மேலும் அறிய

“ஏன் நிலவுக்கு ராக்கெட் அனுப்புகிறோம்; பயன்தான் என்ன?” - இளைஞர்களுக்கு இஸ்ரோ விஞ்ஞானி வீர முத்துவேல் விளக்கம்

மனிதா்களை விண்வெளி சுற்றுலாவுக்கு அழைத்து செல்ல ஆராய்ச்சி நடக்கிறது என சந்திரயான்-3 திட்ட இயக்குனர் வீரமுத்துவேல் தெரிவித்தார்.

திருச்சி துவாக்குடியில் உள்ள தேசிய தொழில்நுட்ப கல்லூரியில் (என்.ஐ.டி.) சந்திரயான் திட்டம் பற்றி மாணவர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு என்.ஐ.டி. இயக்குனர் அகிலா தலைமை தாங்கினார். இதில், சிறப்பு விருந்தினராக தமிழகத்தை சேர்ந்த இஸ்ரோ விஞ்ஞானியும், சந்திரயான்-3 திட்ட இயக்குனருமான வீரமுத்துவேல் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது, “அடிப்படையில் விண்வெளி ஆராய்ச்சிகள் நாம் உள்ள பால்வெளி மண்டலம், கோள்கள், நட்சத்திரங்கள் போன்றவை தோன்றிய விதம் குறித்து நாம் இன்றும் தேடிக்கொண்டு தான் இருக்கிறோம். விண்வெளி ஆராய்ச்சிகளுக்கு நம் அருகில் இருக்கும் துணைக்கோளான நிலவு முதன்மையாகும். ஏனென்றால் பிற கோள்களுக்கு செல்லும் நுழைவு வாயிலாக நிலவு உள்ளது. பூமியில் இருந்து விண்ணுக்கு ராக்கெட் அனுப்புவதை விட நிலவில் இருந்து விண்வெளி ஆராய்ச்சியில் ஈடுபட்டால் ராக்கெட்டுக்கு தேவையான எரிபொருளின் அளவை குறைக்க முடியும். மேலும் தேவையான எரிபொருளை நிலவில் இருக்கும் தண்ணீர் மூலம் எரிபொருளாக மாற்றும் தொழில்நுட்பம் குறித்து ஆராய்ச்சிகள் நடந்து கொண்டு தான் இருக்கிறது. மேலும் வருங்காலங்களில் மனிதா்களை விண்வெளி சுற்றுலாவுக்கு அழைத்து செல்லும் வகையில் தொடர்ந்து விண்வெளி ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. நிலவின் தென் துருவத்தில் ஏராளமான கனிமங்கள் இருப்பதால் அதில் தரைஇறங்கிய முதல் நாடாக சாதனை படைத்துள்ளோம்.

“ஏன் நிலவுக்கு ராக்கெட் அனுப்புகிறோம்; பயன்தான் என்ன?” - இளைஞர்களுக்கு இஸ்ரோ விஞ்ஞானி வீர முத்துவேல் விளக்கம்

மேலும் வளா்ந்த நாடுகளான அமெரிக்கா 3 முறையும், ரஷ்யா 11 முறையும் நிலவை அடையும் முயற்சியில் தோல்வி கண்டன. இந்தநிலையில் நாம் 2-வது முயற்சியிலேயே வெற்றி கண்டுள்ளோம் என்பது பெருமைக்குரிய விஷயம். சந்திரயான்-3 ரோவர், தரையிறங்கும் முன் நிறைய சவால்களை சந்தித்தது. நிலவில் உள்ள ஈர்ப்பு விசையின் குறைவு, குறைந்த வெப்பநிலை போன்றவை நிலவில் தரையிறங்க சவால்களாக இருந்தன. இருப்பினும் சந்திரயான்-2 திட்டத்தின் மூலம் பாடம் கற்றுக்கொண்டு தவறுகளை சரிசெய்து விஞ்ஞானிகள் குழு அதற்காக கடும் முயற்சிகளை மேற்கொண்டனா். சந்திரயான்-3 ரோவர் ஒத்திகையில் திருச்சி என்.ஐ.டி.யின் பங்கும் உள்ளது என தெரிவித்தார். மேலும் சந்திராயன்-3 வெற்றி தனி மனித வெற்றியல்ல. இது நாட்டின் பெருமை. இஸ்ரோ அமைப்புக்கு வெளியேயும் கடின உழைப்பு இருந்தது. பல கட்ட தேர்வுகளுக்கு பிறகே வெற்றி அமைந்தது. அர்ப்பணிப்பும், ஈடுபாடும், புதுமை சிந்தனையும், முறையான தொழில்நுட்ப பயன்பாடும் நமது வெற்றியின் காரணங்கள்” என்றார்.

இதையடுத்து, விஞ்ஞானி சங்கரன் பேசுகையில், ”சந்திராயன் வெற்றியில் 1,000 அறிவியலாளர்கள் பணிபுரிந்தனர். அதன் தலைவராக, வழிநடத்துனராக வீரமுத்துவேல் பணியாற்றினார். ஒரு வகையினர் கடின உடல் உழைப்பை தருபவர்கள். இரண்டாம் வகையினர் மூளையை அதிகம் பயன்படுத்துபவர்கள். இது இரண்டும் இணைந்தால் தான் வெற்றி. வானம் பெரியது என்றாலும் மூளையின் செயல்பாடுகள்தான் முக்கியம். மூளை நமது மிகப்பெரிய ஆயுதம். அதுவே நம்மை வெற்றிப்பாதைக்கு கொண்டு செல்லும்” என்றார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

Trichy Traffic Diversion: திணறப்போகும் திருச்சி... திமுக மாநில மாநாடு.. நாளை போக்குவரத்து மாற்றம்!
Trichy Traffic Diversion: திணறப்போகும் திருச்சி... திமுக மாநில மாநாடு.. நாளை போக்குவரத்து மாற்றம்!
தென் மாவட்ட மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி.. பிரதமர் மோடி புதுப்பிக்கப்பட்ட ரயில் நிலையங்களை திறந்து வைக்கிறார் !
தென் மாவட்ட மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி.. பிரதமர் மோடி புதுப்பிக்கப்பட்ட ரயில் நிலையங்களை திறந்து வைக்கிறார் !
விஜயின் அஜெண்டா இதுதான்... திமுகவை ஏன் எதிர்க்கிறார்? - திருமாவளவன் காட்டமான கேள்வி
விஜயின் அஜெண்டா இதுதான்... திமுகவை ஏன் எதிர்க்கிறார்? - திருமாவளவன் காட்டமான கேள்வி
Trichy power cut : 10 நாளுக்கு பின் திருச்சியில் நாளை(21-02-2026) மின் தடை! எந்தெந்த இடங்களில்.. முழு லிஸ்ட் இதோ
Trichy power cut : 10 நாளுக்கு பின் திருச்சியில் நாளை(21-02-2026) மின் தடை! எந்தெந்த இடங்களில்.. முழு லிஸ்ட் இதோ
ABP Premium

வீடியோ

கிருத்திகா போட்ட ட்வீட்
Sekar Babu angry | வேலை செய்யாத LIFT! முகம் மாறிய சேகர் பாபு! திட்டிய கோவி செழியன்
Parthiban Trisha | பொளந்தெடுத்த த்ரிஷா! ஆடியோ வெளியிட்ட பார்த்திபன்! ”பெண்ணே ஆகப்பெரும் சக்தி”
Trisha vs Parthiban | ”உங்க தரம் தெரிஞ்சிருச்சு! இதெல்லாம் JOKE-ஆ” பார்த்திபனை பொளந்த த்ரிஷா
ஜனநாயகன் ரிலீஸ் தேதி ரசிகர்களுக்கு GOOD NEWS குறுக்க இந்த தேர்தல் வந்தா...

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Cylinder Issue Hotels Closed: என்னது, இன்னைல இருந்து ஹோட்டல்கள் இயங்காதா.?! சிலிண்டர் தட்டுப்பாடால் உரிமையாளர்கள் அதிரடி.!
என்னது, இன்னைல இருந்து ஹோட்டல்கள் இயங்காதா.?! சிலிண்டர் தட்டுப்பாடால் உரிமையாளர்கள் அதிரடி.!
Trump Furious Warning: “மரணம், நெருப்பு, ஆக்ரோஷம்.! 20 மடங்கு கடுமையா தாக்குவோம்“; ஈரானுக்கு ட்ரம்ப் பயங்கர எச்சரிக்கை
“மரணம், நெருப்பு, ஆக்ரோஷம்.! 20 மடங்கு கடுமையா தாக்குவோம்“; ஈரானுக்கு ட்ரம்ப் பயங்கர எச்சரிக்கை
Senthil Balaji: விஜயை விடுங்க..! சைலண்டா செந்தில் பாலாஜிக்கு ஸ்கெட்ச் போடும் சிபிஐ - டீம் போட்டு ஆலோசனை
Senthil Balaji: விஜயை விடுங்க..! சைலண்டா செந்தில் பாலாஜிக்கு ஸ்கெட்ச் போடும் சிபிஐ - டீம் போட்டு ஆலோசனை
TVK Vijay: விஜய்க்கு லீவு கொடுத்த சிபிஐ..! சாஃப்ட் டீலிங்கிற்கு ஒகே சொன்ன தவெக? டெல்லிக்கு முக்கிய கோரிக்கை
TVK Vijay: விஜய்க்கு லீவு கொடுத்த சிபிஐ..! சாஃப்ட் டீலிங்கிற்கு ஒகே சொன்ன தவெக? டெல்லிக்கு முக்கிய கோரிக்கை
Gas Cylinder: அடுத்த ஆப்பு..! கேஸ் சிலிண்டர் புக் செய்ய புதிய கட்டுப்பாடுகள், விதிகள் என்ன? மத்திய அரசு அறிவிப்பு
Gas Cylinder: அடுத்த ஆப்பு..! கேஸ் சிலிண்டர் புக் செய்ய புதிய கட்டுப்பாடுகள், விதிகள் என்ன? மத்திய அரசு அறிவிப்பு
TVK Candidate List: 2 தொகுதிகளில் விஜய் போட்டியா? தவெக தலைவர்கள் களமிறங்கும் இடங்கள் இதானா?
TVK Candidate List: 2 தொகுதிகளில் விஜய் போட்டியா? தவெக தலைவர்கள் களமிறங்கும் இடங்கள் இதானா?
LPG Gas Bengaluru: கேஸ் தட்டுப்பாடு: முடங்கும் உணவகங்கள்! கர்நாடகாவைத் தொடர்ந்து தமிழகத்திற்கும் ஆபத்தா?
LPG Gas Bengaluru: கேஸ் தட்டுப்பாடு: முடங்கும் உணவகங்கள்! கர்நாடகாவைத் தொடர்ந்து தமிழகத்திற்கும் ஆபத்தா?
Bike Taxi Ban: ஓலா, உபர், ராபிடோ பைக் டாக்சி சேவைக்கு தடை! அரசின் அதிரடி முடிவு! காரணம் என்ன?
Bike Taxi Ban: ஓலா, உபர், ராபிடோ பைக் டாக்சி சேவைக்கு தடை! அரசின் அதிரடி முடிவு! காரணம் என்ன?
Embed widget