மேலும் அறிய

தேர்தல் முடிவுகள் 2024

(Source: ECI/ABP News/ABP Majha)

கலசபாக்கம் அருகே ஆக்கிரமிப்பு வீடுகளை இடிக்க வந்த பொக்லைன்; முற்றுகையிட்ட பெண்கள்

கலசபாக்கம் அருகே நீர்ப்பிடிப்பு பகுதியில் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள வீடுகளை இடிக்க வந்த பொக்லைன் எந்திரத்தை முற்றுகையிட்டு தரையில் படுத்து பெண்கள் போராட்டம்.

திருவண்ணாமலை மாவட்டம் நார்த்தாமுண்டியில் உள்ள அண்ணாநகர் பகுதியில் 47 குடும்பங்கள் கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வருகின்றன. பொதுமக்கள் வசிக்கும் குடியிருப்புகள் நீர்நிலைப் பகுதியில் அமைந்துள்ளதாகவும், அந்த இடத்தை காலி செய்ய வேண்டும் என்று, அதே கிராமத்தை சேர்ந்த ஒருவர் 2018 ஆம் ஆண்டு நீதிமன்றத்தில் வழக்கை தொடர்ந்தார். இந்த வழக்கின் அடிப்படையில் வருவாய்த்துறை அதிகாரிகள் ஆக்கிரமிப்புகளை அகற்ற நான்கு முறை வந்தனர். இருப்பினும் அப்பகுதி மக்களின் எதிர்ப்பை மீறி அவர்களால் ஆக்கிரமிப்பை அகற்ற முடியவில்லை. கடைசியாக கடந்த ஏப்ரல் மாதம் 21-ஆம் தேதி காவல்துறையினர் குவிக்கப்பட்டு வருவாய் துறை அதிகாரிகள் அங்கு வந்து ஆக்கிரமிப்புகளை அகற்ற முயன்றனர். ஆனால் மக்கள் எல்லோரும் தங்கள் வீடுகளுக்குள் சென்று கதவை பூட்டிக் கொண்டனர். இதனால் ஆக்கிரமிப்பு அகற்றும் நடவடிக்கை அதிகாரிகள் கைவிட்டுச் சென்றனர். இந்நிலையில் போளூர் துணை காவல் கண்காணிப்பாளர் கோவிந்தசாமி தலைமையில் கலசப்பாக்கம், போளூர், ஆரணி ,சேத்துப்பட்டு, செய்யாறு பகுதிகளில் உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்ட அதிகமான காவல் துறையினர் காலையில் பணிக்கு அங்கு வரவழைக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். 

கலசபாக்கம் அருகே ஆக்கிரமிப்பு வீடுகளை இடிக்க வந்த பொக்லைன்; முற்றுகையிட்ட பெண்கள்

அதனை தொடர்ந்து திருவண்ணாமலை தாசில்தார் தலைமையில் வருவாய் துறையினர் குவிந்தனர். காலை எட்டு முப்பது மணிக்கு வீடுகளை இடிப்பதற்காக குடியிருப்பு பகுதிக்கு பொக்லைன் இயந்திரம் வந்தது. அப்போது பெண்களும் ஆண்களும் பொக்லைன் முன்பாக ஆவேசத்துடன் திரண்டு எங்களைக் கொன்று குவித்து விட்டு வீடுகளை இடியுங்கள் மாவட்டத்தில் எத்தனையோ இடங்கள் ஆக்கிரமிப்பில் உள்ளது. அதை எல்லாம் இடித்துவிட்டு எங்கள் வீடுகளை இடிக்க வாருங்கள் என்று கூறினார். மேலும் மாவட்ட ஆட்சியர் இங்கு வந்தாக வேண்டும் என்றும் என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறினார். அதன் பிறகு துணை ஆட்சியர் மந்தாகேணி அங்கு வந்தார். தொடர்ந்து நாங்கள் இங்கு வந்து சென்று மூன்று மாதம் கடந்த நிலையில் மீண்டும் வந்துள்ளோம். ஆனால் இது நீர் பிடிப்பு பகுதி இல்லை என உங்களால் நீதிமன்றத்தில் ஆர்டர் வாங்க முடியவில்லை, அதே நேரம் இது நீர் நிலைப்பகுதி என்பதால் உடனடியாக இடிக்க வேண்டும் என உத்தரவு வந்துள்ளது. மேலும் மேலும் பிரச்சினை செய்யாதீர்கள் எங்கள் பணியை செய்ய விடுங்கள் என வேண்டுகோள் விடுத்தார். அங்கிருந்த பெண்கள் நீங்களும் ஒரு பெண் தானே நீங்கள் இப்போது வசிக்கும் வீட்டை விட்டு வெளியே போகச் சொன்னால் எங்கு போவீர்கள் எங்களுக்கு இப்போது வழங்கப்பட்டுள்ள இடம் முழுவதுமாக நீர் பிடிப்பு பகுதியாகும் லேசான மழைக்கே தண்ணீர் தேக்கி விடுகிறது. அங்கு சென்று வீடு கட்ட வேண்டுமானால் எங்களால் முடியுமா ஒரு சதுரம் வீடு கட்டுவதற்கு இப்போது உள்ள விலைவாசியில் இரண்டு லட்சம் ரூபாய் தாண்டுகிறது. ஆனால் நாங்கள் 60 ஆண்டுகள் முன்னர் கட்டிய வீடுகள் வாழத் தகுதியாக உள்ளது. அப்படி இருக்கும் போது குடிக்க தண்ணீர் கூட இல்லாத இடத்தில் எங்களுக்கு இடம் ஒதுக்கி இருப்பது கண்ணை கட்டி காட்டில் விடுவது போல் உள்ளது.

கலசபாக்கம் அருகே ஆக்கிரமிப்பு வீடுகளை இடிக்க வந்த பொக்லைன்; முற்றுகையிட்ட பெண்கள்

அங்கு எங்களை போக சொன்னால் எப்படி நாங்கள் எங்களுடைய பிள்ளைகளின் படிப்பு என்னாவது என கண்ணீர் மல்க அழுதனர். அதோடு மட்டுமல்லாமல் 50 வருடங்களாக அண்ணாநகர் பகுதியில் வசித்து வரும் மக்கள் குடிசை வீடுகளும், சீட்டு வீடுகளும், ஓட்டு வீடுகளும், மெத்தை வீடுகள் கட்டி வசித்து வரும் நிலையில் ஊராட்சியின் மூலம் சிமெண்ட் சாலை மேல் நீர் தேக்க தொட்டி அமைத்து குடிநீர், மின்சார வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து கொடுத்த நிலையில் தற்போது வீடுகளை இடிக்கும் பணியில் வருவாய்த் துறையினர் ஈடுபட்டு வருவதால் எங்கு சென்று தங்குவது என்ற பரிதாபத்துடன் இப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

பாஜகவை ஓடவிட்ட கல்பனா.. சோரனை மீண்டும் அரியணையில் ஏற்றிய மனைவி!
பாஜகவை ஓடவிட்ட கல்பனா.. சோரனை மீண்டும் அரியணையில் ஏற்றிய மனைவி!
மராட்டிய மண்ணில் வெற்றி கொடி நாட்டிய தமிழன்! தாராவி மக்களின் காலா.. யார் இந்த கேப்டன் தமிழ்ச்செல்வன்!
மராட்டிய மண்ணில் வெற்றி கொடி நாட்டிய தமிழன்! தாராவி மக்களின் காலா.. யார் இந்த கேப்டன் தமிழ்ச்செல்வன்!
தங்கை உந்தன் உள்ளம் தானே அண்ணன் என்றும் வாழும் எல்லை! - கனிமொழியை புகழ்ந்து தள்ளிய ஸ்டாலின் -  ஏன் தெரியுமா?
தங்கை உந்தன் உள்ளம் தானே அண்ணன் என்றும் வாழும் எல்லை! - கனிமொழியை புகழ்ந்து தள்ளிய ஸ்டாலின் -  ஏன் தெரியுமா?
"CMஆன பிறகுதான் வருவேன்" ஜெயலலிதா பாணியில் சபதம்.. செய்து காட்டிய ஃபட்னாவிஸ்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Tiruchendur Elephant : ’’சோறு சாப்டியா?’’நலம் விசாரித்த டாக்டர்CUTE-ஆக தலையாட்டிய யானைPriyanka Gandhi : ’’நான் ஜெயிச்சுட்டேன் அண்ணா!’’ ராகுலை மிஞ்சிய பிரியங்கா!பாசமலருக்கு அன்பு கடிதம்Maharastra CM :  ஷிண்டே  vs ஃபட்னாவிஸ் புதுகணக்கு போடும் பாஜக! முதல்வர் அரியணை யாருக்கு?Rahul Gandhi Warning : ’’அழிவை நோக்கி நகரும் டெல்லி!மிகப்பெரிய ஆபத்தில் இந்தியா!’’எச்சரிக்கும் ராகுல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பாஜகவை ஓடவிட்ட கல்பனா.. சோரனை மீண்டும் அரியணையில் ஏற்றிய மனைவி!
பாஜகவை ஓடவிட்ட கல்பனா.. சோரனை மீண்டும் அரியணையில் ஏற்றிய மனைவி!
மராட்டிய மண்ணில் வெற்றி கொடி நாட்டிய தமிழன்! தாராவி மக்களின் காலா.. யார் இந்த கேப்டன் தமிழ்ச்செல்வன்!
மராட்டிய மண்ணில் வெற்றி கொடி நாட்டிய தமிழன்! தாராவி மக்களின் காலா.. யார் இந்த கேப்டன் தமிழ்ச்செல்வன்!
தங்கை உந்தன் உள்ளம் தானே அண்ணன் என்றும் வாழும் எல்லை! - கனிமொழியை புகழ்ந்து தள்ளிய ஸ்டாலின் -  ஏன் தெரியுமா?
தங்கை உந்தன் உள்ளம் தானே அண்ணன் என்றும் வாழும் எல்லை! - கனிமொழியை புகழ்ந்து தள்ளிய ஸ்டாலின் -  ஏன் தெரியுமா?
"CMஆன பிறகுதான் வருவேன்" ஜெயலலிதா பாணியில் சபதம்.. செய்து காட்டிய ஃபட்னாவிஸ்!
”CM ஆனா கண்டிப்பா இது நடக்கும்”: 4ஆம் வகுப்பு மாணவன் வைத்த கோரிக்கை - உறுதி கொடுத்த விஜய்!
”CM ஆனா கண்டிப்பா இது நடக்கும்”: 4ஆம் வகுப்பு மாணவன் வைத்த கோரிக்கை - உறுதி கொடுத்த விஜய்!
ஆசிரியரின் காலை அழுத்தும் மாணவர்கள்... அதிர்ச்சி வீடியோவால் பாய்ந்த அதிரடி நடவடிக்கை
ஆசிரியரின் காலை அழுத்தும் மாணவர்கள்... அதிர்ச்சி வீடியோவால் பாய்ந்த அதிரடி நடவடிக்கை
Jharkhand Election Result 2024: சல்லி, சல்லியாய் போன பா.ஜ.க.! ஜார்க்கண்டில் ஜாம் ஜாம் மோடில் ஹேமந்த் சோரன்!
Jharkhand Election Result 2024: சல்லி, சல்லியாய் போன பா.ஜ.க.! ஜார்க்கண்டில் ஜாம் ஜாம் மோடில் ஹேமந்த் சோரன்!
CBSE Scholarship: மாதந்தோறும் கல்வி உதவித்தொகை; சிபிஎஸ்இ அழைப்பு- விண்ணப்பிப்பது எப்படி?
CBSE Scholarship: மாதந்தோறும் கல்வி உதவித்தொகை; சிபிஎஸ்இ அழைப்பு- விண்ணப்பிப்பது எப்படி?
Embed widget