Tamil Nadu heavy rainfall: திசைமாறும் காற்று! 11மாவட்டங்களில் வெளுக்கப்போகும் மழை! வானிலை எச்சரிக்கை!
தமிழ்நாட்டில் 11 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
கன மழைக்கு வாய்ப்பு:
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக ஜீன் 29, 30 ஆகிய நாட்களில் தமிழ்நாட்டின் 11 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் சில பகுதிகள், புதுவை மற்றும் காரைக்கால் ஆகிய இடங்களில் இன்றும் நாளையும் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
11 மாவட்டங்களில் கனமழை:
நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, திருவள்ளூர், விழுப்புரம் காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 11 மாவட்டங்களில் நாளை மறுநாள் மற்றும் ஜீன் 30 ஆகிய நாட்களில் கன மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
மீனவர்களுக்கு எச்சரிக்கை:
குமரிக்கடல், மன்னார் வளைகுடா மற்றும் தென் தமிழக கடலோர பகுதிகளில் 40 முதல் 50 கி.மீ வரை காற்று வீசக்கூடும் என்பதால் ஜீன் 27 முதல் ஜீன் 29 வரை மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
— Tamilnadu Weather-IMD (@ChennaiRmc) June 27, 2022
— Tamilnadu Weather-IMD (@ChennaiRmc) June 27, 2022
27/06/2022 காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான அதிகபட்ச வெப்பநிலை ( °C) மற்றும் இயல்பிலிருந்து அதன் விலகல் (°C) pic.twitter.com/RHSx9rCatX
— Tamilnadu Weather-IMD (@ChennaiRmc) June 27, 2022
Weather forecast for next 7 days-Chennai pic.twitter.com/gvBr5S7cUZ
— Tamilnadu Weather-IMD (@ChennaiRmc) June 27, 2022
Also Read: Watch Video: சர்ரென வந்தாங்க.. காணாம போய்ட்டாங்க.. சாலை நீரில் மூழ்கிய இருவர்! பதறவைக்கும் வீடியோ!
மேலும் செய்திகளை காண,
ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்