மேலும் அறிய

TN Headlines: 26-ம் தேதி வரை மழை நீடிக்கும்; தமிழ்நாட்டில் இன்று இதுவரை நடந்தது என்ன? இன்றைய செய்திகளின் ரவுண்டப்..

TN Headlines: தமிழ்நாட்டில் இன்று நடந்த முக்கிய நிகழ்வுகளை கீழே தலைப்புச் செய்திகளாக காணலாம்.

சனிப் பெயர்ச்சி

சனியை போல் கெடுப்பாரும் இல்லை; சனியை போல் கொடுப்பாரும் இல்லை" என்பார்கள். ஒரு மனிதனின் வாழ்நாளில் 2 முதல் 3 முறை சனி பகவான் ஏழறை ஆண்டுகள் பிடித்துக் கொண்டு, வாழ்க்கை பற்றிய புரிதலை, பக்குவத்தை தரக் கூடியவர். ஏழறை ஆண்டுகள் எந்த அளவிற்கு கஷ்டத்தை கொடுக்கிறாரோ அதே அளவிற்கு, சனி பகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சி ஆகும் போது நலன்களை அள்ளிக் கொடுப்பார் என்பார்கள். மேலும் வாசிக்க..

 மகர ராசியில் இருந்து கும்பத்துக்கு செல்லும் சனி பகவான்!

சனிப்பெயர்ச்சி(Sani Peyarchi) விழாவை முன்னிட்டு திருநள்ளாறில் உள்ள சனீஸ்வரன் கோயிலில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.  இன்று சனிப்பெயர்ச்சி நிகழ்வு நடைபெறுகிறது. மாலை 5.20 மணிக்கு மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு சனி பகவான் பிரவேசிக்க உள்ளார். இந்த சனிப்பெயர்ச்சியானது காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறில் உள்ள பிரசித்தி பெற்ற சனீஸ்வரன் கோயிலில் வெகுவிமரிசையாக நடைபெறும். சனிப்பெயர்ச்சி நிகழ்வு நடக்கும் போது சனீஸ்வர பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள், அஷ்டோத்திர அர்ச்சனை, சகஸ்கர நாம அர்ச்சனை, தீப வழிபாடு உள்ளிட்டவை நடைபெறும். மேலும் வாசிக்க..

 சனிக்கிழமைகளிலும் பள்ளி; பொதுத்தேர்வு ஒத்திவைப்பு?

பொதுத் தேர்வு பாடத் திட்டங்கள் நிறைவு பெறாமல் இருந்தால் சனிக்கிழமைகளிலும் பள்ளிகள் நடத்தப்படும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். மழையால் பாதிக்கப்பட்ட நான்கு மாவட்டப் பள்ளிகளிலும் பாதுகாப்பான சூழல் திரும்பிய பிறகு, மாணவர்கள் அரையாண்டுத் தேர்வு எழுத அனுமதிக்கப்படுபவர்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் வாசிக்க..

தென்மாவட்டங்களில் மத்தியக் குழு இன்று ஆய்வு!

 மழையால் தென்மாவட்டங்களில் ஏற்பட்ட பாதிப்புகளை மத்தியக் குழு இன்று ஆய்வு செய்யும் நிலையில், முதலமைச்சர் ஸ்டாலின் நாளை தூத்துக்குடி செல்கிறார். இன்று தூத்துக்குடி சென்று ஆய்வு செய்ய உள்ளதாக முதலமைச்சர் ஸ்டாலின் நேற்று கூறியிருந்தார். ஆனால், மத்திய குழு வருகையை முன்னிட்டு முதலமைச்சரின் சுற்றுப்பயணத்தில் மாற்றம் செய்யப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. அதன்படி,  டெல்லியில் பிரதமர் மோடியை நேற்றிரவு சந்தித்த பின்னர், தமிழ்நாடு இல்லத்தில் தங்கினார். டெல்லியில் இருந்து விமானம் மூலம் புறப்பட்டு இன்று காலை சென்னை திரும்புகிறார்.மேலும் வாசிக்க..

பள்ளிகொண்டா உத்திர ரங்கநாத சுவாமிகோயிலில் சொர்க்க வாசல் திறப்பு இல்லை

வைகுண்ட ஏகாதசி தினத்தில், பள்ளிகொண்டா உத்திர ரங்கநாத சுவாமி திருக்கோயிலில், வரும் 23-ம் தேதி சொர்க்க வாசல் திறப்பு மற்றும் கருட சேவை நடைபெறாது என கோயில் செயல் அலுவலர் நரசிம்ம மூர்த்தி செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளார். அதில், வேலூர் மாவட்டம், பள்ளிகொண்டா பகுதியில் உள்ள அருள்மிகு அரங்கநாயகி உடனுறை ஸ்ரீ உத்திர ரங்கநாத சுவாமி திருக்கோவில் உள்ளது. இந்த கோவில் ஆயிரம் ஆண்டுகள் பழைமையானது.  மேலும் வாசிக்க..

தாமதமாகும் குரூப் 1 தேர்வு முடிவுகள்; 16 வகையான தேர்வு முடிவுகள் எப்போது?

குரூப் 1 முதன்மைத் தேர்வு முடிவுகள் பிப்ரவரி மாதம் வெளியாகும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. அதேபோல், மேலும் 15 வகையான தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என்ற அட்டவணையை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. எனினும் தேர்வு முடிவுகள் தாமதமாகி வந்தன. இந்த நிலையில் குரூப் 1 முதன்மைத் தேர்வு முடிவுகள் பிப்ரவரி மாதம் வெளியாகும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. அதேபோல், மேலும் 15 வகையான தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என்ற அட்டவணையை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. மேலும் வாசிக்க..

இன்னும் வடியாத மழைநீர்! தென் மாவட்டங்களில் இன்று எந்த ரயில்கள் ரத்து?

அனைத்து ரயில் நிலையங்களிலும் தண்ணீர் புகுந்ததால் ரயில் போக்குவரத்து முற்றிலுமாக நிறுத்தப்பட்டது. அனைத்து ரயில்களும் பகுதியாக ரத்து செய்யப்பட்டு மதுரை, கோவில்பட்டி, விருதுநகர் ஆகிய ரயில் நிலையங்களில் இயக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் மழை ஓய்ந்து தண்ணீர் வடிய தொடங்கியுள்ளதால் திருநெல்வேலி ரயில் நிலையத்தில் ரயில் போக்குவரத்து தொடங்கியுள்ளது. இன்று முதல் வழக்கம்போல முக்கியமான ரயில் சேவை இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் திருச்செந்தூர், தூத்துக்குடி செல்லும் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் வாசிக்க..

மிரட்டிய கனமழை.. மூன்று நாளைக்கு பின்பு மீட்கப்பட்ட அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்

தூத்துகுடி மாவட்டம் ஏரல் பகுதியில் வெள்ளத்தில் சிக்கிய அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் 3 நாட்களுக்கு பின் மீட்கப்பட்டார். திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய 4 மாவட்டங்களில்  குமரிக்கடல் பகுதியில் நிலவிய வளிமண்டல சுழற்சி காரணமாக கடந்த டிசம்பர் 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் கனமழை கொட்டித் தீர்த்தது. அணைகளில் இருந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தண்ணீர் திறந்து விடப்பட்டதால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் பாய்ந்தது. மேலும் வாசிக்க..

26 ஆம் தேதி வரை மழை நீடிக்கும்!

நேற்று லட்சதீவு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சி இன்று தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவுகிறது. இதன் காரணமாக வரும் 26 ஆம் தேதி வரை தமிழ்நாட்டில் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 22 ஆம் தேதி முதல் 26 தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. மேலும் வாசிக்க..


 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"மணமகள் பெயரை கேட்டால் கஷ்டமா இருக்கு" திருமண விழாவில் குட்டி கதை சொன்ன தமிழக முதல்வர் ஸ்டாலின்!
வாலிபரை குத்திக் கொலை செய்த தொழிலாளி : ஆயுள் தண்டனை விதித்த தஞ்சை கோர்ட்
வாலிபரை குத்திக் கொலை செய்த தொழிலாளி : ஆயுள் தண்டனை விதித்த தஞ்சை கோர்ட்
BSNL Recharge: 52 GB நெட்! 2 மாசத்துக்கு அன்லிமிடேட் கால்! BSNL அசத்தல் ப்ளான் எவ்வளவு?
BSNL Recharge: 52 GB நெட்! 2 மாசத்துக்கு அன்லிமிடேட் கால்! BSNL அசத்தல் ப்ளான் எவ்வளவு?
Lucky Bhaskar:
Lucky Bhaskar: "நானே அஜித் ரசிகன்தான்.. அவரு மாதிரி யாரும் வர முடியாது" துல்கர் சல்மான் ஓபன் டாக்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Priyanka Gandhi Wayanad  : ’’35 ஆண்டுகள் கட்சிக்காக..முதல்முறையாக எனக்காக !’’பிரியங்கா EMOTIONALED Raids Vaithilingam House | EPS பக்கம் சாய்ந்த வைத்திலிங்கம்?அமலாக்கத்துறை அதிரடி சோதனை!TN Youngster Viral video | ”ஒட்டகம் மேய்க்க விட்டுட்டாங்க.. PLZ காப்பாத்துங்க..செத்துருவேன்”Kanimozhi Inspection | ”நீங்களே சொல்லுங்க இது தரமானதா” CONTRACTOR-ஐ கிழித்த கனிமொழி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"மணமகள் பெயரை கேட்டால் கஷ்டமா இருக்கு" திருமண விழாவில் குட்டி கதை சொன்ன தமிழக முதல்வர் ஸ்டாலின்!
வாலிபரை குத்திக் கொலை செய்த தொழிலாளி : ஆயுள் தண்டனை விதித்த தஞ்சை கோர்ட்
வாலிபரை குத்திக் கொலை செய்த தொழிலாளி : ஆயுள் தண்டனை விதித்த தஞ்சை கோர்ட்
BSNL Recharge: 52 GB நெட்! 2 மாசத்துக்கு அன்லிமிடேட் கால்! BSNL அசத்தல் ப்ளான் எவ்வளவு?
BSNL Recharge: 52 GB நெட்! 2 மாசத்துக்கு அன்லிமிடேட் கால்! BSNL அசத்தல் ப்ளான் எவ்வளவு?
Lucky Bhaskar:
Lucky Bhaskar: "நானே அஜித் ரசிகன்தான்.. அவரு மாதிரி யாரும் வர முடியாது" துல்கர் சல்மான் ஓபன் டாக்
Priyanka Gandhi: ”35 வருடங்களில் முதல்முறை..” : வயநாடு இடைத்தேர்தல் ரோட் ஷோவில் பிரியங்கா காந்தி பேச்சு
Priyanka Gandhi: ”35 வருடங்களில் முதல்முறை..” : வயநாடு இடைத்தேர்தல் ரோட் ஷோவில் பிரியங்கா காந்தி பேச்சு
TVK Maanadu: இது மாநாடு இல்ல... “வெற்றி கொள்கை திருவிழா”... விஜய் கட்சி மாநாட்டின் புதிய அப்டேட்
இது மாநாடு இல்ல... “வெற்றி கொள்கை திருவிழா”... விஜய் கட்சி மாநாட்டின் புதிய அப்டேட்
‘ஜோசியராக மாறிய ஈபிஎஸ்; திமுக கூட்டணியில் விவாதம் இருக்கும், விரிசல் ஏற்படாது’- முதல்வர் ஸ்டாலின்!
‘ஜோசியராக மாறிய ஈபிஎஸ்; திமுக கூட்டணியில் விவாதம் இருக்கும், விரிசல் ஏற்படாது’- முதல்வர் ஸ்டாலின்!
AjithKumar:
AjithKumar: "அவ்ளோ அழகு.. சுத்தி போடுங்க" மீண்டும் இளைஞனாக மாறிய அஜித்! ஆர்ப்பரிக்கும் ரசிகர்கள்!
Embed widget