TN Legislative Assembly LIVE: இல்லாதது பொல்லாததை சொல்லாதீங்க; ஆதாரத்தை நான் காட்டவா? - இபிஎஸ் மீது முதலமைச்சர் சாடல்
இன்று கூடிய தமிழ்நாடு மழைக்கால சட்டப்பேரவை கூட்டத்தில் காவிரி விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் தீர்மானத்தை நிறைவேற்ற உள்ளார்.
LIVE

Background
துணிச்சலை பற்றி நீங்க சொல்லாதீங்க - முதல்வர் ஸ்டாலின்
காவிரி விவகாரத்தில் மத்திய அரசு மீது அவதூறு வழக்கு தொடுத்தோம் அந்த துணிச்சல் எங்களுக்கு இருந்தது ? ஏன் உங்களுக்கு இல்லை ? - எடப்பாடி பழனிசாமி
துணிச்சலை பற்றி எதிர்க்கட்சித் தலைவர் எங்களுக்கு சொல்லத் தேவையில்லை. அது என்ன துணிச்சல் என்பது எங்களுக்கு தெரியும் - முதல்வர் ஸ்டாலின்
அறியாமையின் வெளிப்பாடு - துரைமுருகன்
காவிரி நீர் விவகாரத்தில் கர்நாடக அரசிடம் பேச வேண்டும் என்று சொல்வது தற்கொலைக்கு சமம் ; அறியாமையின் வெளிப்பாடு
எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் துரைமுருகன் பதில்
பின்னர் ஏன் கூட்டணி வைத்துக்கொண்டு இருக்கின்றீர்கள் : எடப்பாடி பழனிசாமி
இபிஎஸ் குற்றச்சாட்டுக்கு முதல்வர் ஸ்டாலின் பதில்
காவிரி விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் ஏன் பேசவில்லை என்று எதிர்க்கட்சி தலைவர் இபிஎஸ் கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதிலளித்து பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், ஆதாரம் இல்லாமல் பொத்தாம் பொதுவாக எதுவேண்டுமானாலும் பேசலாம் என்று பேசக்கூடாது. இதுதான் எதிர்க்கட்சி தலைவருக்கு மரபா? ஆதாரத்தை நான் காட்டாவா? நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்தற்கான ஆதாரம் எங்களிடம் உள்ளது” எனத் தெரிவித்தார்.
இதற்கு பதிலளித்த இபிஎஸ் “அழுத்தத்தை கொடுக்க வேண்டும். அதை சொல்லக்கூடாதா? அதற்கு எங்களுக்கு உரிமை இல்லையா?” என்று கேள்வி எழுப்பினார்.
பதிலளித்த முதலமைச்சர் ஸ்டாலின், “அனைவரும் அனைத்து உரிமையும் உண்டு. தவறான தகவலை இங்கு பதிவிடக்கூடாது. அதற்குதான் பதிலளித்தேன். இவ்வளவு நேரம் நான் அமைதியாகத்தான் இருந்தேன்” எனத் தெரிவித்தார்.
தனித்தீர்மானம் மீது எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி உரை
காவிரி விவகாரம் தொடர்பாக முதலமைச்சரின் தனித்தீர்மானம் மீது எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.
”உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பை கர்நாடக அரசு ஏன் அமல்படுத்தவில்லை. கர்நாடகாவில் நடந்த இண்டியா கூட்டணி கூட்டத்தின் போது காவிரி குறித்து முதல்வர் பேசி இருக்கலாம்” எனத் தெரிவித்தார்.
இரட்டை நிலையை வைத்துக்கொண்டு இந்த தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது - வானதி சீனவாசன்
காவிரி விவகாரம்: தனி தீர்மானத்தின் மீது பேசிய பாஜக உறுப்பினர் வானதி ஸ்ரீனிவாசன், “ இந்த விவகாரத்தில் யார் மீது தவறு என்று சொல்ல ஆரம்பித்தால் காலம் எடுக்கும். விவசாயிகள் நலனை முன்னெடுத்து சட்டரீதியான அனைத்து நடவடிக்கையும் எடுத்தது பாஜக அரசு .கர்நாடக மாநில அரசு மீதான எந்த விமர்சனம் இல்லாமல் மத்திய அரசு மீதான விமர்சனத்தை கொண்டு வருவது ஏன்? இரட்டை நிலையை வைத்துக்கொண்டு இந்த தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது. விவசாயி நலன் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதில் மாற்று கருத்து பாஜகவுக்கு இல்லை. காவிரி விவகாரத்தில் பிட்டு பிட்டாக தீர்வு காண முடியாது” என கூறியுள்ளார். அதானை தொடர்ந்து பாஜக வெளிநடப்பு செய்தது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

