Govt Teacher Sexual Assault : மாணவிகளிடம் அத்துமீறிய அரசு பள்ளி ஆசிரியர்! செருப்பால் அடித்த பெற்றோர்கள்
தெலங்கானாவில் மாணவிகளிடம் தவறாக நடந்து கொண்ட அரசு பள்ளி ஆசிரியரை பெற்றோர்கள் நடுரோட்டில் செருப்பால் அடிக்கும் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
தெலங்கானாவில் மாணவிகளிடம் தவறாக நடந்து கொண்ட அரசு பள்ளி ஆசிரியரை பெற்றோர்கள் நடுரோட்டில் செருப்பால் அடிக்கும் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. தெலங்கானா மாநிலம் மஞ்செரியல் பகுதியில் உள்ள அரசு பள்ளி ஆசிரியர் சத்யநாராயணா என்பவர் மாணவிகளிடம் தவறாக நடந்து கொண்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் மாணவிகள் அந்த ஆசிரியர் குறித்து பெற்றோர்களிடம் கூறியதை அடுத்து சம்பந்தப்பட்ட ஆசிரியரை நடுரோட்டில் வைத்து பெற்றோர்கள் சரமாரியாக தாக்கியுள்ளனர்.
பெண் குழந்தைகளின் தாய்மார்கள் ஒன்றினைந்து ஆசிரியரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு ஒரு பெண் ஆசிரியரின் கன்னத்தில் பளாரென அடிக்க தொடங்கினர்.
பின்னர் ஆவேசமாக ஓடிவந்த இன்னொரு தாய் ஆசிரியரை செருப்பால் அடித்துள்ளார். பின்னர் அனைவரும் இணைந்து அந்த ஆசிரியரை ஓட ஓட விரட்டி தாக்கியுள்ளனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.