மேலும் அறிய
Tamilnadu Roundup: சித்தூர் விபத்து- உயிரிழந்த தமிழர்கள்.. ஆளுநருக்கு எதிரான வழக்கு இன்று விசாரணை - 10 மணி செய்திகள்
Tamilnadu Roundup : தமிழ்நாட்டில் காலை முதல் தற்போது வரை நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே தலைப்புச் செய்திகளாக காணலாம்.

தமிழ்நாடு தலைப்புச் செய்திகள்
Source : ABP Live
- மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் 108-ஆவது பிறந்த தினம் இன்று!
- திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே அரசு பேருந்து கவிழ்ந்த விபத்தில் 10 பேர் காயம்
- பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நியமனத்தில் ஆளுநர் குறுக்கீடுக்கு எதிராக தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை
- இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் அனைவரும் இனி கண்டிப்பாக உள்ளூர் போட்டிகளில் விளையாட வேண்டும்-பிசிசிஐ
- சித்தூர் மாவட்டம் கங்கவரம் அருகே பேருந்து கவிழ்ந்த விபத்தில் 4 தமிழர்கள் உயிரிழப்பு
- ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்றுடன் நிறைவடைகிறது
- புகழ் பெற்ற நெல்லையப்பர் கோயிலில் சாமி தரிசனம் செய்தார் இசையமைப்பாளர் இளையராஜா
- மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 254 கன அடியில் இருந்து 151 அடியாக சரிவு
- முட்டுக்காட்டில் அமையவுள்ள கலைஞர் பன்னாட்டு அரங்கத்திற்கு சுற்றுச்சூழல் அனுமதி வழங்கப்பட்டுள்ளது!
- திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் நடிகர் ரவி மோகன் சாமி தரிசனம்
- அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் 16 காளைகளை அடக்கி மாடுபிடி வீரர் பூவந்தி அபிசித்தர் முதலிடம் பிடித்து காரை பரிசாக வென்றார்
- துணை முதல்வர் எழுந்து நின்றபோது விதிகளின்படியே நானும் எழுந்தேன் - மாவட்ட ஆட்சியர் சங்கீதா
- ஸ்ரீஹரிகோட்டாவில் ரூ.3,900 கோடி செலவில் 3-வது ஏவுதளத்தை அமைக்க பிரதமர் தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல்!
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
தமிழ்நாடு
பட்ஜெட் 2025
மதுரை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion