TN Headlines: மருத்துவ மாணவர்களுக்கு செப்.1 முதல் வகுப்புகள்... புதிய உச்சத்தில் தக்காளி விலை... முக்கிய செய்திகள் இதோ...!
TN Headlines Today: தமிழ்நாட்டில் இன்று இதுவரை நடந்த முக்கிய நிகழ்வுகளின் செய்திகளின் தொகுப்பை இங்கே காணலாம்.
![TN Headlines: மருத்துவ மாணவர்களுக்கு செப்.1 முதல் வகுப்புகள்... புதிய உச்சத்தில் தக்காளி விலை... முக்கிய செய்திகள் இதோ...! Tamil nadu latest headlines july 30th tn politics latest news from abp nadu TN Headlines: மருத்துவ மாணவர்களுக்கு செப்.1 முதல் வகுப்புகள்... புதிய உச்சத்தில் தக்காளி விலை... முக்கிய செய்திகள் இதோ...!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/07/30/f2ea0c702ecdbdb56b130e7f661855d61690708240836572_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
- Medical College Opening: மருத்துவ மாணவர்களுக்கு செப்.1 முதல் வகுப்புகள்: தேசிய மருத்துவ ஆணையம் அறிவுறுத்தல்
நாடு முழுவதும் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் ஆண்டுதோறும் மாணவர் சேர்க்கை, மருத்துவக் கலந்தாய்வு நடத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக மாநில அரசு மருத்துவக் கல்லூரிகள், தனியார் மருத்துவக் கல்லூரிகள், மத்தியப் பல்கலைக்கழகங்கள், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் மத்திய, மாநில இட ஒதுக்கீடுகளின் அடிப்படையில் சேர்க்கை தனித்தனியாக நடத்தப்படுகிறது. மேலும் படிக்க
- Tomato Price Hike: புதிய உச்சம்; விலையைக் கண்டு கண்ணீர்தான் மிச்சம்- ரூ.200-ஐத் தொட்ட தக்காளி விலை!
சென்னை, மதுரையில் ஒரு கிலோ தக்காளி சில்லறை விலையில் ரூ.200-க்கு விற்பனை செய்யப்படுவதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும், தக்காளி விலை உயர்வை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதும்மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தக்காளி விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சென்னையில் மொத்த விலையில் 1 கிலோ தக்காளி ரூ.160-ஆக விற்பனையாகிறது. மேலும் படிக்க
- Anbumani: இனியும் நிலம் கையகப்படுத்தினால் திமுகவுக்கான கவுன்ட்டவுன் ஸ்டார்ட் - எச்சரித்த அன்புமணி ராமதாஸ்!
நெல்லை பாளையங்கோட்டையில் பாமக 2.0 விளக்க பொதுக்கூட்டம் நெல்லை மாவட்ட பாமக செயலாளர் சியோன் தங்கராஜ் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக பாமக தலைவர் அன்புமணி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது பேசிய அவர், "பாமக 2.0 என்பது அனைவருக்கும் வளர்ச்சி அனைவருக்கும் உரிமை என்பதை கொண்டது. 40 ஆண்டுகளுக்கு முன்பு தென் மாவட்டங்களில் எங்கு பார்த்தாலும் கலவரமாக இருந்தது. மேலும் படிக்க
- EPS on DMK Govt: விஷ காய்ச்சல்களால் அவதியுறும் மக்கள்: காய்ச்சலைக் கட்டுப்படுத்தாத விடியா அரசு- ஈபிஎஸ் கடும் கண்டனம்
டெங்கு போன்ற விஷ காய்ச்சல்களால் மக்கள் அவதியுறுவதாகவும் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தி திமுக அரசு காய்ச்சலை கட்டுப்படுத்தவில்லை என்றும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். கடந்த இரண்டு ஆண்டு கால விடியா தி.மு.க. அரசின் அலங்கோல நிர்வாகத்தாலும், சுகாதாரத் துறையின் அலட்சியப் போக்காலும் அரசு மருத்துவமனைகளையே நம்பி இருக்கும் பாமர மக்கள் முறையான சிகிச்சை இல்லாமல், மருந்து மாத்திரைகள் கிடைக்காமல் தங்கள் உயிரைக் காக்க போராடும் அவலம் ஏற்பட்டுள்ளது. மேலும் படிக்க...
- Thozhi Womens Hostel: தமிழ்நாடு முழுவதும் குறைவான கட்டணத்தில் அரசு பெண்கள் விடுதிகள்; இதோ முகவரி... சேர்வது எப்படி? முழுத் தகவல்
தமிழக அரசின் சார்பில் மாநிலம் முழுவதும் 9 மாவட்டங்களில், பணிபுரியும் பெண்களுக்காகக் குறைந்த கட்டணத்தில் பிரத்யேக மகளிர் விடுதிகள் தொடங்கப்பட்டுள்ளன. இவை அமைந்துள்ள பகுதிகள் குறித்தும், அவற்றில் சேர்வது எப்படி என்றும் விளக்கமாகக் காணலாம். சென்னை மாவட்டத்தில் அடையாறில் , 2வது குறுக்கு தெரு, சாஸ்திரி நகரில் தோழி (Thozhi Womens Hostel) பெண்கள் விடுதி இயங்கி வருகிறது. மேலும் படிக்க
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)