Airtel : திடீரென மறைந்த ஏர்டெல் சிக்னல்... சென்னையில் செல்போனும் கையுமாக பரபரப்பாக அலைந்த வாடிக்கையாளர்கள்..
சென்னையில் பல்வேறு இடங்களில் ஏர்டெல் செல்போன் சிக்னல் சேவை முடங்கியதால் வாடிக்கையாளர்கள் பெரும் அவதிக்குள்ளாகினர்.
சென்னையில் பல்வேறு இடங்களில் ஏர்டெல் செல்போன் சிக்னல் சேவை முடங்கியதால் வாடிக்கையாளர்கள் பெரும் அவதிக்குள்ளாகினர். கடந்த 30 நிமிடங்களுக்கு மேலாக சேவை இல்லாமல் இருந்ததாகவும், வாட்ஸ் அப் சேவை இயங்கிய நிலையில் அழைப்புகளை ஏற்க முடியாமல் வாடிக்கையாளர்கள் தவித்து வந்துள்ளனர்.
சென்னை மட்டுமின்றி இந்தியாவில் பல முக்கிய நகரங்களிலும் ஏர்டெல் சேவை முடங்கியுள்ளது. ஒரு சில இடங்களில் 30 நிமிடங்களுக்கு மேலாகவும், ஒரு சில இடங்களில் 15 நிமிடங்களுக்கு மேலாகவும் இந்த சேவை தொடர்ச்சியாக முடங்கியுள்ளது.
இதுகுறித்து, வாடிக்கையாளர்கள் தங்களது ட்விட்டர் பக்கத்தில் வரிசையாக பல புகார்களை அடுக்கி வருகின்றனர். அதில், ஒரு சில ட்வீட்ஸ் இதோ..!
No Airtel Network available in #Kalburagi District #AirtelDown @airtelindia @Airtel_Presence pic.twitter.com/U1fI3Ioydo
— Prajwal Vitkar (@Prajwal_VT_2104) June 8, 2022
It looks like #AirtelDown
— Siva Bharani Udaya Selvan (@Siva_Bharani) June 8, 2022
I tried all basic steps and nothing helped pic.twitter.com/RaaObub6mH
Airtel network down? Not able to call anyone
— Immanuel iggi (@Immanueliggi) June 8, 2022
Airtel Network Down ?
— Arjun Sharma (@arjunsharma_007) June 8, 2022
Anyone else facing it ? @airtelindia @Airtel_Presence #AirtelDown #airtel pic.twitter.com/NHO4A0ZWaH
மும்பை, டெல்லி, ஜெய்ப்பூர், ஹைதராபாத், பெங்களூரு, சென்னை, கொல்கத்தா மற்றும் கவுகாத்தி உள்ளிட்ட நகரங்களில் இருந்து சேவை முடங்கியதாக டவுன்டிடெக்டர் இணையதளம் தகவல் தெரிவித்துள்ளது. (இன்று) ஜூன் 8 ஆம் தேதி மாலை 4:27 மணியளவில் ஏர்டெல் சேவைகளில் சிக்கல்கள் ஏற்பட்டதாக தெரியவந்துள்ளது. 4,400 பேர் சிக்னல் இல்லை, மொபைல் இணையத்தை அணுக முடியவில்லை மற்றும் லேண்ட்லைன் இணையத்தில் கூட சிக்கல்கள் இருப்பதாகப் புகாரளித்துள்ளனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்