மேலும் அறிய

Arumugasamy Commission : அறிவிக்கப்பட்டதற்கு ஒருநாள் முன்னதாகவே ஜெயலலிதா இறந்தாரா? ஆறுமுகசாமி ஆணையம் பரபரப்பு தகவல்

ஒருநாள் முன்னதாகவே ஜெயலலிதா இறந்ததாக ஆறுமுகசாமி ஆணையம் அறிக்கையில் பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.

அறிவிக்கப்பட்டதற்கு ஒருநாள் முன்னதாகவே ஜெயலலிதா இறந்ததாக ஆறுமுகசாமி ஆணையம்  அறிக்கையில் பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.

இறப்பு தேதி அறிவிப்பால் பரபரப்பு:

ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஆறுமுகசாமி ஆணையம் மேற்கொண்டு வந்த விசாரணை அறிக்கை சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது.

ஆறுமுகசாமி ஆணையம் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

  • சாட்சியங்களின் அடிப்படையில், ஜெயலலிதா இறந்தது, 2016 ஆம் ஆண்டு டிசம்பர் 4 ஆம் தேதி மதியம் 3 மணி முதல் 3.50 மணிக்குள் என்று அறிக்கையில் ஆணையம் தெரிவித்துள்ளது. ஆனால், 2016 ஆம் ஆண்டு டிசம்பர் 5 ஆம் தேதி இரவு 11.30 மணிக்கு இறந்ததாக அப்போலோ மருத்துவமனை தெரிவித்திருந்தது. இதன் மூலம் ஜெயலலிதா மரணமானது, ஒரு நாளுக்கு பின்னரே அறிவிக்கப்பட்டதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அறிக்கை பேரவையில் தாக்கல்

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக, ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணை அறிக்கை பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

  • மறைந்த முதல்வர் உடல் பருமன், உயர் இரத்த அழுத்தம், கட்டுப்பாடற்ற நீரிழிவு நோய், ஹைப்போ தைராய்டிசம், நாள்பட்ட வயிற்றுப்போக்குடன் எரிச்சல் கொண்ட குடல் நோய்க்குறி (Irritable Bowel Syndrome with Chronic Diarrhoea) மற்றும் நாள்பட்ட மூச்சுக்குழாய் அழற்சி (Chronic Seasonal Bronchitis)
    ஆகியவற்றால் ஏற்கனவே பாதிக்கப்பட்டிருந்தார் என்பது ஆணையத்திற்கு அளிக்கப்பட்ட சாட்சியங்கள் மற்றும் ஆவணங்களை ஆய்வு செய்ததிலிருந்து அறியப்படுகிறது.
  • மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு முன்னரே மூன்று நாட்களாக அவருக்கு அதிக காய்ச்சல் இருந்ததையும், அதற்காக டாக்டர். சிவகுமாரின் ஆலோசனையின் பேரில் பாராசிட்டமால் மாத்திரைகளை அவர் எடுத்துக் கொண்டார் என்பதையும் ஆணையம் ஏற்கனவே கண்டறிந்துள்ளது.

மயக்கமடைந்த ஜெயலலிதா

  • மறைந்த முதல்வர் தனது வீட்டின் முதல் மாடியில் உள்ள தனது அறையின் குளியலறையிலிருந்து திரும்பி படுக்கையை அடைந்தபோது மயங்கி விழுந்தார். அப்போது அவருடன் அங்கிருந்த வி.சக.சசிகலா உள்ளிட்டோர் அவரைத் தாங்கிப் பிடித்தனர். பின்னர் விரைந்து ஆம்புலன்ஸ் சேவைக்காக அப்போலோ மருத்துவமனைக்கு உடனடியாகத் தகவலளித்து, ஆம்புலன்சில் வந்த மருத்துவர் மற்றும் துணை மருத்துவப் பணியாளர்கள் உடனடியாக முதல்வருக்கு மாஸ்க் மூலம் ஆக்சிஜன் வழங்கி முதலுதவி அளித்தனர்.

மயக்கம் தெளிந்த ஜெயலலிதா:

  • மயங்கி விழுந்த முதல்வர், சிறிதும் தாமதிக்காமல் கீழிருந்த ஆம்புலன்சில் அப்போலோ மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டார். முதல்கட்ட நோயறிதலுக்குப் பிறகு, முதல்வர் ICU-வுக்கு மாற்றப்பட்டபோது, ஸ்ட்ரெச்சரில் இருந்த அவருக்கு சுயநினைவு வந்தது. இவ்வாறு, ஆணையம் மறைந்த முதல்வர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு வழிவகுத்த சூழ்நிலைகள் மற்றும் சந்தர்ப்பங்களை சுருக்கமாக அளிக்கிறது. 

மறைந்த முதல்வருடன் புகைப்படம்:

  • 27.09.2016-அன்று காவிரி நதிநீர் கூட்டத்தில் தலைமைச் செயலாளரால் மறைந்த முதல்வருடன் புகைப்படம் (வெளியிடப்படுவதற்காக) எடுக்கக் கோரப்பட்டு, மறைந்த முதல்வரால் ஏற்றுக் கொள்ளப்பட்டது. அவர்கள் புகைப்படம் கலைஞருக்காக காத்திருந்தபோது, இராமலிங்கம், ஐ.ஏ.எஸ்., மருத்துவமனையில் புகைப்படம் எடுக்கத் தேவையில்லை எனக் கூறியதாக PSO பெருமாள்சாமி தெரிவித்தார்.
  • 27.09.2016-அன்று இரவு மூச்சுத் திணறல் ஏற்ப்பட்டதன் காரணமாக, அவருக்கு வென்டிலேட்டர் பொருத்தப்பட்டது. மறுநாள் காலை (28.09.2016), TEE பரிசோதனை செய்யப்பட்டதில், முதல்வருக்கு இதயத்தில் இரண்டு வெஜிடேசனும் பெர்ஃபொரேசனும் இருப்பதை கோபாலகிருஷ்ணன் உறுதிப்படுத்தினார்.
  • எய்ம்ஸ் மருத்துவர்கள், தாங்கள் மேற்பார்வையிட மட்டுமே வந்ததாகவும், மருந்து எதுவும் பரிந்துரைக்கவில்லை என்றும் கூறியுள்ளனர்.

அப்போலோ மருத்துவமனை:

  • அதேபோல், அப்போலோ மருத்துவமனையின் தலைவர் டாக்டர்.பிரதாப் சி. சரட்டி, உண்மைகளை தெரிவிப்பதற்கான அதிகாரம் பெற்ற நபராக இருந்தும், செய்தியாளர் சந்திப்பில் மறைந்த முதல்வர் எந்த நேரத்திலும் டிஸ்சார்ஜ் செய்யப்படலாம் என்ற ஒரு பொய்யான அறிக்கையை வெளியிட்டார். இரண்டாவதாக, அவர் தனது அறையில் அடிக்கடி விளக்கக் கூட்டத்தை நடத்திய போதிலும், மறைந்த முதல்வரின் உடல்நலக்குறைவு மற்றும் அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை  குறித்த உண்மை நிலையை வெளிப்படுத்த தவறியதால், இது விசாரிக்கப்பட வேண்டியதாக ஆணையம் கருதுகிறது
  • அப்போலோ மருத்துவமனையால் சிறந்த சிகிச்சை அளிக்கப்படுவதாக கூறப்படுவதை தவிர, வேறு எந்த ஆதாரங்களும் அல்லது ஆவணங்களும் ஆணையத்தின் முன் வைக்கப்படவில்லை.

ஆணையம் எழுப்பியுள்ள கேள்வி:

  •  டாக்டர் ரிச்சர்ட் பீலே மறைந்த முதல்வரை சிகிச்சைக்காக வெளிநாட்டுக்கு அழைத்துச் செல்லத் தயார் என்று கூறியிருந்தும், அது ஏன் நடக்கவில்லை?
  • டாக்டர் சமின் ஷர்மா ஆஞ்சியோ செய்வது பற்றி விளக்கிய பின், அவரும் அதற்கு ஒப்புக்கொண்டார். ஆனால், அது ஏன் நடக்கவில்லை?

மறைந்த முதல்வரின் மறைவுக்குப் பிறகு, 11.02.2017 அன்று நடந்த அடுத்தடுத்து நிகழ்வுகளாவன; ஆணையம், மேற்கூறியவற்றை கருத்தில் கொண்டு,சசிகலாவை குற்றம் சாட்டுவதை தவிர, வேறு எந்த முடிவுக்கும் வர இயலாது.

மேலும், ஜெயலலிதாவின் மரணத்தில் விஜயபாஸ்கர், ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்,  சிவகுமார் ஆகியோர் குற்றம் செய்தவர்களாக ஆணையம் முடிவு செய்கிறது. இதையடுத்து, நான்கு பேர் மீதும் விசாரணை செய்ய ஆணையம் பரிந்துரைக்கிறது. 

பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது:

சாட்சியங்களின் அடிப்படையில், ஜெயலலிதா இறந்தது, 2016 ஆம் ஆண்டு டிசம்பர் 4 ஆம் தேதி மதியம் 3 மணி முதல் 3.50 மணிக்குள் என்று அறிக்கையில் ஆணையம் தெரிவித்துள்ளது.

ஆனால், 2016 ஆம் ஆண்டு டிசம்பர் 5 ஆம் தேதி இரவு 11.30 மணிக்கு இறந்ததாக அப்போலோ மருத்துவமனை தெரிவித்திருந்தது.

இதன் மூலம் ஜெயலலிதா மரணமானது, ஒரு நாளுக்கு பின்னரே அறிவிக்கப்பட்டதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Chennai Rain: சீக்கிரமா வீட்டுக்கு போயிருங்க.! இந்த 6 மாவட்டங்களில் இரவு மழை இருக்கு.!
Chennai Rain: சீக்கிரமா வீட்டுக்கு போயிருங்க.! இந்த 6 மாவட்டங்களில் இரவு மழை இருக்கு.!
அச்சச்சோ.. தீக்குளித்த நபர்.. நாடாளுமன்றம் நோக்கி ஓடியதால் பரபரப்பு!
அச்சச்சோ.. தீக்குளித்த நபர்.. நாடாளுமன்றம் நோக்கி ஓடியதால் பரபரப்பு!
"வேதனையா இருக்கு" அண்ணா பல்கலை. மாணவி விவகாரம்.. கொதித்தெழுந்த விஜய்!
Chennai Rain: சென்னையா, கொடைக்கானலா.!  எங்கு பார்த்தாலும் மழைச்சாரலும் பனிமூட்டமுமான காட்சிகள்.!
சென்னையா, கொடைக்கானலா.! எங்கு பார்த்தாலும் மழைச்சாரலும் பனிமூட்டமுமான காட்சிகள்.!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

RN Ravi Delhi Visit: ”ஸ்டாலின் சொல்றத கேளுங்க!” RN.ரவிக்கு பறந்த ORDER! மோடியின் திடீர் முடிவு?Anna University Issue: அண்ணா பல்கலை. விவகாரம் குற்றவாளி குறித்து திடுக் தகவல்!  கைதானவர் யார்?Sri Ram Krishna Profile: தமிழனை அழைத்த TRUMP WHITE HOUSE-ல் முக்கிய பதவி! யார் ஸ்ரீராம் கிருஷ்ணன்?Anna University Student Sexual Assault |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai Rain: சீக்கிரமா வீட்டுக்கு போயிருங்க.! இந்த 6 மாவட்டங்களில் இரவு மழை இருக்கு.!
Chennai Rain: சீக்கிரமா வீட்டுக்கு போயிருங்க.! இந்த 6 மாவட்டங்களில் இரவு மழை இருக்கு.!
அச்சச்சோ.. தீக்குளித்த நபர்.. நாடாளுமன்றம் நோக்கி ஓடியதால் பரபரப்பு!
அச்சச்சோ.. தீக்குளித்த நபர்.. நாடாளுமன்றம் நோக்கி ஓடியதால் பரபரப்பு!
"வேதனையா இருக்கு" அண்ணா பல்கலை. மாணவி விவகாரம்.. கொதித்தெழுந்த விஜய்!
Chennai Rain: சென்னையா, கொடைக்கானலா.!  எங்கு பார்த்தாலும் மழைச்சாரலும் பனிமூட்டமுமான காட்சிகள்.!
சென்னையா, கொடைக்கானலா.! எங்கு பார்த்தாலும் மழைச்சாரலும் பனிமூட்டமுமான காட்சிகள்.!
விரைவில் கைதாகும் அதிஷி? பாஜகவின் மாஸ்டர் பிளான்.. கொளுத்திப்போட்ட கெஜ்ரிவால்!
விரைவில் கைதாகும் அதிஷி? பாஜகவின் மாஸ்டர் பிளான்.. கொளுத்திப்போட்ட கெஜ்ரிவால்!
Kazakhstan Plane Crash: அய்யய்யோ! தரையில் விழுந்து நொறுங்கிய விமானம் - 72 பேரின் கதி என்ன?
Kazakhstan Plane Crash: அய்யய்யோ! தரையில் விழுந்து நொறுங்கிய விமானம் - 72 பேரின் கதி என்ன?
மகளுக்காக என்ன வேணாலும் பண்ணுவார்! சாண்டா தாத்தாவாக மாறிய தோனி.. முத்தமிட்ட ஸிவா! 
மகளுக்காக என்ன வேணாலும் பண்ணுவார்! சாண்டா தாத்தாவாக மாறிய தோனி.. முத்தமிட்ட ஸிவா! 
’’அடியாள் சிவசங்கர்; இனவெறி திமுக’’ வன்னியர்களுக்கு எதிராக வன்மம்; பாமக கடும் தாக்கு- என்ன காரணம்?
’’அடியாள் சிவசங்கர்; இனவெறி திமுக’’ வன்னியர்களுக்கு எதிராக வன்மம்; பாமக கடும் தாக்கு- என்ன காரணம்?
Embed widget