Tomato Price Hike: புதிய உச்சம்; விலையைக் கண்டு கண்ணீர்தான் மிச்சம்- ரூ.200-ஐத் தொட்ட தக்காளி விலை!
Tomato Price Hike: தொடர்ந்து அதிகரித்து வரும் தக்காளி விலையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
சென்னை, மதுரையில் ஒரு கிலோ தக்காளி சில்லறை விலையில் ரூ.200-க்கு விற்பனை செய்யப்படுவதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும், தக்காளி விலை உயர்வை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதும்மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சென்னையில் ஒரு கிலோ தக்காளி ரூ.200-க்கு விற்பனை
தக்காளி விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சென்னையில் மொத்த விலையில் 1 கிலோ தக்காளி ரூ.160-ஆக விற்பனையாகிறது. சென்னையில் சில்லறை கடைகளில் ரூ.200 முதல் ரூ.210 வரை விறபனை செய்யப்படுகிறது. சென்னை திருநெல்வேலியில் தக்காளி விலை ரூ.200-க்கு விற்பனையாகிறது. தக்காளி உழவர் சந்தையில் தக்காளி கிலோ ரூ.144-க்கும் விற்பனையாகிறது. புதுக்கோட்டை உழவர் சந்தையில் ரூ.140-க்கும் சேலத்தில் தக்காளி கிலோ ரூ.135-க்கும் விற்பனையாகிறது.
மதுரையில் தக்காளி கிலோ ரூ.150 விற்பனை
மதுரை மாட்டுத்தாவணி காய்கறி சந்தையில் தக்காளி கிலோ ரூ.150-க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்று ரூ.130-க்கு விற்பனையான நிலையில் இன்று ஓரே நாளில் ரூ.20 உயர்ந்து ரூ.150-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
பண்ணை பசுமைக் கடை ரேசன் கடைகளில் தக்காளி விற்றும், விலை குறையவில்லை என மக்கள் மத்தியில் அதிருப்தி நிலவுகிறது. அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்த பிறகும் தாறுமாறாக உயர்ந்து வருகிறது. பண்ண பசுமைக் கடை, ரேசன் கடைகளில் தக்காளி விற்பனையை மேலும் அதிகரிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.