TN Headlines: தமிழ்நாட்டில் ஆர்வத்துடனும் புறக்கணிப்புடனுடம் நடைபெறும் தேர்தல்...இதுவரை இன்று
TN Headlines: தமிழ்நாட்டில் இன்று நடந்த முக்கிய நிகழ்வுகளை கீழே தலைப்புச் செய்திகளாக காணலாம்.
TN Election Vote Percentage: 1 மணி வாக்குப்பதிவு நிலவரம்.. தமிழ்நாட்டிலேயே சேலத்தில்தான் அதிகபட்ச வாக்குப்பதிவு!
நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் நாடாளுமன்ற மக்களவை தேர்தல் இன்று தொடங்கியுள்ளது. காலை 7 மணியில் இருந்து வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. முதற்கட்டமாக தமிழ்நாடு உள்பட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் தேர்தல் நடந்து வருகிறது. 1 மணி நிலவரப்படி, தமிழ்நாடு முழுவதும் 40.05 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதிகபட்சமாக சேலம் தொகுதியில் 46.89 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன. மேலும் படிக்க..
TN Poll Boycott: பரந்தூர் விவகாரம்: வெறிச்சோடிய வாக்குச்சாவடி.. வீடு வீடாக சென்று வாக்காளர்களை அழைக்கும் தாசில்தார்
ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற தொகுதிக்கான வாக்குப்பதிவு தொடங்கியது. பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த ஏகனாபுரம் கிராமத்தில் வாக்குச்சாவடி முகவர்கள் கூட வராத நிலையில் வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7:00 மணி முதல் துவங்கியது. அவ்வகையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் காஞ்சிபுரம் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற தொகுதிகள் அடங்கியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் 1732 வாக்கு சாவடிகள் பிரத்தியேகமாக வாக்குப்பதிவுக்கு அமைக்கப்பட்டுள்ளது. மேலும் படிக்க
Tamil Nadu Election 2024 : தேர்தல் என்று சொல்வதை விட "மெளனபுரட்சி" நடைபெறுகிறது - ராமதாஸ்
புதுச்சேரி தமிழக மக்கள் மோடியை விரும்புவதாகவும், இந்தியாவிற்கும், தமிழகத்திற்கு புதுச்சேரிக்கு நல்ல முன்னேற்றத்தை கொண்டு வர மோடி செயல்படுவார் என்ற நம்பிக்கையோடு மக்கள் வாக்களித்து கொண்டிருப்பதாகவும் சமத்துவமாகவும், சகோதரத்துவமாக வாழவும் ஒரு தாய் மக்களாக வாழ இந்த தேர்தல் வெற்றி பெரிதும் உதவும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.மேலும் படிக்க..
TVK Vijay Vote: சுற்றி வளைத்த ரசிகர்கள்.. கூட்டத்துக்குள் நீந்திச்சென்று வாக்களித்த தவெக தலைவர் விஜய்!
கோட் படத்தின் படப்பிடிப்புக்காக ரஷ்யா சென்றிருந்த நடிகர் விஜய் இன்று காலை விமானம் மூலம் சென்னை திரும்பினார். முன்னதாக நடந்த 2 தேர்தல்களில் அவர் கார் மற்றும் சைக்கிளில் வந்து வாக்களித்து சர்ப்ரைஸ் கொடுத்தார். இம்முறை எப்படி வாக்களிக்க வரப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு அதிகமானது. அதன்படி இந்த முறை பனையூரில் உள்ள தனது வீட்டில் இருந்து காரில் ரசிகர்கள் புடைசூழ புறப்பட்ட விஜய் நீலாங்கரை வாக்குச்சாவடியில் தனது வாக்கினை செலுத்தினார். அவர் வாக்குசாவடியை சென்றடைந்தபோது காலை முதல் விஜய்யை பார்க்க காத்திருந்த ரசிகர்கள் சுற்றி வளைத்தனர், மேலும் படிக்க