24 Hours Functioning : வணிக நிறுவனங்கள் 24 மணிநேரமும் செயல்படலாம்.. அரசாணை வெளியிட்டது தமிழ்நாடு அரசு..
தமிழ்நாட்டில் வணிக நிறுவனங்கள் 24 மணி நேரமும் செயல்படலாம் என தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டது
24 மணி நேரமும் செயல்பட அனுமதி:
தமிழ்நாட்டில் வணிக நிறுவனங்கள் மற்றும் கடைகள் 24 மணி நேரமும் செயல்படலாம் என தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டது. இந்த அனுமதியானது, அடுத்து 3 ஆண்டுகளுக்கு நடைமுறையில் இருக்கும் என அரசாணையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா காரணமாக நேரம் குறைக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது 24 மணி நேரமும் செயல்பட அரசு அனுமதி அளித்துள்ளது.
விதிகள் அமல்:
இந்த நடைமுறையானது ஜீன் 5ஆம் தேதி முதல் அமலுக்கு வந்ததாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. மேலும் சில விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் எனவும் அரசு குறிப்பிட்டுள்ளது.
* 8 மணி நேரத்திற்கு மேல் பணியாளர்களை வேலையில் அமர்த்த கூடாது
*கூடுதல் நேரம் வேலை செய்யும் பணியாளர்களுக்கு கூடுதல ஊதியம் வழங்க வேண்டும்
*வாரத்தில் ஒரு நாள் பணியாளர்களுக்கு விடுமுறை வழங்க வேண்டும்.
*வாரத்தில் 57 மணி நேரத்திற்கு மேல் பணியாளர்களுக்கு வேலை வழங்க கூடாது
*விடுமுறை நாட்களில் வேலை வழங்கும் பட்சத்தில் பணியாளர்களுக்கு முன் அறிவிப்பு செய்ய வேண்டும்
* ஊழியர்களுக்கு தேவையான அடிப்படை வசைதகளை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும்
* பெண் ஊழியர்கள் அனுமதி பெற்ற பின்னரே இரவு பணி வழங்க வேண்டும், மேலும் அவர்களுக்கு போக்குவரத்து வசதி ஏற்படுத்தி கொடுக்க வேண்டும்.
* பெண் ஊழியர்களுக்கு சில சலுகைகளும் வழங்கப்பட்டுள்ளன
10 அல்லது அதற்கு மேல் பணியாளர்களை கொண்ட வணிக நிறுவனங்கள், கடைகள் அனைத்தும் 24 மணி நேரமும் செயல்பட அனுமதி அளித்து அரசாணை வெளியிட்டது தமிழ்நாடு அரசு!@manivannan1825 @Gokulsujith24 #TNGovt #shops pic.twitter.com/LMfxwtSvAG
— Im___bk (@Balaraina244200) June 8, 2022
மேலும் அரசாணை குறித்த விரிவான விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் 317_Ex_II_2 (1).pdf
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்