மேலும் அறிய
Fengal Cyclone: தீவிரமடையும் ஃபெஞ்சல் புயல்; கவனமாக இருங்க மக்களே! பாதுகாப்பு வழிமுறைகள்!
Fengal Cyclone:
வானிலை மையம் எச்சரிக்கை
1/6

தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் "ஃபெஞ்சல்" புயல், சென்னையிலிருந்து தென்கிழக்கே 190 கிலோ மீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளது. இது மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து வடதமிழக - புதுவை கடற்கரையை காரைக்காலிற்கும் - மகாபலிபுரத்திற்கும் இடையே, புதுவைக்கு அருகே இன்று (30-11-2024) மதியம் சூறவாளி புயலாக கடக்கக்கூடும். அச்சமயத்தில் காற்றின் வேகம் மணிக்கு 70 முதல் 80 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 90 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது.
2/6

வானிலை மாற்றம் குறித்த தகவல்களை தெரிந்து கொள்ளுங்கள். சூறாவளியின் தீவிரத்தையும் அதைத் தொடர்ந்து பெய்யும் மழையையும் புரிந்து கொள்ள வானிலை எச்சரிக்கைகளைக் அடிக்கடி கேட்க வேண்டும்.
3/6

அவசர தகவலுக்காக செல்போன்களை சார்ஜ் செய்யவும். வானொலி கருவியுடன் கூடுதல் பேட்டரிகளை வைத்துக் கொள்ளவும்.வானிலை அறிவிப்புகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ளவும்.ஆவணங்கள் மற்றும் மதிப்புமிக்க பொருட்களைப் பாதுகாப்பாக வைக்கவும். பாதுகாப்பான இடங்களில் தங்கவும்.
4/6

மழை தொடங்கும் முன் அனைத்து வகையான மின்சாதனங்களின் இணைப்பையும் துண்டிக்க வேண்டும். வீட்டின் உள்ளே தளர்வான ஓடுகள் அல்லது செங்கற்கள் இருந்தால், அவற்றை உடனடியாக சரி செய்ய வேண்டும்.
5/6

கால்நடைகள்/ செல்லப் பிராணிகளை பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கவும். புயல் அல்லது வெள்ள எச்சரிக்கை தெரிவிக்கப்பட்ட உடனே உயரமான இடத்திற்கோ அல்லது அரசு முகாமிற்கோ செல்லவும். குறைந்தபட்சம் ஒரு வார உணவு மற்றும் தண்ணீரைச் சேமிக்கவும்.
6/6

கையடக்க ரேடியோ, டார்ச், பேட்டரி, தண்ணீர் கொள்கலன், உணவுகள், தீப்பெட்டி, முதலுதவி பெட்டி, அவசியமான மருந்துகள், நீர்ப்புகா பைகள், மெழுகுவர்த்தி, பால் மற்றும் தேவையான அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய அவசரகாலப் பெட்டியைத் தயாரிக்கவும்.ற்று குறையும் போது, சூறாவளி முடிந்துவிட்டதாக நாம் கருதக்கூடாது. அதிகாரப்பூர்வமான தெளிவான அறிவிப்பு வரும் வரை காத்திருக்க வேண்டும்.வீட்டுக்குள்ளேயே இருங்கள்
Published at : 30 Nov 2024 09:08 AM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement





















