மேலும் அறிய

Mayiladuthurai: ராகு - கேது பெயர்ச்சி; புகழ்பெற்ற கோடங்குடி கார்கோடகநாதர் சுவாமி கோயிலில் குவிந்த பக்தர்கள்

மயிலாடுதுறை அருகே ராகு-கேது பரிகார ஸ்தலமான கோடங்குடி கார்கோடகநாதர் சுவாமி கோயிலில் நடைபெற்ற ராகு கேது பெயர்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபாடு செய்தனர்.

நவ கிரகங்களில் ராகுவும் கேதுவும் மிக வலிமையான கிரகங்கள். குரு பெயர்ச்சி, சனி பெயர்ச்சி போல ராகு கேதுவிற்கும் முக்கியத்துவம் தருகின்றனர். நவகிரகங்களில் சாயா கிரகங்கள் (நிழல் கிரகங்கள்) என்று அழைக்கப்படுபவை ராகுவும், கேதுவும் ஆகும். ராசிக்கட்டங்கள் 12- ல் மற்ற கிரகங்கள், நகரும் திசைக்கு எதிர் திசையில் இவை நகர்கின்றன.

ராகு - கேது பெயர்ச்சி:

ஜோதிட ரீதியாக ராகு யோகக்காரகன் என்றும், கேது ஞானக்காரகன் என்றும் அழைக்கப்படுகின்றன. ஒன்றரை ஆண்டுகள் ஒரு ராசியில் சஞ்சாரம் செய்யும் ராகு கேதுக்கள், ராசி மண்டலத்தில் நேர் எதிர் திசையில் சுற்றி வருகின்றன.


Mayiladuthurai: ராகு - கேது பெயர்ச்சி; புகழ்பெற்ற கோடங்குடி கார்கோடகநாதர் சுவாமி கோயிலில் குவிந்த பக்தர்கள்

சிறப்பு வழிபாடு:

ஒரு ராசிக்கு 3,6,11 ஆகிய இடங்களில் ராகு, கேதுக்கள் இருந்தால் நன்மை செய்யும் என்பது ஜோதிட ரீதியான காரணமாகும். அந்த வகையில் ராகு கேது பெயர்ச்சி இன்று நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து ராகு பகவான் மேஷ ராசியில் இருந்து மீனம் ராசிக்கு இடப்பெயர்ச்சிக்கும், கேது பகவான் துலாம் ராசியில் இருந்து கன்னி ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைந்தனர். இதனைத் தொடர்ந்து மயிலாடுதுறை மாவட்டத்தில் பல்வேறு சிவாலயங்களிலும் நவகிரக சன்னதிகளில் ராகு கேது பெயர்ச்சி விழா நடைபெற்றது.

ODI World Cup 2023: தொடக்க வீரர்கள் டக்-அவுட்; 40 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா மோசமான சாதனை - ரசிகர்கள் அதிர்ச்சி!


Mayiladuthurai: ராகு - கேது பெயர்ச்சி; புகழ்பெற்ற கோடங்குடி கார்கோடகநாதர் சுவாமி கோயிலில் குவிந்த பக்தர்கள்

கோடங்குடி கோயில்:

அதன் ஒன்றாக மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அருகே ராகு - கேது பரிகார ஸ்தலமான கோடங்குடி பழமையான பிரசித்தி பெற்ற கார்கோடகநாதர் சுவாமி திருக்கோயிலில் அமைந்துள்ளது. இக்கோயில், முற்காலத்தில் சப்தம் மற்றும் அஷ்ட நாகங்களில் ஒன்றான ராஜநாகமான கார்கோடகன் தனக்கு ஏற்பட்ட சாபம் நீங்க சிவபெருமானை பூஜித்து பாபவிமோசனம் பெற்ற தலம் என்பதால், இத்தலம் கார்க்கோடகன்குடி என்று வழங்கப்பட்டு, பின்னர் மருவி தற்போது கோடங்குடி என அழைக்கப்படுகிறது. மேலும் 1951 -ஆம் ஆண்டு காஞ்சி பெரியவர் வந்து வழிபட்ட சிறப்புக்குரிய தலமாகும்.  

Leo Third Single: ‘லியோ’ படத்தின் ரொமான்டிக் பாடல்... நாளை வெளியாகும் மூன்றாவது சிங்கிள்?


Mayiladuthurai: ராகு - கேது பெயர்ச்சி; புகழ்பெற்ற கோடங்குடி கார்கோடகநாதர் சுவாமி கோயிலில் குவிந்த பக்தர்கள்

இத்தகைய பல்வேறு சிறப்பு இவ்வாலயத்தில் இன்று ராகு கேது பெயர்ச்சி வெகு விமர்சையாக நடைபெற்றது.  இன்று மதியம் ராகு பகவான் மேஷ ராசியில் இருந்து மீன ராசிக்கும்,கேது பகவான் துலாம் ராசியிலிருந்து கன்னி ராசிக்கும் பெயர்ச்சி அடைந்துள்ளதை முன்னிட்டு கார்கோடகநாதர் சுவாமி ஆலயத்தில் சிறப்பு ஹோமம் பூரணாகுதி நடைபெற்றது. தொடர்ந்து கார்கோடகநாதருக்கு  சிவ கைலாய வாத்தியங்கள் முழங்க சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு  மகாதீபாராதனை நடைபெற்றது. இதில் மயிலாடுதுறை சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அர்ச்சனை செய்து வழிபாடு நடத்தினர். தொடர்ந்து பக்தர்களுக்கு  பிரசாதங்கள் வழங்கப்பட்டது.

Jigarthanda First Single: மதுரையை வைத்து இன்னொரு சம்பவம்.. நாளை வெளியாகும் ஜிகர்தண்டா டபுள் X முதல் பாடல்!

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More

தலைப்பு செய்திகள்

ஏன் பெருமாளை
ஏன் பெருமாளை "மலையப்பர்" என்று அழைக்கிறார்கள்? ஏழுமலைகள் சொல்லும் ஆன்மிக ரகசியம்!
மயில் வடிவில் அம்பாள் பூஜித்த தலம்... கருவறையில் கமழ்ந்த 108 மூலிகை நறுமணம்: மயூரநாதர் ஆலய அற்புதம்!
மயில் வடிவில் அம்பாள் பூஜித்த தலம்... கருவறையில் கமழ்ந்த 108 மூலிகை நறுமணம்: மயூரநாதர் ஆலய அற்புதம்!
மாங்கனி மழையில் நனைந்த காரைக்கால் வீதிகள்: பிச்சாண்டவர் வீதியுலாவில் திரண்ட பக்தி வெள்ளம்!
மாங்கனி மழையில் நனைந்த காரைக்கால் வீதிகள்: பிச்சாண்டவர் வீதியுலாவில் திரண்ட பக்தி வெள்ளம்!
திருவையாறு ஐயாறப்பர் கோயிலின் வியப்பூட்டும் வரலாற்றுச் சிறப்புகள்!
திருவையாறு ஐயாறப்பர் கோயிலின் வியப்பூட்டும் வரலாற்றுச் சிறப்புகள்!

வீடியோ

TVK Reels Viral Video : எம்.எல்.ஏ CHAIR-ல் தவெகவினர்! தொடரும் ரீல்ஸ் அட்டூழியம்.. வைரல் வீடியோ
CV Shanmugam Next Move | பதவி கொடுக்காத EPS அப்செட்டில் சி.வி.சண்முகம் அடுத்தது என்ன?
Mumbai Local Train Murder ஓடும் ரயிலில் கொடூர கொலை வேடிக்கை பார்த்த பயணிகள் வெளியான அதிர்ச்சி வீடியோ
CM Vijay |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ADMK MLA JOIN TVK : அடுத்து பதவி விலக காத்திருக்கும் அதிமுக எம்எல்ஏக்கள் யார்.? இவ்வளவு பெரிய லிஸ்டா.!! இபிஎஸ் ஷாக்- விஜய் குஷி
அடுத்து பதவி விலக காத்திருக்கும் அதிமுக எம்எல்ஏக்கள் யார்.? இவ்வளவு பெரிய லிஸ்டா.!! இபிஎஸ் ஷாக்- விஜய் குஷி
CM Vijay: ”ஆளுங்கட்சின்னு பாக்காதிங்க, தவெகவினரை கூட தூக்குங்க” - அதிகாரிகளுக்கு விஜய் கண்டிப்பு
”ஆளுங்கட்சின்னு பாக்காதிங்க, தவெகவினரை கூட தூக்குங்க” - அதிகாரிகளுக்கு விஜய் கண்டிப்பு
Ramadoss vs Arul : இணைந்த அப்பா- மகன்.! ராமதாஸை நம்பியதால் பல கோடியை இழந்துட்டோம்- கதறும் பாமக அருள்
இணைந்த அப்பா- மகன்.! ராமதாஸை நம்பியதால் பல கோடியை இழந்துட்டோம்- கதறும் பாமக அருள்
TN Weather Update: தமிழ்நாட்டின் எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? வானிலை அறிக்கை
தமிழ்நாட்டின் எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? வானிலை அறிக்கை
Financial Changes: ஆதார் தொடங்கி பாஸ்போர்ட் வரை - ஜுலை 1 முதல் எகிறப்போகும் செலவுகள் - மாற்றங்கள் என்ன?
ஆதார் தொடங்கி பாஸ்போர்ட் வரை - ஜுலை 1 முதல் எகிறப்போகும் செலவுகள் - மாற்றங்கள் என்ன?
MK STALIN : ஜூலை 5ஆம் தேதி லண்டனுக்கு பறக்கும் மு.க.ஸ்டாலின்.! இது தான் காரணமா.?
ஜூலை 5ஆம் தேதி லண்டனுக்கு பறக்கும் மு.க.ஸ்டாலின்.! இது தான் காரணமா.?
Gold and silver rate today : அடி தூள்.! ஒரே நாளில் சவரனுக்கு 2,160 ரூபாய் சரிந்தது.! வெள்ளி விலையும் குறைந்தது- இன்றைய விலை என்ன.?
அடி தூள்.! ஒரே நாளில் சவரனுக்கு 2,160 ரூபாய் சரிந்தது.! வெள்ளி விலையும் குறைந்தது- இன்றைய விலை என்ன.?
VAIKO MDMK : அய்யோ.. நான் அப்படி சொல்லவே இல்லை.. ஒரே நாளில் பல்டி அடித்த வைகோ - நடந்தது என்ன.?
அய்யோ.. நான் அப்படி சொல்லவே இல்லை.. ஒரே நாளில் பல்டி அடித்த வைகோ - நடந்தது என்ன.?
Embed widget