TN Headlines Today: சேலத்திலிருந்து விரைவில் விமான சேவை - வெப்பம் அதிகரிக்கும் - முக்கியச் செய்திகள்!
TN Headlines Today: தமிழ்நாட்டில் இன்று இதுவரை நடந்த முக்கிய நிகழ்வுகளின் செய்திகளின் தொகுப்பை இங்கே காணலாம்.
சேலம் விமான நிலையம்
சேலம் மாவட்டம் ஓமலூரில் உள்ள சேலம் விமான நிலையத்தில் விமான போக்குவரத்து கடந்த இரண்டு ஆண்டுகளாக நிறுத்தப்பட்டுள்ளது. கடந்த மூன்று ஆண்டுகள் ட்ரூஜெட் விமான நிறுவனத்தின் சார்பில் சேலம் சென்னை, சென்னை சேலம் விமான போக்குவரத்து தினமும் ஒருவேளை மட்டும் இருந்தது. அதன்பிறகு இரண்டு ஆண்டுகளாக போக்குவரத்து நிறுத்தப்பட்டு இருந்தது. மத்திய அரசின் உதான் திட்டத்தில் சேலம் விமான நிலையத்திற்கு அனுமதி வழங்காமல் இருந்தது. அதனால், சேலத்தில் இருந்து விமான போக்குவரத்து நிறுத்தப்பட்டது. சேலம் மாவட்டம் ஓமலூரில் உள்ள சேலம் விமான நிலையத்தில் விமான போக்குவரத்து கடந்த இரண்டு ஆண்டுகளாக நிறுத்தப்பட்டுள்ளது. கடந்த மூன்று ஆண்டுகள் ட்ரூஜெட் விமான நிறுவனத்தின் சார்பில் சேலம் சென்னை, சென்னை சேலம் விமான போக்குவரத்து தினமும் ஒருவேளை மட்டும் இருந்தது. அதன்பிறகு இரண்டு ஆண்டுகளாக போக்குவரத்து நிறுத்தப்பட்டு இருந்தது. மத்திய அரசின் உதான் திட்டத்தில் சேலம் விமான நிலையத்திற்கு அனுமதி வழங்காமல் இருந்தது. அதனால், சேலத்தில் இருந்து விமான போக்குவரத்து நிறுத்தப்பட்டது. மேலும் வாசிக்க..
ரயில் சேவை பாதிப்பு, 5 மணி நேரம் தாமதம்
திருச்சியில் ரயில் தண்டவாளங்கள் பராமரிப்பு பணி காரணமாக தென் மாவட்டங்களில் இருந்து சென்னை வரும் ரயில்கள் அனைத்தும் 5 மணி நேரம் தாமதமாக இயக்கப்படுகின்றன.திருச்சி ரயில்வே கோட்டத்தில் நடைபெற்று வரும் பராமரிப்பு பணிகள் காரணமாக ரயில்கள் தாமதமாக இயக்கப்பட்டு வருகின்றன. இதனால், பாண்டியன், நெல்லை, பொதிகை உள்ளிட்ட விரைவு ரயில்கள் 5 மணி நேரம் தாமதமாக இயக்கப்படுகின்றன. சென்னையில் இருந்து தென்மாவட்டங்களுக்கும், தென் மாவட்டங்களில் இருந்து சென்னைக்கும் இயக்கப்படும் ரயில்கள் தாமதமாகி உள்ளன. திருச்சி சந்திப்பு ரயில் நிலையத்துக்குள் தண்டவாள பராமரிப்பு காரணமாக ஒவ்வொரு ரயிலாக அனுமதிக்கப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இரு மார்க்கத்திலும் ரயில் சேவை தாமதமாகி உள்ள காரணத்தால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகின்றனர். மேலும் வாசிக்க..
கலசபாக்கம் அருகே ஆக்கிரமிப்பு வீடுகளை இடிக்க வந்த பொக்லைன்
திருவண்ணாமலை மாவட்டம் நார்த்தாமுண்டியில் உள்ள அண்ணாநகர் பகுதியில் 47 குடும்பங்கள் கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வருகின்றன. பொதுமக்கள் வசிக்கும் குடியிருப்புகள் நீர்நிலைப் பகுதியில் அமைந்துள்ளதாகவும், அந்த இடத்தை காலி செய்ய வேண்டும் என்று, அதே கிராமத்தை சேர்ந்த ஒருவர் 2018 ஆம் ஆண்டு நீதிமன்றத்தில் வழக்கை தொடர்ந்தார். இந்த வழக்கின் அடிப்படையில் வருவாய்த்துறை அதிகாரிகள் ஆக்கிரமிப்புகளை அகற்ற நான்கு முறை வந்தனர். இருப்பினும் அப்பகுதி மக்களின் எதிர்ப்பை மீறி அவர்களால் ஆக்கிரமிப்பை அகற்ற முடியவில்லை. கடைசியாக கடந்த ஏப்ரல் மாதம் 21-ஆம் தேதி காவல்துறையினர் குவிக்கப்பட்டு வருவாய் துறை அதிகாரிகள் அங்கு வந்து ஆக்கிரமிப்புகளை அகற்ற முயன்றனர். மேலும் வாசிக்க..
ஜெயக்குமார் செய்தியாளர் சந்திப்பு
”சிறையில் உள்ள செந்தில் பாலாஜி அமைச்சர் பொறுப்பை ராஜினாமா செய்ய வேண்டும்” என்றார். மேற்கொண்டு பேசிய அவர், “அரசுக்கு வருவாய் வரக்கூடிய வழிமுறைகளை விட்டுவிட்டு ஆதி திராவிடர் மக்களுக்கு ஒதுக்கப்படும் நிதியை மாற்றி கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு பயன்படுத்துவது எந்த வகையில் நியாயம். இதனால்தான் 15 நாட்களில் தமிழ்நாடு அரசு பதில் அளிக்க தேசிய எஸ்.சி., எஸ்.டி ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ஆதிதிராவிடர் மக்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதி என்பது அவர்களின் நலனுக்காக பயன்படுத்தப்படவேண்டும். அதே வகையில் இன்றைக்கு திமுக அரசு, மகளிர் உரிமைத் தொகைக்கு பணம் தேவை என்பதால், ஒரு காவல் நிலையத்துக்கும் மக்களிடம் மாதம் 25 லட்சம் அபராதம் என்ற பெயரில் வசூல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.மேலும் வாசிக்க..
அமராவதி அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரிப்பு
அமராவதி அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரிப்பால் ஆற்றில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. அமராவதி அணை மட்டம் உயர்ந்து வருவதால் ஆற்றில் மீண்டும் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. கடந்த 15 நாட்களில் 46.51 அடியில் இருந்து 62.80 அடியாக உயர்ந்துள்ளது. இதை எடுத்து காலை 8 மணி நிலவரப்படி அமராவதி அணையில் இருந்து ஆற்றில் மீண்டும் வினாடிக்கு 212 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. தண்ணீர் கரூர் அருகே பெரிய ஆண்டாங்கோவில் தடுப்பணைக்கு வரும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர். மேலும் வாசிக்க..
வானிலை அறிவிப்பு
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, அடுத்த சில தினங்களுக்கு மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 31.07.2023 மற்றும் 01.08.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 02.08.2023 முதல் 06.08.2023 வரை: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.மேலும் வாசிக்க..