Orange Alert : தமிழ்நாட்டில் 3 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்; எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா?
தமிழ்நாட்டில் 3 மாவட்டங்களுக்கு, கன மழை பெய்ய வாய்ப்புள்ளதால் வானிலை மையம் ஆர்ஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது
ஆர்ஞ்சு அலர்ட்:
தம்ழிநாட்டில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக 3 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து தேனி, திண்டுக்கல் மற்றும் திருப்பூர் ஆகிய 3 மாவட்டங்களில் மிக கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
— Tamilnadu Weather-IMD (@ChennaiRmc) August 3, 2022
மேலும் கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல் மற்றும் திருப்பூர் ஆகிய 5 மாவட்டங்களுக்கு நாளை ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு:
இந்நிலையில் நீலகிரி, கோவை, விருதுநகர், நாமக்கல்,மதுரை, ஈரோடு, சேலம், தர்மபுரி, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தென்காசி, நெல்லை, ஆகிய 7 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அடுத்த ஏழு தினங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு - சென்னை pic.twitter.com/MSKaSi0VW2
— Tamilnadu Weather-IMD (@ChennaiRmc) August 3, 2022
இந்நிலையில் பல்வேறு இடங்களில் கன மழை பெய்து வருவதால் அருவிகள் மற்றும் ஆறுகளில் நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்துவரும் தொடர் மழை காரணமாக குற்றால மெயின் அருவி, புலியருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் உள்ளிட்ட அருவிகளில் மூன்றாவது நாளாக ஆர்பரித்து வரும் வெள்ளப்பெருக்கு... pic.twitter.com/BUaN8n6IjI
— AIR News Chennai (@airnews_Chennai) August 3, 2022
கிருஷ்ணகிரி மாவட்டம் கொளதாசபுரம் பஞ்சாயத்து ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் இன்றைய நிலை! வானிலை அறிக்கைகள் அறிந்து பலத்த மழை இருந்தால் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து குழந்தைகளுக்கு ஆபத்து ஏற்படும் முன்னர் பள்ளிக் கல்வித் துறை @Anbil_Mahesh தடுத்து இருக்கலாம், @AIADMKOfficial pic.twitter.com/iUggIag056
— Velmurugan AVM (@Velmurugan_AVM) August 3, 2022
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்