TN Lok Sabha Election LIVE : தமிழ்நாடு, புதுச்சேரியில் வாக்குப்பதிவு நிறைவு; வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு சீல் வைக்கும் பணி தீவிரம்!
Lok Sabha Elections 2024 Phase 1 Polling LIVE Updates: மக்களவை தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது. அதன் அப்டேட்டுகளை உடனுக்குடன் காணலாம்.

Background
Lok Sabha Elections 2024 Phase 1 Polling LIVE
மக்களவை தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது. தமிழ்நாடு, புதுச்சேரியில் மக்கள் ஆர்வமுடன் வாக்களிக்க காத்திருக்கின்றனர்.
தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டங்களாக மக்களவை தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்களில் 102 தொகுதிகளில் வாக்குப்பதிவானது நடைபெறுகிறது. காலை 7 மணிக்கு தொடங்கும் வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறுகிறது. அதேசமயம் மாலை 6 மணிக்குள் வாக்குச்சாவடிக்குள் வரும் வாக்காளர்கள் அனைவருக்கும் வாக்களிக்கும் வாய்ப்பு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டை பொறுத்தவரை திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர் கட்சிகள் இடையே பலத்த போட்டி நிலவுகிறது. மக்களவை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த மார்ச் 20 ஆம் தேதி தொடங்கி 27 ஆம் தேதி வரை நடைபெற்றது. மார்ச் 30 ஆம் தேதி இறுதிக்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியானது. இதனைத் தொடர்ந்து 40 தொகுதிகளிலும் அரசியல் கட்சியினர் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வாக்கு சேகரித்தனர்.
ஏப்ரல் 17 ஆம் தேதி வாக்கு சேகரிப்பு பரப்புரை ஓய்ந்த நிலையில், பாதுகாப்பு காரணங்களுக்காக 3 நாட்கள் டாஸ்மாக் கடைகளுக்கும் விடுமுறை விடப்பட்டுள்ளது. மேலும் வெளியூரில் இருக்கும் மக்கள் வாக்களிக்க சொந்த ஊர்களுக்கு செல்லும் வகையில் சிறப்பு பேருந்துகள், ரயில்கள் இயக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு, புதுச்சேரியில் வாக்களிக்க அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளதாக தேர்தல் ஆணையர் சத்ய பிரதா சாஹூ நேற்று தெரிவித்திருந்தார்.
வாக்குச்சாவடியில் மாற்றுத்திறனாளிகள்,முதியவர்கள்,கர்ப்பிணிகள் என அனைவருக்கும் சிறப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளது. மக்களவை தேர்தலோடு கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு சட்டமன்ற தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சீர்காழியில் தேர்தல் பணி செய்த ஆசிரியர்கள் சாலை மறியல்
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி சட்டமன்றத் தொகுதியில் தேர்தல் பணிக்காக வந்த ஆசிரியர்களுக்கு தேர்தல் பணிக்கான ஊதியம் வழங்குவதில் தாமதம் மற்றும் குடிநீர் கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தராததால் ஆசிரியர்கள் சீர்காழி - மயிலாடுதுறை சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
TN Lok Sabha Election LIVE : விளவங்கோடு சட்டமன்ற இடைத்தேர்தல் முடிந்தது!
விளவங்கோடு சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவும் மாலை 6 மணியுடன் முடிவுக்கு வந்தது.





















