ஏன் தப்பு பன்ற? கஞ்சா வழக்கில் கைதான மகனுக்கு நீதிமன்றத்தில் அறிவுரை கூறிய நடிகர் மன்சூர் அலிகான்!
கல்லூரி மாணவர்கள் மீது தனி கவனம் செலுத்தி போலீசார் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நடிகர் மன்சூர் அலிகான் மகன் உள்ளிட்ட 7 பேரை நீதிமன்றம் 15 நாட்கள் காவலில் வைக்க உத்தரவிட்டுள்ளது.
போதை பொருள் ஒழிப்பில் தமிழக அரசு தீவிரம் காட்டி வரும் நிலையில் தமிழக காவல்துறையும் பல அதிரடி நவடிக்கைகளில் இறங்கியுள்ளது. ஆங்காங்கே கடத்தப்படும் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களும் மூட்டை மூட்டையாக சிக்கி வருகின்றன. சமீபத்தில் கூட ஆந்திராவில் இருந்து கடத்தி வரப்பட்ட கோடி ரூபாய் மதிப்புள்ள
கஞ்சாவை மூட்டை மூட்டையாக போலீசார் பறிமுதல் செய்து அதை ஏற்றிவந்தவர்களை கைது செய்தனர்.
அதன் தொடர்ச்சியாக கல்லூரி மாணவர்கள் மீது தனி கவனம் செலுத்தி போலீசார் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். அதிரடி ரெய்டுகளும் நடத்தி வருகின்றனர். அதன்படி காட்டாங்குளத்தூர் தனியார் கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா வழங்கிய வழக்கு தொடர்பாக கல்லூரி மாணவர்கள் 5 பேர் உள்ளிட்ட 7 பேரை பிடித்து போலீசார் விசாரித்தனர். அவர்களிடம் பறிமுதல் செய்யப்பட்ட செல்போன்களில் பதிவான எண்களை கொண்டு தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
அதில் பல திடுக்கிடும் தகவல்கள் போலீசாருக்கு கிடைத்தது. அதனடிப்படையில் கடந்த 30ஆம் தேதி காட்டாங்கொளத்தூர் சென்று தனியார் கல்லூரி மாணவர்கள் அறையில் 2 பேரை கைது விசாரித்தனர்.
அதன்மூலம்தான் பிரபல நடிகர் மன்சூர் அலிகானின் மகன் அலிகான் துக்ளக் போலீசில் பிடிபட்டார். அவருடன் சேர்ந்து 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்டவர்களை போலீசார் அம்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அப்போது மன்சூர் அலிகான் நீதிமன்றத்தில் மகனுக்கு அறிவுரை வழங்கினார்.
அதாவது ஏன் தப்பு பண்ற? கஞ்சா குடிச்சா கைது பண்ணுவாங்கன்னு உனக்கு தெரியாதா? என்று அறிவுரை கூறினார். தைரியமா இரு; சாப்பிட்டியா என்றும் நலம் விசாரித்தார்.
இதையடுத்து கைது செய்யப்பட்டவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களுக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டிசம்பர் 18ஆம் தேதி வரை சிறையில் அடைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.