மேலும் அறிய
Tamilnadu Roundup: தமிழ்நாடு படைத்த சாதனை, வேலநிறுத்தம், அமித் ஷாவை புகழ்ந்த அதிமுக - 10 மணி செய்திகள்
Tamilnadu Roundup: தமிழ்நாட்டில் காலை முதல் தற்போது வரை நடந்த முக்கிய நிகழ்வுகளை கீழே விரிவாக காணலாம்.

தலைப்புச் செய்திகள்
Source : Special Arrangement - ABP Network
- வக்ஃபு வாரிய சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிரான தீர்மானத்தை தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று முன்மொழிகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
- "மொழித் திணிப்பையும் ஆதிக்கத்தையுமே எதிர்க்கிறோம்” - உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்திற்கு மு.க.ஸ்டாலின் பதிலடி
- 1 லட்சம் வீடுகளைக் கட்டித்தருவதற்காக ரூ.3,500 கோடி நிதி ஒதுக்கி அரசாணை வெளியிட்டது தமிழ்நாடு அரசு.
- எல்பிஜி டேங்கர் லாரிகள் இன்று முதல் வேலைநிறுத்தம்
- மின்னணுத் துறை ஏற்றுமதியில் நடப்பு நிதியாண்டில் 12 பில்லியன் டாலரை தாண்டி சாதனை படைத்துள்ளது தமிழ்நாடு
- “தமிழ்நாட்டின் வளர்ச்சியை தடுக்க நினைக்கும் வஞ்சகக் கூட்டம் கதறக் கதற தமிழ்நாடு முன்னேறிக் கொண்டே இருக்கும்” -அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா
- இன்று காலை 6.30 மணிக்கு ஏர் இந்தியா விமானம் மூலம் டெல்லி சென்ற அண்ணாமலை, பாஜக மூத்த தலைவர்களை சந்திக்க இருப்பதாக தகவல் - இபிஎஸ் - அமித்ஷா சந்தித்த நிலையில் அண்ணாமலையின் இந்த டெல்லி பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது
- "வல்லபாய் பட்டேலின் மறு உருவமாக அமித்ஷா" - ஆர்.பி.உதயகுமார் புகழாரம்
- கடந்தாண்டு அறிவிக்கப்பட்ட, கூடுதலாக 1000 இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான பணியை தொடங்கி அறிவிப்பை வெளியிட்டுள்ளது ஆசிரியர் தேர்வு வாரியம்.
- ராமேஸ்வரம் மீனவர்கள் 11 பேரை கைது செய்த இலங்கை கடற்படை. ஒரு விசைப் படகும் பறிமுதல்!
- சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.320 உயர்ந்து ரூ.65,880க்கும், கிராம் ரூ.8,235க்கும் விற்பனை
- | 10 மாவட்டங்களுக்கு கடும் வெயில் எச்சரிக்கை - அநாவசியமாக வெளியே வருவதை தவிர்க்குமாறு வானிலை மையம் எச்சரிக்கை
- சென்னையில் வேலைக்கு சேர்த்து விடுவதற்காகப் பீகாரிலிருந்து 9 சிறுவர்களை அழைத்து வந்த 3 வடமாநிலத்தவர்கள் கைது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
அரசியல்
பொழுதுபோக்கு
உலகம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion