மேலும் அறிய

Arumugasamy Commission Report: ஜெயலலிதா மரணம் : சசிகலா உட்பட நான்கு பேர் மீது விசாரணைக்கு பரிந்துரை

ஜெயலலிதா - சசிகலா இடையே சுமூக உறவு இல்லை என ஆறுமுகசாமி ஆணைய அறிக்கையில் பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது

2012 ஆம் ஆண்டு, ஜெயலலிதா - சசிகலா மீண்டும் இணைந்த பிறகு அவர்களுக்கிடையே சுமூக உறவு இல்லை என ஆறுமுகசாமி ஆணைய அறிக்கையில் பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.

ஜெயலலிதாவின் மரணத்தில் சசிகலா, விஜயபாஸ்கர், ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்,  சிவகுமார் ஆகியோர் குற்றம் செய்தவர்களாக ஆணையம் முடிவு செய்கிறது.

மேலும், நான்கு பேர் மீது விசாரணை செய்யவும் ஆணையம் பரிந்துரைக்கிறது. மேலும் சசிகலாவை குற்றம் சாட்டுவதை தவிர, வேறு எந்த முடிவுக்கும் வர இயலாது எனவும் ஆணையம் தெரிவித்துள்ளது

அறிக்கை பேரவையில் தாக்கல்

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக, ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணை அறிக்கை பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது.

  • மறைந்த முதல்வர் உடல் பருமன், உயர் இரத்த அழுத்தம், கட்டுப்பாடற்ற நீரிழிவு நோய், ஹைப்போ தைராய்டிசம், நாள்பட்ட வயிற்றுப்போக்குடன் எரிச்சல் கொண்ட குடல் நோய்க்குறி (Irritable Bowel Syndrome with Chronic Diarrhoea) மற்றும் நாள்பட்ட மூச்சுக்குழாய் அழற்சி (Chronic Seasonal Bronchitis)
    ஆகியவற்றால் ஏற்கனவே பாதிக்கப்பட்டிருந்தார் என்பது ஆனையத்திற்கு அளிக்கப்பட்ட சாட்சியங்கள் மற்றும் ஆவணங்களை ஆய்வு செய்ததில் இருந்து அறியப்படுகிறது.
  • மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு முன்னரே மூன்று நாட்களாக அவருக்கு அதிக காய்ச்சல் இருந்ததையும், அதற்காக டாக்டர். சிவகுமாரின் ஆலோசனையின் பேரில் பாராசிட்டமால் மாத்திரைகளை அவர் எடுத்துக் கொண்டார் என்பதையும் ஆணையம் ஏற்கனவே கண்டறிந்துள்ளது.

மயக்கமடைந்த ஜெயலலிதா:

  • மறைந்த முதல்வர் தனது வீட்டின் முதல் மாடியில் உள்ள தனது அறையின் குளியலறையிலிருந்து திரும்பி படுக்கையை அடைந்த போது மயங்கி விழுந்தார். அப்போது அவருடன் அங்கிருந்த வி.கே.சசிகலா உள்ளிட்டோர் அவரைத் தாங்கிப் பிடித்தனர். பின்னர் விரைந்து, ஆம்புலன்ஸ் சேவைக்காக அப்போலோ மருத்துவமனைக்கு உடனடியாகத் தகவலளித்து, ஆம்புலன்சில் வந்த மருத்துவர் மற்றும் துணை மருத்துவப் பணியாளர்கள் உடனடியாக முதல்வருக்கு, மாஸ்க் மூலம் ஆக்சிஜன் வழங்கி முதலுதவி அளித்தனர்.

சுய நினைவு திரும்பியது:

  • மயங்கி விழுந்த முதல்வர் சிறிதும் தாமதிக்காமல் கீழிருந்த ஆம்புலன்சில் அப்போலோ மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டார். முதல்கட்ட நோயறிதலுக்குப் பிறகு, முதல்வர் ICU-வுக்கு மாற்றப்பட்டபோது, ஸ்ட்ரெச்சரில் இருந்த அவருக்கு சுயநினைவு வந்தது. இவ்வாறு, ஆணையம் மறைந்த முதல்வர் மருத்துவமனையில்  அனுமதிக்கப்படுவதற்கு வழிவகுத்த சூழ்நிலைகள் மற்றும் சந்தர்ப்பங்களை சுருக்கமாக அளிக்கிறது. 

மறைந்த முதல்வருடன் புகைப்படம்:

  • 27.09.2016-அன்று காவிரி நதிநீர் கூட்டத்தில் தலைமைச் செயலாளரால் மறைந்த முதல்வருடன் புகைப்படம்
    (வெளியிடப்படுவதற்காக) எடுக்கக் கோரப்பட்டு, மறைந்த முதல்வரால் ஏற்றுக் கொள்ளப்பட்டது. அவர்கள் புகைப்படம் கலைஞருக்காக காத்திருந்தபோது, இராமலிங்கம், ஐ.ஏ.எஸ்., மருத்துவமனையில் புகைப்படம் எடுக்கத் தேவையில்லை எனக் கூறியதாக PSO பெருமாள்சாமி தெரிவித்தார்.
  • 27.09.2016-அன்று இரவு மூச்சுத் திணறல் ஏற்ப்பட்டதன் காரணமாக, அவருக்கு வென்டிலேட்டர் பொருத்தப்பட்டது. மறுநாள் காலை (28.09.2016), TEE பரிசோதனை செய்யப்பட்டதில், முதல்வருக்கு இதயத்தில் இரண்டு வெஜிடேசனும் பெர்ஃபொரேசனும் இருப்பதை கோபாலகிருஷ்ணன் உறுதிப்படுத்தினார்.
  • எய்ம்ஸ் மருத்துவர்கள், தாங்கள் மேற்பார்வையிட மட்டுமே வந்ததாகவும், மருந்து எதுவும் பரிந்துரைக்கவில்லை என்றும் கூறியுள்ளனர்.

அப்போலோ மருத்துவமனை:

  • அதேபோல், அப்போலோ மருத்துவமனையின் தலைவர் டாக்டர்.பிரதாப் சி. சரட்டி, உண்மைகளை தெரிவிப்பதற்கான அதிகாரம் பெற்ற நபராக இருந்தும், செய்தியாளர் சந்திப்பில் மறைந்த முதல்வர் எந்த நேரத்திலும் டிஸ்சார்ஜ் செய்யப்படலாம் என்ற ஒரு பொய்யான அறிக்கையை வெளியிட்டார். இரண்டாவதாக, அவர் தனது அறையில் அடிக்கடி விளக்கக் கூட்டத்தை நடத்திய போதிலும், மறைந்த முதல்வரின் உடல்நலக்குறைவு மற்றும் அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை  குறித்த உண்மை நிலையை வெளிப்படுத்த தவறியதால், இது விசாரிக்கப்பட வேண்டியதாக ஆணையம் கருதுகிறது
  • அப்போலோ மருத்துவமனையால் சிறந்த சிகிச்சை அளிக்கப்படுவதாக கூறப்படுவதை தவிர, வேறு எந்த ஆதாரங்களும் அல்லது ஆவணங்களும் ஆணையத்தின் முன் வைக்கப்படவில்லை.

ஆணையம் எழுப்பியுள்ள கேள்வி:

  •  டாக்டர் ரிச்சர்ட் பீலே மறைந்த முதல்வரை சிகிச்சைக்காக வெளிநாட்டுக்கு அழைத்துச் செல்லத் தயார் என்று கூறியிருந்தும், அது ஏன் நடக்கவில்லை?
  • டாக்டர் சமின் ஷர்மா ஆஞ்சியோ செய்வது பற்றி விளக்கிய பின், அவரும் அதற்கு ஒப்புக்கொண்டார். ஆனால், அது ஏன் நடக்கவில்லை?

பரபரப்பு தகவல்:

  • சாட்சியங்களின் அடிப்படையில், ஜெயலலிதா இறந்தது, 2016 ஆம் ஆண்டு டிசம்பர் 4 ஆம் தேதி மதியம் 3 மணி முதல் 3.50 மணிக்குள் என்று அறிக்கையில் ஆணையம் தெரிவித்துள்ளது. ஆனால், 2016 ஆம் ஆண்டு டிசம்பர் 5 ஆம் தேதி இரவு 11.30 மணிக்கு இறந்ததாக அப்போலோ மருத்துவமனை தெரிவித்திருந்தது. இதன் மூலம் ஜெயலலிதா மரணமானது, ஒரு நாளுக்கு பின்னரே அறிவிக்கப்பட்டதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விசாரணைக்கு பரிந்துரை:
  • நிச்சயமாக, இது ஒரு நபரால் (முக்கியஸ்தரால்) செய்யப்பட்ட மாபெரும் குற்றமாகும்; குறிப்பாக, இது முதல்வரது உயிர் தொடர்பானது என்பதால், அதற்கான விளைவுகளை நிச்சயம் பெறுவார். எனவே, விசாரணைக்கு பரிந்துரைக்கப்படுகிறது.
  • டாக்டர்.Y.V.C. ரெட்டி மற்றும் டாக்டர்.பாபு ஆபிரகாம் மறைந்த முதல்வருக்கு சிகிச்னச அளித்துள்ளனர். அவர்கள் பம்பாய், UK மற்றும் USA மருத்துவர்களை அழைத்து, ஆஞ்சியா/அறுனவ சிகிச்னச செய்வதற்கான கருத்தைப் பெற்றாலும், ஒரு தனிப்பட்ட நபரின் கட்டாயத்தினால், சட்டவிரோதமாக இலக்கை அடைவதற்காக அதை வெற்றிகரமாக செயல்படுத்தினர் எனவே, விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.
  • மறைந்த முதல்வரின் மறைவுக்குப் பிறகு, 11.02.2017 அன்று நடந்த அடுத்தடுத்து நிகழ்வுகளாவன; ஆணையம், மேற்கூறியவற்றை கருத்தில் கொண்டு, சசிகலாவை குற்றம் சாட்டுவதை தவிர, வேறு எந்த முடிவுக்கும் வர இயலாது.
  • மேலும், ஜெயலலிதாவின் மரணத்தில் விஜயபாஸ்கர், ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்,  சிவகுமார் ஆகியோர் குற்றம் செய்தவர்களாக ஆணையம் முடிவு செய்கிறது. இதையடுத்து, நான்கு பேர் மீதும் விசாரணை செய்ய ஆணையம் பரிந்துரைக்கிறது. 
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Modi Putin Meet: கூடங்குளத்தில் மிகப்பெரிய அணுமின் நிலையம் உருவாக்க உதவும் ரஷ்யா; மோடி-புதின் பேசியது என்ன.?
கூடங்குளத்தில் மிகப்பெரிய அணுமின் நிலையம் உருவாக்க உதவும் ரஷ்யா; மோடி-புதின் பேசியது என்ன.?
Udhayanidhi Stalin: ''இது திராவிட மண், தமிழ் மண், குழப்பம் ஏற்படுத்த நினைத்தால் முடியாது“; பாஜகவுக்கு உதயநிதி பதிலடி
''இது திராவிட மண், தமிழ் மண், குழப்பம் ஏற்படுத்த நினைத்தால் முடியாது“; பாஜகவுக்கு உதயநிதி பதிலடி
Kanimozhi Slams BJP: ''திருப்பரங்குன்றத்தை மற்றொரு அயோத்தியாவாக மாற்ற நினைக்கிறார்கள்''; பாஜகவை சாடிய கனிமொழி
''திருப்பரங்குன்றத்தை மற்றொரு அயோத்தியாவாக மாற்ற நினைக்கிறார்கள்''; பாஜகவை சாடிய கனிமொழி
Pookie முதல் Cease Fire வரை.. 2025 இல் 2K கிட்ஸ் கூகுளில் தேடிய அதிக அர்த்தங்கள் எது தெரியுமா?
Pookie முதல் Cease Fire வரை.. 2025 இல் 2K கிட்ஸ் கூகுளில் தேடிய அதிக அர்த்தங்கள் எது தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Madurai Loganathan IPS Profile | ‘’WE ARE NOT ALLOWING’’ஒற்றை ஆளாக சம்பவம்! யார் இந்த லோகநாதன் IPS?
தமிழ்நாடு வரும் அமித்ஷா திருப்பரங்குன்றம் விவகாரம் கையிலெடுக்கும் பாஜக | Amitsha in Tamilnadu
ஆதவ் Vs ஜோஸ் சார்லஸ் கட்சி தொடங்கும் முன்னே சரிவு விஜய்யுடன் கூட்டணிக்கு END CARD | Aadhav Vs Joes Charles
Thiruparankundram Dheepam|”இன்னும் சில நிமிடங்களில் தீபம்”144 ரத்து போய் பாதுகாப்பு குடுங்க!-நீதிபதி
எகிறும் டாலர்.. சரியும் ரூபாய்.. என்ன பண்ண போறீங்க நிர்மலா? | Modi | Rupees VS Dollar

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Modi Putin Meet: கூடங்குளத்தில் மிகப்பெரிய அணுமின் நிலையம் உருவாக்க உதவும் ரஷ்யா; மோடி-புதின் பேசியது என்ன.?
கூடங்குளத்தில் மிகப்பெரிய அணுமின் நிலையம் உருவாக்க உதவும் ரஷ்யா; மோடி-புதின் பேசியது என்ன.?
Udhayanidhi Stalin: ''இது திராவிட மண், தமிழ் மண், குழப்பம் ஏற்படுத்த நினைத்தால் முடியாது“; பாஜகவுக்கு உதயநிதி பதிலடி
''இது திராவிட மண், தமிழ் மண், குழப்பம் ஏற்படுத்த நினைத்தால் முடியாது“; பாஜகவுக்கு உதயநிதி பதிலடி
Kanimozhi Slams BJP: ''திருப்பரங்குன்றத்தை மற்றொரு அயோத்தியாவாக மாற்ற நினைக்கிறார்கள்''; பாஜகவை சாடிய கனிமொழி
''திருப்பரங்குன்றத்தை மற்றொரு அயோத்தியாவாக மாற்ற நினைக்கிறார்கள்''; பாஜகவை சாடிய கனிமொழி
Pookie முதல் Cease Fire வரை.. 2025 இல் 2K கிட்ஸ் கூகுளில் தேடிய அதிக அர்த்தங்கள் எது தெரியுமா?
Pookie முதல் Cease Fire வரை.. 2025 இல் 2K கிட்ஸ் கூகுளில் தேடிய அதிக அர்த்தங்கள் எது தெரியுமா?
SIR: திரும்ப வராத SIR படிவம்.. தமிழ்நாட்டில் 85 லட்சம் வாக்காளர்கள் நீக்கமா?
SIR: திரும்ப வராத SIR படிவம்.. தமிழ்நாட்டில் 85 லட்சம் வாக்காளர்கள் நீக்கமா?
DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
திருப்பரங்குன்றம் போராட்டம்: பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், எச்.ராஜா உட்பட 113 பேர் மீது வழக்கு!
திருப்பரங்குன்றம் போராட்டம்: பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், எச்.ராஜா உட்பட 113 பேர் மீது வழக்கு!
1 லட்சம் பெண்களுக்கு ரூ.10 லட்சம் கடன் - தமிழக அரசு அதிரடி !! விண்ணப்பிக்க குவிந்த பெண்கள்
1 லட்சம் பெண்களுக்கு ரூ.10 லட்சம் கடன் - தமிழக அரசு அதிரடி !! விண்ணப்பிக்க குவிந்த பெண்கள்
Embed widget