TN Headlines: அடுத்த 7 நாட்களுக்கு மழை! விறுவிறுப்பாக நடக்கும் நீட் - தமிழ்நாட்டில் இதுவரை இன்று!
3PM Headlines: தமிழ்நாட்டில் காலை முதல் இதுவரை நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே காணலாம்.
TN Rain Alert: தமிழ்நாட்டில் அடுத்த 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்!
வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில்,வரும் 9-ம் தேதி வரை வட தமிழக உள மாவட்டங்களின் சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் அடுத்த ஒரு வாரத்திற்கு மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் படிக்க
Neet Exam: இன்று இளநிலை மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வு - 24 லட்சம் மாணவர்கள், 557 தேர்வு மையங்கள், கடும் கட்டுப்பாடு
2024ஆம் ஆண்டின் இளநிலை மருத்துவ படிப்பிற்கான நீட் நுழைவுத் தேர்வானது, நாடு முழுவதும் இன்று நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க சுமார் 23.8 லட்சம் தேர்வர்கள் விண்ணப்பித்து உள்ளனர். தமிழ்நாட்டில் இருந்து மட்டும் சுமார் ஒன்றரை லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 557 நகரங்கள் மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த 14 நகரங்களிலும் தேர்வு நடைபெற்று வருகிறது. தேசிய தேர்வு முகமை நடத்தும் இந்த தேர்வில் பங்கேற்கும் தேர்வர்களுக்கான ஹால் டிக்கெட் கடந்த 2 ஆம் தேதி வெளியிடப்பட்டது. மேலும் படிக்க
மேட்டூர் அணையின் நீர் வரத்து தொடர்ந்து அதிகரிப்பு - இன்றைய நிலவரம் இதுதான்
தமிழ்நாடு மற்றும் கர்நாடகா மாநிலங்களில் பருவமழை தொடங்கி உள்ளது. இதனால் கர்நாடகாவில் இருந்து மேட்டூர் அணைக்கு வரும் நீரானது அதிகரித்தும், குறைந்தும் காணப்பட்ட நிலையில் தற்போது மேட்டூர் அணையின் நீர் மட்டம் அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் அணைக்கு வினாடிக்கு 39 கன அடி தண்ணீர் வந்துகொண்டிருந்த நிலையில் நேற்றைய தினம் அணைக்கு வரும் நீரின் அளவு 50 கன அடியாக இருந்தது. இந்த நிலையில் இன்று காலை அணைக்கு வரும் நீரின் அளவு 61 கன அடியாக அதிகரித்துள்ளது. மேலும் படிக்க..
வீரபாண்டி கெளமாரியம்மன் கோவில் திருவிழா: 7ம் தேதி முதல் 14ம் தேதி வரையில் போக்குவரத்து மாற்றம்!
தேனி மாவட்டத்தில் வரும் 07.05.2024 முதல் 14.05.2024 வரை நடைபெறவிருக்கும் அருள்மிகு கௌமாரியம்மன் திருக்கோவிலின் சித்திரை பெருந்திருவிழாவினை முன்னிட்டு தேனி மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலிருந்து வரும் பக்தர்களின் வசதிக்காக 24 மணிநேரமும் அரசுபேருந்துகள் வீரபாண்டிக்கு இயக்கப்படும். மேலும் படிக்க
ஜெயக்குமார் மரணத்தில் வெளிப்படையான விசாரணை வேண்டும் - செல்வப்பெருந்தகை
நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள கரைச்சுத்து புதூர் கிராமத்தை சேர்ந்தவர் கே பி கே ஜெயக்குமார். இவர் காங்கிரஸ் கட்சியின் கிழக்கு மாவட்ட தலைவராக இருந்தார். இவரை கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பாக காணவில்லை, கண்டுபிடித்து தர வேண்டுமென அவரது மகன் உவரி காவல் நிலையத்தில் புகார் செய்தார். இதைத் தொடர்ந்து நேற்று அவரது வீட்டிற்கு அருகில் உள்ள தோட்டத்திலேயே ஜெயக்குமார் உடல் எரிக்கப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார். மேலும் படிக்க..