TN Headlines: திருப்பூர் மாணவி முதலிடம்! கனமழைக்கு வாய்ப்பு - இதுவரை இன்று நடந்தது?
TN Headlines: தமிழ்நாட்டில் காலை முதல் இதுவரை நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை தலைப்பச் செய்திகளாக கீழே காணலாம்.

TN 12th Result 2024 Topper: 600-க்கு 2 மார்க் தான் கம்மி - 12ஆம் வகுப்பு தேர்வில் திரும்பி பார்க்க வைத்த திருப்பூர் மாணவி!
தமிழ்நாடு அரசு சார்பில் நடத்தப்பட்ட 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று காலை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது. அதில் திருப்பூர் மாவட்டம் பல்லடத்தைச் சேர்ந்த, மகாலட்சுமி எனும் மாணவி 598 மதிப்பெண்களை எடுத்து அசத்தியுள்ளார். சேடர்பாளையத்தில் உள்ள தனியார் பள்ளியில் படித்த அவர், தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தலா 99 மதிப்பெண்களை எடுத்துள்ளார். மேலும் படிக்க..
Salem 12th Result: சேலம் சிறையில் தேர்வெழுதிய அனைவரும் பாஸ்; 100% தேர்ச்சி - சாதித்த சிறைவாசிகள்
சேலம் மாவட்டத்தில் 16,052 மாணவர்கள், 18856 மாணவிகள் என 34,908 பேர் தேர்வு எழுதினர். இதில் 14,824 மாணவர்கள் 18,198 மாணவிகள் என மொத்தம் 33,022 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 92.35 சதவீதம் மாணவர்கள், 96.51 சதவீதம் மாணவிகள் என மொத்தம் 94.60 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மேலும் படிக்க..
TN Rain Alert: நாளை மறுநாள் 7 மாவட்டங்களில் கனமழை; ஜில்லுன்னு வந்த குட் நியூஸ்!
தமிழ்நாட்டில் வரும் 8-ம் தேதி 7 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், விருந்துநகர், தென்காசி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையின் விவரம்: மேலும் படிக்க..
மன்னார் வளைகுடா உயிர்கோள காப்பகத்தில் தீவுகள் அழியக்கூடிய சூழல் - ஆராய்ச்சியாளர்கள் கவலை
இந்தியாவில் பவளப்பாறைகள் அதிகமுள்ள நான்கு முக்கிய பகுதிகளில் மன்னார் வளைகுடாவும் ஒன்று. இங்குள்ள 21 தீவுகளைச் சுற்றிய பகுதிகளில் பவளப்பாறை காலனிகள் அதிகமாக அமைந்துள்ளன. குழி மெல்லுடலிகள் எனப்படும் பவளப்பாறைகள், மீன்கள் உள்ளிட்ட பல்வேறு கடல் வாழ் உயிரினங்களுக்கு முக்கிய உறைவிடமாகவும், உணவு மற்றும் இனப் பெருக்கத்துக்கு ஏற்ற இடமாகவும் திகழ்கின்றன. மேலும் படிக்க..
TNEA 2024: பொறியியல் படிப்புகளுக்கு இன்று முதல் ஜூன் 6 வரை விண்ணப்பிக்கலாம் - முக்கியத் தேதிகள் இதோ!
தமிழ்நாடு முழுவதும் பொறியியல் படிப்புகளில் சேர இன்று (மே 6) முதல் விண்ணப்பிக்கலாம் என்று பொறியியல் சேர்க்கை குழு தலைவர் மற்றும் தொழில்நுட்பக் கல்வி ஆணையர் அறிவித்துள்ளார். மாணவர்கள் ஜூன் 6ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். அசல் சான்றிதழ்களை ஜூன் 12ஆம் தேதி வரை சமர்ப்பிக்கலாம். அன்றே ரேண்டம் எண் எனப்படும் சம வாய்ப்பு எண் ஒதுக்கீடு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் 440-க்கும் மேலான பொறியியல் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் இளநிலை படிப்புகளுக்கு சுமார் 1.5 லட்சம் இடங்கள் (அரசு ஒதுக்கீடு) கீழ் உள்ளன. இவை இணையவழி கலந்தாய்வு மூலம் நிரப்பப்படுகின்றன. மேலும் படிக்க..
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

