Salem 12th Result: சேலம் சிறையில் தேர்வெழுதிய அனைவரும் பாஸ்; 100% தேர்ச்சி - சாதித்த சிறைவாசிகள்
12th Result 2024 Salem District: சேலம் மத்திய சிறையில் பொதுத்தேர்வு எழுதிய 11 ஆண் சிறைவாசிகள் மற்றும் ஒரு பெண் சிறைவாசி என மொத்தம் 12 சிறை கைதிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
தமிழக முழுவதும் இன்று பன்னிரண்டாம் வகுப்புக்கான முடிவுகள் வெளியாகி உள்ளது. இன்று காலை 9:30 மணிக்கு தேர்வு முடிவுகள் ஆனது வெளியிடப்பட்டது.
சேலம் தேர்ச்சி விகிதம்:
சேலம் மாவட்டத்தில் 16,052 மாணவர்கள், 18856 மாணவிகள் என 34,908 பேர் தேர்வு எழுதினர். இதில் 14,824 மாணவர்கள் 18,198 மாணவிகள் என மொத்தம் 33,022 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 92.35 சதவீதம் மாணவர்கள், 96.51 சதவீதம் மாணவிகள் என மொத்தம் 94.60 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
சேலம் மாவட்டத்தில் உள்ள 159 அரசு பள்ளிகளை பொறுத்தவரை 7,839 மாணவர்கள், 10,993 மாணவிகள் என மொத்தம் தேர்வு எழுதி நிலையில், 18,838 பேர் தேர்வு எழுதி உள்ளனர். இதில் 6,832 மாணவர்களும், 10,427 மாணவிகள் என மொத்தம் 17,320 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். அரசு பள்ளிகளின் தேர்ச்சி சதவீதம் 91.97 ஆக உள்ளது. கடந்த ஆண்டு சேலம் மாவட்டம் 91.57 சதவீதம் தேர்ச்சி பெற்ற மாநிலத்தில் 18 ஆம் இடத்தை பிடித்தது. இந்த ஆண்டு 94.22% தேர்ச்சி பெற்ற தமிழகத்தில் 20 வது இடத்தை பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
சிறை கைதிகள் 100% தேர்ச்சி:
சேலம் மத்திய சிறையில் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய 11 ஆண் சிறைவாசிகள் மற்றும் ஒரு பெண் சிறைவாசி என மொத்தம் 12 சிறை கைதிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதன் மூலம் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்கள் 100% தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி பெற்றவர்களுக்கு சேலம் மத்திய சிறை காவல் கண்காணிப்பாளர் வினோத்குமார் பரிசுப் பொருட்கள் வழங்கி பாராட்டினர்.
நாமக்கல் தேர்ச்சி விகிதம்:
நாமக்கல் மாவட்டத்தில் 8,413 மாணவர்கள், 8,847 மாணவிகள் என 17,260 பேர் தேர்வு எழுதினர். இதில் 7,989 மாணவர்கள் 8,597 மாணவிகள் என மொத்தம் 16,586 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 94.96 சதவீதம் மாணவர்கள், 97.17 சதவீதம் மாணவிகள் என மொத்தம் 94.60 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 95 அரசு பள்ளிகளை பொறுத்தவரை 3,915 மாணவர்கள், 4,707 மாணவிகள் என மொத்தம் தேர்வு எழுதி நிலையில், 8,622 பேர் தேர்வு எழுதி உள்ளனர். இதில் 3,565 மாணவர்களும், 4,496 மாணவிகள் என மொத்தம் 8,061 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். அரசு பள்ளிகளின் தேர்ச்சி சதவீதம் 93.49 ஆக உள்ளது.