TN Assembly Session Today: கருணாநிதி பட்ஜெட் படித்தபோது, அதை பிடுங்கி கிழித்துபோட்டது மாதிரி செய்கின்றீர்களா? - சபாநாயகர் ஆவேசம்
எடப்பாடி பழனிசாமி ஆதரவு எம்.எல்.ஏ-க்களை சட்டப் பேரவையிலிருந்து வெளியேற்ற சபாநாயகர் அப்பாவு உத்தரவிட்டார்.
தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்ட தொடரின் 2வது நாளின் கூட்டம் இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது. சட்டப் பேரவை கூட்டம் கூடுவதற்கு முன், இபிஎஸ் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் சட்டப்பேரவை தலைவர் அப்பாவுவை சந்தித்தனர். ஆர்.பி. உதயகுமாரை எதிர்க்கட்சி துணை தலைவராக முடிவு செய்ய வேண்டும் என இபிஎஸ் தரப்பினர், சபாநாயகரை நேரில் சென்று வலியுறுத்தினர்.
அதற்கு எதிர்க்கட்சி துணை தலைவர் விவகாரம் தொடர்பாக சட்டப்பேரவையில் தெரிவிப்பேன் என சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.
View this post on Instagram
இந்தநிலையில், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவைக்கு வெளியே வந்து செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “அதிமுகவின் சட்டமன்ற உறுப்பினர்கள் எதிர்க்கட்சி துணைத் தலைவராக ஆர்.பி. உதயகுமாரை ஒரு மனதாக தேர்ந்தெடுத்து மாண்புமிகு சபாநாயகரிடம் கடிதமாக ஒப்படைத்தோம்.
நாங்கள் கொடுக்கப்பட்ட கோரிக்கையை ஏற்காமல், ஏற்கனவே துணை தலைவராக இருந்தவரை தொடர வேண்டும் என்ற அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார்கள். அந்த இருக்கையில் அமர வைத்து இருக்கிறார்கள் என இபிஎஸ் தெரிவித்தார்.
இதையடுத்து, சட்டப்பேரவையில் ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஆறுமுகசாமி ஆணையம் மேற்கொண்டு வந்த விசாரணை அறிக்கை, தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பான அருணா ஜெகதீசன் அறிக்கை சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது.
Also Read: Arumugasamy Commission Report: ஜெயலலிதா மரணம் : சசிகலா உட்பட நான்கு பேர் மீது விசாரணைக்கு பரிந்துரை