TN Budget Debates Live Updates: தமிழ்நாடு பட்ஜெட் விவாதம்: சட்டப்பேரவை கூட்டத்தொடர் முன்கூட்டியே நிறைவு - சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு
TN Budget Debate Live: தமிழ்நாடு அரசின் பொது பட்ஜெட் மற்றும் விவசாய பட்ஜெட் மீதான விவாதம் இன்று தொடங்கி மூன்று நாட்கள் நடைபெற உள்ளது. அது குறித்த உடனுக்குடனான அப்டேட்கள் இந்த பகுதியில் இடம்பெறும்.
LIVE
Background
தமிழ்நாடு அரசின் பொது பட்ஜெட் விவசாய பட்ஜெட் மீதான விவாதம் சற்று நேரத்தில் துவங்க உள்ளது. விவாதம் குறித்து ABP நாடு லைவ் பிளாக் மூலம் அடுத்தடுத்து அப்டேட் செய்திகள் இந்த பகுதியில் பதிவிடப்படும்.
சட்டப்பேரவை கூட்டத்தொடர் முன்கூட்டியே நிறைவு - சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு
தமிழ்நாடு சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் செப்டம்பர் 21ஆம் தேதிக்கு பதில் செப்டம்பர் 13ஆம் தேதி நிறைவு பெறுவதாக சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார். மாநிலங்களவை தேர்தல் நடைபெறும் நாளான செப்டம்பர் 13ஆம் தேதி சட்டப்பேரவை கூட்டத்தொடர் முடிகிறது.
பட்ஜெட் தொடரை முன்கூட்டியே முடிக்க திட்டமா?
செப்டம்பர் 13ஆம் தேதி ராஜ்யசபா தேர்தல் அறிவிக்கப்பட்டிருப்பதால் சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் முன்கூட்டியே முடிக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக இன்று மதியம் அலுவல் ஆய்வுக்குழு கூடுகிறது.
பணியில் உள்ள அர்ச்சகர்கள் நீக்கப்படவில்லை - முதல்வர் ஸ்டாலின்
“தற்போது கோயில்களில் ஏற்கெனவே பணியில் உள்ள அர்ச்சகர்கள் யாரும் நீக்கப்படவில்லை. அர்ச்சகர் நியமனத்தில் சமூகநீதியை பாழ்படுத்தும்வகையில் தவறான கருத்துகள் பரப்பப்படுகிறது. கலைஞர் கொண்டு வந்த சட்டம் நடைமுறைக்கு வராமல் இருந்தது. அதை நடைமுறைக்கு கொண்டு வந்துள்ளோம்” என்று சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் விளக்கமளித்துள்ளார்.
எனக்கு பொருளாதாரம் தெரியாது; மக்கள் பசி தெரியும்- உதயக்குமார்
எனக்கு பொளாதாரம் தெரியாது: ஆனால் மக்களின் பசியும், ஏழ்மையும் தெரியும் என அமைச்சர் பதிலுக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் பேச்சு
டிஜிட்டல் பட்ஜெட்டிற்கு அடிப்படை அதிமுக லேப்டாப் தான்- அதிமுக
திமுக இன்று தாக்கல் செய்த டிஜிட்டல் பட்ஜெட்டிற்கு அடிப்படையே அதிமுக வழங்கிய இலவச லேப்டாப் தான் என முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் பேச்சு