந்த 30 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. குற்றவாளி என அறிவிக்கப்பட்ட நிலையில் அவரது அமைச்சர் பதவி மற்றும் எம்.எல்.ஏ பதவி பறிக்கப்பட்டுள்ளது. 

மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் சொல்வது என்ன?

ஏற்கெனவே நேற்று முன்தினம் அமைச்சர் பொன்முடி குற்றவாளி என்று நீதிமன்றம் அறிவித்த நிலையில், அவரின் காரில் இருந்த தேசியக் கொடி அகற்றப்பட்டது. மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் பிரிவு 8(1)-ன்படி, ஊழல் தடுப்பு போன்ற சட்டங்களின்கீழ் குற்றவாளி என அறிவிக்கப்பட்டாலே சம்பந்தப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் தகுதி இழப்பு செய்யப்படுவர். அதேபோல ஊழல் தடுப்புச் சட்டத்தின்கீழ், தண்டனை விதிக்கப்படாமல் ஒரு ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டாலும்கூட தகுதி இழப்பு செய்யப்படுவர். 

இதனால்  அமைச்சர் பொன்முடி தன்னுடைய பதவியை இழக்கிறார். இதையடுத்து அவர் வகித்து வரும் உயர் கல்வித்துறை யாரிடம் ஒப்படைக்கப்படும் என்று கேள்வி எழுந்தது

உயர் கல்வித் துறை யாருக்கு?

வழக்கமாக ஒரு அமைச்சர் தண்டனை பெற்று தகுதி நீக்கம் செய்யப்பட்டாலோ, உடல்நிலை சரியில்லாமல் போனாலோ, அந்தத் துறை புதிதாக ஒருவருக்கு வழங்கப்படும். அல்லது ஏற்கெனவே அமைச்சராக இருக்கும் ஒருவருக்குக் கூடுதலாக அந்த துறையின் பொறுப்பு வழங்கப்படும். 

அந்த வகையில் அமைச்சர் பொன்முடி கவனித்து வந்த உயர் கல்வித்துறை யாரிடம் ஒப்படைக்கப்படும் என்று கேள்வி எழுந்தது. இந்தநிலையில், பிற்படுத்தப்பட்டோர் அமைச்சராக உள்ள ராஜகண்ணப்பனுக்கு உயர்கல்வித்துறை இலாகா வழங்கப்பட்டுள்ளது. 

புதிதாக ஒருவருக்கு அமைச்சர் பதவி வழங்கப்படும் நிலையில், ஆளுநர் ஒப்புதல் வழங்கிய பிறகு பதவி ஏற்பு விழா நடைபெறும். ஆனால் ஏற்கெனவே இருக்கும் அமைச்சருக்குக் கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டால், பெரிய நடைமுறைகள் எதுவும் இருக்காது. 

அந்தவகையில், பொன்முடி வகித்து வந்த இலாகாவை ராஜகண்ணப்பனுக்கு ஒதுக்க ஆளுநருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரிந்துரைக்கப்பட்டுள்ளார். 

முன்னதாக சிறையின் இருக்கும் அமைச்சர் செந்தில் பாலாஜியின் பொறுப்புத் துறைகள், அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, முத்துசாமி ஆகியோரிடம் கூடுதலாக வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.  

About the author மாய நிலா

Ramani Prabha Devi writes news under the pseudonym of Maaya Nila. An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.
Read More

தலைப்பு செய்திகள்

UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
அரசு பள்ளிகளை அழிக்க சதி? தமிழ்நாட்டில் கல்வி நிதி ஒதுக்கீடு 25 ஆண்டுகளில் 1/3 பங்காக சரிவு
அரசு பள்ளிகளை அழிக்க சதி? தமிழ்நாட்டில் கல்வி நிதி ஒதுக்கீடு 25 ஆண்டுகளில் 1/3 பங்காக சரிவு
எளிய சோதனைகள் மூலம் தேவகோட்டை மாணவர்களுக்கு அறிவியல் ஆர்வம்!
எளிய சோதனைகள் மூலம் தேவகோட்டை மாணவர்களுக்கு அறிவியல் ஆர்வம்!
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
US Iran War: “சும்மா மேல இருந்து மட்டும் குண்டு போட்டா வேலைக்கு ஆகாது“; ட்ரம்ப்புக்கு US ராணுவ ஜெனரல் வார்னிங்
“சும்மா மேல இருந்து மட்டும் குண்டு போட்டா வேலைக்கு ஆகாது“; ட்ரம்ப்புக்கு US ராணுவ ஜெனரல் வார்னிங்
SBI-ல் அரசு வேலை! 1538 கிளர்க் பணியிடங்கள்- பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு!
SBI-ல் அரசு வேலை! 1538 கிளர்க் பணியிடங்கள்- பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு!
US Tariff on India: இந்தியாவிற்கு பெரிய ஆப்பாக வைத்த US நாடாளுமன்றம்; 100% வரி விதிக்க வழிவகுக்கும் மசோதா நிறைவேற்றம்
இந்தியாவிற்கு பெரிய ஆப்பாக வைத்த US நாடாளுமன்றம்; 100% வரி விதிக்க வழிவகுக்கும் மசோதா நிறைவேற்றம்
Zelensky Serbia Weapons: பலே கில்லாடி மா நீ.! ரஷ்யாவின் நட்பு நாட்டிடமே ஆயுதங்களை கேட்கும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி; கிடைக்குமா.?
பலே கில்லாடி மா நீ.! ரஷ்யாவின் நட்பு நாட்டிடமே ஆயுதங்களை கேட்கும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி; கிடைக்குமா.?
Lottery Martin's donation ; ”லாட்டரி கிங் மார்ட்டின்” ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கோடியில் நன்கொடை கொடுத்தாரா.!! ஷாக் கொடுக்கும் பட்டியல்
”லாட்டரி கிங் மார்ட்டின்” ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கோடியில் நன்கொடை கொடுத்தாரா.!! ஷாக் கொடுக்கும் பட்டியல்
Best Selling Midsize SUV: எத்தன புது SUV வந்தாலும் தோத்துதான் ஓடனும்.! விற்பனையில் தொடர்ந்து முதலிடம்; அசத்தும் அந்த கார் எது.?
எத்தன புது SUV வந்தாலும் தோத்துதான் ஓடனும்.! விற்பனையில் தொடர்ந்து முதலிடம்; அசத்தும் அந்த கார் எது.?
Embed widget