மேலும் அறிய

ஜெயக்குமார் மரணத்தில் வெளிப்படையான விசாரணை வேண்டும் - செல்வ பெருந்தகை

”இன்று மாலைக்குள் ஒரு நல்ல தகவல் வெளியே வரும் என்று மாவட்ட எஸ்பி என்னிடம் தெரிவித்துள்ளார்”

நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள கரைச்சுத்து புதூர் கிராமத்தை சேர்ந்தவர் கே பி கே ஜெயக்குமார். இவர் காங்கிரஸ் கட்சியின் கிழக்கு மாவட்ட தலைவராக இருந்தார். இவரை கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பாக காணவில்லை, கண்டுபிடித்து தர வேண்டுமென அவரது மகன் உவரி காவல் நிலையத்தில் புகார் செய்தார். இதைத் தொடர்ந்து நேற்று அவரது வீட்டிற்கு அருகில் உள்ள தோட்டத்திலேயே  ஜெயக்குமார் உடல் எரிக்கப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார். அவரது உடலை உவரி போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இங்கு பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அவரது உடல் அவரது மகன் கருத்தையா ஜாஃப்ரினிடம் இன்று காலை ஒப்படைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அவரது உடலுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வ பெருந்தகை, காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவர் ராஜேஷ்குமார் மற்றும் எம்.பி. விஜய்வசந்த் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இதைத் தொடர்ந்து தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது கூறியதாவது, ஒரு நல்ல மனிதர் காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவர் தற்போது உயிரிழந்து உள்ளார் என்பது எங்களுக்கு மிகப்பெரிய வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவத்தில் குற்றம் செய்தவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் மீது வெளிப்படையாக காவல்துறை விசாரணை மேற்கொள்ள வேண்டும் அவர்கள் எந்த கட்சியின் பின்புலத்தில் இருந்தாலும், எந்த அரசியல் போர்வையில் இருந்தாலும், தொழிலதிபராக இருந்தாலும் அவர்கள் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இன்று மாலைக்குள் ஒரு நல்ல தகவல் வெளியே வரும் என்று மாவட்ட எஸ்பி என்னிடம் தெரிவித்துள்ளார். மேலும் அவரது மரண வாக்குமூலம் தற்போது வெளியாகியுள்ளது. அதில் யாருடைய பெயர்கள் இருந்தாலும் கூட அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். எங்கள் கட்சியை சேர்ந்தவர்களாக இருந்தாலும் கூட காவல்துறை வெளிப்படையான  விசாரணையை மேற்கொள்ள வேண்டும் அப்படி வெளிப்படையாக விசாரணை மேற்கொண்டால்தான், யார் காரணம் என்பது வெளியே வரும். மேலும் நாங்கள் கட்சி ரீதியாகவும் இதை விசாரித்து நாங்கள் மேலிடத்திற்கு இந்த அறிக்கையை அனுப்புவோம். காவல்துறை விசாரணை என்பது தற்போது நடைபெற்றுக் கொண்டிருப்பதன் காரணமாக மற்ற தகவல்கள் எங்களால் வெளியே தெரிவிக்க முடியாது. இதில் பணம் படைத்தவராக இருக்கலாம். மிகப்பெரிய அரசியல்வாதியாக கூட இருக்கலாம் அப்படி இருந்தாலும் கூட அவர்கள் மீதும் காவல்துறை பாரபட்சம் காட்டாமல்  நடவடிக்கை எடுக்க வேண்டும். 

கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் அவரது உடல் உள்ளதாக எனது கட்சிக்காரர்கள் என்னிடம் தெரிவித்துள்ளார்கள். அதேபோன்ற புகைப்படங்களும் வெளியாகி உள்ளது. ஆகவே இதில் பெருத்த சந்தேகம் இருக்கிறது. இது தொடர்பாக காவல்துறை தீவிரமாக விசாரணை மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்தார். தொடர்ந்து நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினர் ரூபி மனோகரன் மீது விசாரணை நடத்தப்படுமா என்ற கேள்விக்கு அவர் மீதும் விசாரணை நடத்தலாம் நாங்க தான் ஏற்கனவே தெரிவித்துவிட்டோம். இந்த விசாரணை என்பது வெளிப்படையாக இருக்க வேண்டும் என்பதுதான் மேலும் உயிரிழந்த ஜெயக்குமாரின் கை கால்கள் இரண்டும் கட்டப்பட்டுள்ளது. இதிலிருந்து ஏதோ ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளதாக எங்களுக்கு தெரிகிறது. ஆகவே தான் நாங்கள் திரும்பத் திரும்பச் சொல்கிறோம் வெளிப்படையான விசாரணை மேற்கொண்டால்தான் இவருடைய உயிரிழப்புக்கு காரணம் என்பது வெளியே வரும் என தெரிவித்தார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Budget 2025: பள்ளிக் கல்வித்துறைக்கு நிதி குறைப்பா? பள்ளிகளில் செஸ் பாடம்-  பட்ஜெட் அறிவிப்புகள் என்னென்ன?
TN Budget 2025: பள்ளிக் கல்வித்துறைக்கு நிதி குறைப்பா? பள்ளிகளில் செஸ் பாடம்- பட்ஜெட் அறிவிப்புகள் என்னென்ன?
Tamil Nadu Budget 2025: இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே! மூன்றாம் பாலினத்தவருக்கு சம உரிமை.. ஊர்க்காவல் படையில் வாய்ப்பு
Tamil Nadu Budget 2025: இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே! மூன்றாம் பாலினத்தவருக்கு சம உரிமை.. ஊர்க்காவல் படையில் வாய்ப்பு
TN Budget 2025: சபாஷ்.. பட்ஜெட்ல ஊரக வளர்ச்சி, ஊராட்சித்துறைக்கு எவ்வளவு நிதி ஒதுக்கீடுன்னு தெரியுமா.?
சபாஷ்.. பட்ஜெட்ல ஊரக வளர்ச்சி, ஊராட்சித்துறைக்கு எவ்வளவு நிதி ஒதுக்கீடுன்னு தெரியுமா.?
TN Budget 2025: அரசு பொறியியல் கல்லூரிகளுக்கு அடித்த ஜாக்பாட்; உயர் கல்வித்துறைக்கு இத்தனை கோடி நிதியா?
TN Budget 2025: அரசு பொறியியல் கல்லூரிகளுக்கு அடித்த ஜாக்பாட்; உயர் கல்வித்துறைக்கு இத்தனை கோடி நிதியா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ED Raid in Tasmac | செந்தில் பாலாஜிக்கு குறி? டாஸ்மாக்கில் ரூ.1000 கோடி ஊழல்! அமலாக்கத்துறை பரபர! | செந்தில் பாலாஜிக்கு குறி? டாஸ்மாக்கில் ரூ.1000 கோடி ஊழல்! அமலாக்கத்துறை பரபர!PTR vs Rajdeep Sardesai | ‘’இந்தியை பார்த்து பயமா?’’ வம்பிழுத்த ராஜ்தீப் சர்தேசாய்! கதறவிட்ட PTRSengottaiyan vs EPS : EPS vs செங்கோட்டையன் வலுக்கும் உட்கட்சி மோதல்? குழப்பத்தில் அதிமுகவினர்!Soundarya Death Mystery | ”நடிகை சௌந்தர்யா கொலை?ரஜினியின் நண்பர் காரணமா?” பகீர் கிளப்பும் பின்னணி!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Budget 2025: பள்ளிக் கல்வித்துறைக்கு நிதி குறைப்பா? பள்ளிகளில் செஸ் பாடம்-  பட்ஜெட் அறிவிப்புகள் என்னென்ன?
TN Budget 2025: பள்ளிக் கல்வித்துறைக்கு நிதி குறைப்பா? பள்ளிகளில் செஸ் பாடம்- பட்ஜெட் அறிவிப்புகள் என்னென்ன?
Tamil Nadu Budget 2025: இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே! மூன்றாம் பாலினத்தவருக்கு சம உரிமை.. ஊர்க்காவல் படையில் வாய்ப்பு
Tamil Nadu Budget 2025: இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே! மூன்றாம் பாலினத்தவருக்கு சம உரிமை.. ஊர்க்காவல் படையில் வாய்ப்பு
TN Budget 2025: சபாஷ்.. பட்ஜெட்ல ஊரக வளர்ச்சி, ஊராட்சித்துறைக்கு எவ்வளவு நிதி ஒதுக்கீடுன்னு தெரியுமா.?
சபாஷ்.. பட்ஜெட்ல ஊரக வளர்ச்சி, ஊராட்சித்துறைக்கு எவ்வளவு நிதி ஒதுக்கீடுன்னு தெரியுமா.?
TN Budget 2025: அரசு பொறியியல் கல்லூரிகளுக்கு அடித்த ஜாக்பாட்; உயர் கல்வித்துறைக்கு இத்தனை கோடி நிதியா?
TN Budget 2025: அரசு பொறியியல் கல்லூரிகளுக்கு அடித்த ஜாக்பாட்; உயர் கல்வித்துறைக்கு இத்தனை கோடி நிதியா?
TN Budget 2025 LIVE: தமிழ்நாடு பட்ஜெட்..! மகளிருக்கு ரூ.37 ஆயிரம் கோடி கடன் - ராமேஸ்வரத்தில் ஏர்போர்ட்
TN Budget 2025 LIVE: தமிழ்நாடு பட்ஜெட்..! மகளிருக்கு ரூ.37 ஆயிரம் கோடி கடன் - ராமேஸ்வரத்தில் ஏர்போர்ட்
TN Budget 2025:   வேளச்சேரியில் மேம்பாலம்! ஸ்பாஞ்ச் ஸ்பா! புதிய நகரம்! சென்னைக்கு அடித்த ஜாக்பாட்! லிஸ்ட்டை பாருங்க
வேளச்சேரியில் மேம்பாலம்! ஸ்பாஞ்ச் ஸ்பா! புதிய நகரம்! சென்னைக்கு அடித்த ஜாக்பாட்! லிஸ்ட்டை பாருங்க
TN Budget 2025: தமிழ்நாட்டில் 7 இடங்களில் கூட்டு குடிநீர் திட்டம்: எங்கு எவ்வளவு நிதி ஒதுக்கீடு தெரியுமா?
TN Budget 2025: தமிழ்நாட்டில் 7 இடங்களில் கூட்டு குடிநீர் திட்டம்: எங்கு எவ்வளவு நிதி ஒதுக்கீடு தெரியுமா?
TN Budget 2025: நெருப்பை பற்றவைத்த தமிழ்நாடு! இன்று பட்ஜெட்டை தாக்கல் செய்யும் தங்கம் தென்னரசு
TN Budget 2025: நெருப்பை பற்றவைத்த தமிழ்நாடு! இன்று பட்ஜெட்டை தாக்கல் செய்யும் தங்கம் தென்னரசு
Embed widget