மேலும் அறிய

Tamil Nadu Coronavirus | கொரோனா சிகிச்சைக்கு படுக்கை வேணுமா? இதுதான் ஆன்லைன் விண்ணப்பம் -  'வார் ரூம்' அறிவிப்பு!

கொரோனா பாதித்த நபர்கள் மருத்துவமனையில் படுக்கை பெற ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். அதற்கான இணையதளம் தமிழக அரசின் 'Covid War Room' சார்பில் தொடங்கப்பட்டுள்ளது 

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2 லட்சத்து 81 ஆயிரத்து 386 பேருக்கு  கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் கூறியுள்ளது. நேற்று முன்தினம் 3.26 லட்சம், நேற்று 3.11 லட்சமாக இருந்த பாதிப்பு இன்று 2.81 லட்சமாக குறைந்தது. தமிழகத்திலும் கொரோனாவின் தாக்கம் அதிகமாகவே உள்ளது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தமிழக அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி சமீபத்தில் கையில் எடுக்கப்பட்ட முயற்சி வார் ரூம்.

Tamil Nadu Coronavirus | கொரோனா சிகிச்சைக்கு படுக்கை வேணுமா? இதுதான் ஆன்லைன் விண்ணப்பம் -  'வார் ரூம்' அறிவிப்பு!

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலருக்கு உத்தரவிட்டதன் அடிப்படையில் தமிழ்நாட்டின் ஒருங்கிணைந்த கொரோனா கட்டளை மையம் (Unified command centre) தற்போது உருவாக்கப்பட்டிருக்கிறது. இந்த கட்டளை மையம் கொரோனா ’வார் ரூம்’ ஆகச் செயல்படுகிறது.

ஒருங்கிணைந்த கட்டளை மையம் கொரோனா நெருக்கடியை நிர்வகிக்க உதவும் ஒரு குறுக்கு செயல்பாட்டு (cross functional) தலைமை மையமாக இருக்கும், கொரோனா காலத்தில் படுக்கை மற்றும் ஆக்சிஜன் வசதி போன்ற மிக அவசரமான பிரச்சனைகளின் சூழ்நிலை குறித்த விழிப்புணர்வை உருவாக்குவதன் மூலம் நெருக்கடியைத் தவிர்க்க இந்த மையம் உதவும். கொரோனா நோயாளிகளுக்கான மருத்துவமனை படுக்கைகள் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் இந்த கட்டளை மையம் தமிழ்நாடு மருத்துவமனைகளில் இருக்கும் காலிப் படுக்கைகள் எண்ணிக்கையை தமிழ்நாடு அரசு மருத்துவப் படுக்கைகள் மேலாண்மைத் தளம் வழியாகக் கண்காணிக்கும். இதன்வழியாக நோயாளிகளின் தேவையை உடனுக்குடன் பூர்த்தி செய்யமுடியும். மேலும் இந்த வார் ரூம், படுக்கை வசதிகளை அதிகரிக்க  தொழிற்துறை, பொதுப்பணித்துறை மற்றும் அரசு கொரோனா கேர் மையங்களுடன் இணைந்து செயல்படும்.

Tamil Nadu Coronavirus | கொரோனா சிகிச்சைக்கு படுக்கை வேணுமா? இதுதான் ஆன்லைன் விண்ணப்பம் -  'வார் ரூம்' அறிவிப்பு!

அதன்படி தற்போது  கொரோனா பாதித்த நபர்கள் மருத்துவமனையில் படுக்கை வசதி பெற ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  அதற்கான https://ucc.uhcitp.in/publicbedrequest என்ற இணையதளம் தமிழக அரசின் 'Covid War Room' சார்பில் தொடங்கப்பட்டுள்ளது. இந்த இணையதளப்பக்கத்தில் சென்று, நோயாளியின் பெயர், விவரம், அறிகுறிகள், நோயில் தன்மை, பரிசோதனை முடிவுகள் போன்ற விவரங்களை எல்லாம் பூர்த்தி செய்ய வேண்டும். எந்த மாவட்டம், எந்த வகையானபடுக்கை வேண்டும், அரசு மருத்துவமனையில் வேண்டுமா அல்லது தனியார் மருத்துவனையா போன்ற தகவல்களும் கேட்கப்படும். நமக்கு தேவையான விருப்பத்தை பதிவு செய்ய வேண்டும்

மேலும் அனைத்து தகவல்களையும் பூர்த்தி செய்து Submit கொடுத்தால் படுக்கை வசதி பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

காட்சி ஊடகத்துறையில் 7 ஆண்டுகளுக்கு மேலாக அனுபவம் கொண்டவர். சோஷியல் மீடியா இன்சார்ஜ், டிக்கர் இன்சார்ஜ், கன்டண்ட் ரைட்டர், கன்டண்ட் இன் சார்ஜ் என பல்வேறு பிரிவுகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர் / பணியாற்றி வருபவர். அனைத்து பிரிவு செய்திகளையும் திறம்பட கையாளக் கூடிய நபர். குறிப்பாக சினிமா ரிவியூ, டெக்னாலஜி, ஆட்டோமொபைல் பிரிவுகளை அதிகம் பின்பற்றி எழுதுபவர். தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் கதை, கவிதை, கட்டுரை என தொடர்ந்து எழுதி வருபவர்.
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Messi Visit Vantara: தியானம்.. கால்நடை.. என்ன ஒரு அழகு..! வந்தாராவிற்கு புகழாரம் சூட்டிய மெஸ்ஸி..!
Messi Visit Vantara: தியானம்.. கால்நடை.. என்ன ஒரு அழகு..! வந்தாராவிற்கு புகழாரம் சூட்டிய மெஸ்ஸி..!
TVK Vijay: செங்கோட்டையன் பிடியில் விஜய்.. ஈரோடு தவெக நிகழ்ச்சியில் நிகழப்போகும் மாற்றம்?
TVK Vijay: செங்கோட்டையன் பிடியில் விஜய்.. ஈரோடு தவெக நிகழ்ச்சியில் நிகழப்போகும் மாற்றம்?
Delhi Air Pollution: கார்களுக்கு தடை, பேருந்துகளும் ஓடாத சூழல் - இன்று முதல் புதிய விதிகள் அமல், மக்கள் குழப்பம்
Delhi Air Pollution: கார்களுக்கு தடை, பேருந்துகளும் ஓடாத சூழல் - இன்று முதல் புதிய விதிகள் அமல், மக்கள் குழப்பம்
Annamalai:
Annamalai: "நான் மோடிக்கு விசுவாசமான நாய்” - தவெகவுக்கு அண்ணாமலை பதிலடி.. நடந்தது என்ன?
ABP Premium

வீடியோ

TN IPS Officers Transfer | அருண் ஐபிஎஸ் மாற்றம்? டேவிட்சனுக்கு முக்கிய பதவி.. தயாரான ஐபிஎஸ் பட்டியல்
Virugambakkam DMK Candidate | விருகம்பாக்கம் சீட் யாருக்கு? பிரபாகர்ராஜாவா? தனசேகரனா? திமுகவில் காத்திருக்கும் Twist
கோவை தெற்கில் போட்டி? செந்தில் பாலாஜி MASTERPLAN! பின்னணி என்ன?
குட்டி பும்ரா யாக்கர் கிங் மங்கேஷ் யாதவ் தட்டி தூக்கிய RCB | Virat Kholi | IPL Auction 2026 | Mangesh Yadav
தங்கம் விலை குறையுமா? மத்திய அரசு சொல்வது என்ன தங்கத்தை குவித்துள்ள இந்தியா | Gold Rate Hike

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Messi Visit Vantara: தியானம்.. கால்நடை.. என்ன ஒரு அழகு..! வந்தாராவிற்கு புகழாரம் சூட்டிய மெஸ்ஸி..!
Messi Visit Vantara: தியானம்.. கால்நடை.. என்ன ஒரு அழகு..! வந்தாராவிற்கு புகழாரம் சூட்டிய மெஸ்ஸி..!
TVK Vijay: செங்கோட்டையன் பிடியில் விஜய்.. ஈரோடு தவெக நிகழ்ச்சியில் நிகழப்போகும் மாற்றம்?
TVK Vijay: செங்கோட்டையன் பிடியில் விஜய்.. ஈரோடு தவெக நிகழ்ச்சியில் நிகழப்போகும் மாற்றம்?
Delhi Air Pollution: கார்களுக்கு தடை, பேருந்துகளும் ஓடாத சூழல் - இன்று முதல் புதிய விதிகள் அமல், மக்கள் குழப்பம்
Delhi Air Pollution: கார்களுக்கு தடை, பேருந்துகளும் ஓடாத சூழல் - இன்று முதல் புதிய விதிகள் அமல், மக்கள் குழப்பம்
Annamalai:
Annamalai: "நான் மோடிக்கு விசுவாசமான நாய்” - தவெகவுக்கு அண்ணாமலை பதிலடி.. நடந்தது என்ன?
HOLIDAY: 2 நாள் விடுமுறை.! மாணவர்கள், அரசு ஊழியர்களுக்கு சூப்பரான அறிவிப்பை வெளியிட்ட போக்குவரத்து துறை
2 நாள் விடுமுறை.! மாணவர்கள், அரசு ஊழியர்களுக்கு சூப்பரான அறிவிப்பை வெளியிட்ட போக்குவரத்து துறை
SHANTI Bill : சப்ளையர்களுக்கு சாதகமான ”சாந்தி” மசோதா, அணுசக்தி துறையில் தனியார் - மக்களவையில் நிறைவேற்றம்
SHANTI Bill : சப்ளையர்களுக்கு சாதகமான ”சாந்தி” மசோதா, அணுசக்தி துறையில் தனியார் - மக்களவையில் நிறைவேற்றம்
TNPSC, SSC, RRB தேர்வு.! தேர்வர்கள் எதிர்பார்த்து காத்திருந்த அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு
TNPSC, SSC, RRB தேர்வு.! தேர்வர்கள் எதிர்பார்த்து காத்திருந்த அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு
Railway: ரைட்ரா.. ரயிலில் எக்ஸ்ட்ரா லக்கேஜிற்கு, கூடுதல் கட்டணம் - மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தகவல்
Railway: ரைட்ரா.. ரயிலில் எக்ஸ்ட்ரா லக்கேஜிற்கு, கூடுதல் கட்டணம் - மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தகவல்
Embed widget