மேலும் அறிய

தமிழ்நாட்டில் யானைகளின் எண்ணிக்கை 3,063 ஆக அதிகரிப்பு.! எந்த மாவட்டத்தில் அதிகம் தெரியுமா?

Elephant Population In Tamilnadu: தமிழ்நாட்டில் யானைகளின் எண்ணிக்கையானது, கடந்த ஆண்டைவிட 100 அதிகரித்துள்ளதாக கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.

Elephant Census 2024: காடுகளை வளர்ப்பதிலும், காடுகளின் வளத்தை பாதுகாப்பதிலும் முக்கிய பங்கு வகிப்பதில் யானைகளின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்தவையாக உள்ளது. இதனை கருத்தில் கொண்டு, அரசாங்கமானது யானைகளை பாதுகாக்கும் வகையில் பல்வேறு முக்கிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில், சமீபத்திய கணக்கெடுப்பில் யானைகள் எண்ணிக்கையானது அதிகரித்திருப்பது தெரியவந்துள்ளது. 

யானைகள் கணக்கெடுப்பு:

கடந்த மே மாதம் கேரளா, கர்நாடகா மற்றும் ஆந்திரா ஆகிய மாநிலங்களுடன் இணைந்து தமிழ்நாடு அரசு யானைகள் கணக்கெடுப்பை நடத்தியது. இந்த கணக்கெடுப்பில் தமிழ்நாட்டில் யானைகளின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாக தெரியவந்துள்ளது. 

கடந்த ஆண்டை ஒப்பிடுகையில், இந்த ஆண்டு யானைகளின் எண்ணிக்கையானது 100 அதிகரித்து சுமார் 3,063 ஆக அதிகரித்துள்ளதாக கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. 

தமிழ்நாட்டில் இருக்கும் 26 வன மண்டலங்களில் நீலகிரி யானைகள் காப்பகத்திற்கு உட்பட்ட பகுதிகளான உதகை, மசினகுடி, கூடலூர், ஹாசனூர், ஓசூர் ஆகிய பகுதிகளில் அதிகளவு யானைகள் இருப்பதாக கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. 

இதில் , கோவை மற்றும் நீலகிரி பகுதிகள் 70 முதல் 80 சதவிகிதம் யானைகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழ்நாட்டில் யானைகளின் எண்ணிக்கை 3,063 ஆக அதிகரிப்பு.! எந்த மாவட்டத்தில் அதிகம் தெரியுமா?

யானைகள் வாழ்விடம்:

தமிழ்நாட்டில் 17, 737 சதுர கி.மீ பரப்பளவில் யானைகள் நடமாட்டம் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. இதில் 8,989 சதுர கி.மீ பரப்பளவில் யானைகள் வாழ்விடமாக உள்ளது. 

நீலகிரியில் 4, 662 சதுர கி.மீ பரப்பளவில் 2,253 யானைகள் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. 

கோவையில் 566 சதுர கி.மீ பரப்பளவில் 323 யானைகள் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. 

ஆனைமலை 1,457 சதுர கி.மீ பரப்பளவில் 310 யானைகள் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. 

ஸ்ரீவில்லிபுத்தூரில்  1,249 சதுர கி.மீ பரப்பளவில் 2,27 யானைகள் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. 

அகத்தியர் மலையில் 1, 197 சதுர கி.மீ பரப்பளவில் 259 யானைகள் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் யானைகள்:

தமிழ்நாட்டில் கடந்த சில ஆண்டுகளாக யானைகளின் எண்ணிக்கையானது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 

2017 ஆம் ஆண்டு யானைகளின் எண்ணிக்கை - 2, 761

2023ஆம் ஆண்டு யானைகளின் எண்ணிக்கை - 2, 961

2024 ஆம் ஆண்டு யானைகளின் எண்ணிக்கை - 3,063

இந்நிலையில், அரசின் நடவடிக்கைகளால் யானைகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வந்தாலும், சில இடங்களில் ரயில் விபத்துகளால் உயிர் இழப்பதும், விவசாய தோட்டங்களில் மின் வேலியில் சிக்கி யானைகள் உயிரிழப்பையும் தடுக்கும் பட்சத்தில் , மேலும் எண்ணிக்கை அதிகரிக்கும் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். 

Also Read: Chennai Tourist Places: தலைநகரம்னா சும்மாவா..! சென்னையில் சுற்றிபார்க்க குவிந்துள்ள சுற்றுலாத் தலங்கள், பீச் டூ மால்..!

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

’’தமிழகத்தைப் பின்தள்ளிய உ.பி. பெருந்துரோகம் இழைத்த திராவிட மாடல் அரசு’’- எழும் குற்றச்சாட்டு!
’’தமிழகத்தைப் பின்தள்ளிய உ.பி. பெருந்துரோகம் இழைத்த திராவிட மாடல் அரசு’’- எழும் குற்றச்சாட்டு!
Aadhav Arjuna: தவெக கட்சியில் இணைவீர்களா? - மறுக்காத ஆதவ் அர்ஜுனா .. பரபரப்பு பிரஸ்மீட் ..!
தவெக கட்சியில் இணைவீர்களா? - மறுக்காத ஆதவ் அர்ஜுனா .. பரபரப்பு பிரஸ்மீட் ..!
மோடி டூ ஸ்டாலின்.. லிஸ்டில் இவருமா? இந்தியாவின் தலையெழுத்தை நிர்ணயிப்பவர்கள் யார்? ஓர் அலசல்!
மோடி டூ ஸ்டாலின்.. லிஸ்டில் இவருமா? இந்தியாவின் தலையெழுத்தை நிர்ணயிப்பவர்கள் யார்? ஓர் அலசல்!
கூப்பிட்டு அசிங்கப்படுத்திய பாலிவுட்...அட்லி கொடுத்த நெத்தியடி பதில்
கூப்பிட்டு அசிங்கப்படுத்திய பாலிவுட்...அட்லி கொடுத்த நெத்தியடி பதில்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”உள்ள விட மாட்டோம்” கோயில் நிர்வாகம் பகீர்! இளையராஜா- ஜீயர் சர்ச்சைவிடாப்பிடியாக இருந்த பாஜக! சிக்கலில் ஏக்நாத் ஷிண்டே! மீண்டும் உடையும் சிவசேனா”யப்பா... 2 MATHS PERIOD! அமித்ஷாவின் ரியாக்‌ஷன்” மோடியை கலாய்த்த பிரியங்காவிஜய்க்காக மாஸ்டர் ப்ளான்! EPS போடும் கணக்கு! திமுக vs தவெக ட்விஸ்ட்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
’’தமிழகத்தைப் பின்தள்ளிய உ.பி. பெருந்துரோகம் இழைத்த திராவிட மாடல் அரசு’’- எழும் குற்றச்சாட்டு!
’’தமிழகத்தைப் பின்தள்ளிய உ.பி. பெருந்துரோகம் இழைத்த திராவிட மாடல் அரசு’’- எழும் குற்றச்சாட்டு!
Aadhav Arjuna: தவெக கட்சியில் இணைவீர்களா? - மறுக்காத ஆதவ் அர்ஜுனா .. பரபரப்பு பிரஸ்மீட் ..!
தவெக கட்சியில் இணைவீர்களா? - மறுக்காத ஆதவ் அர்ஜுனா .. பரபரப்பு பிரஸ்மீட் ..!
மோடி டூ ஸ்டாலின்.. லிஸ்டில் இவருமா? இந்தியாவின் தலையெழுத்தை நிர்ணயிப்பவர்கள் யார்? ஓர் அலசல்!
மோடி டூ ஸ்டாலின்.. லிஸ்டில் இவருமா? இந்தியாவின் தலையெழுத்தை நிர்ணயிப்பவர்கள் யார்? ஓர் அலசல்!
கூப்பிட்டு அசிங்கப்படுத்திய பாலிவுட்...அட்லி கொடுத்த நெத்தியடி பதில்
கூப்பிட்டு அசிங்கப்படுத்திய பாலிவுட்...அட்லி கொடுத்த நெத்தியடி பதில்
Vijay Sethupathi :
Vijay Sethupathi : "இது என் படத்தோட ப்ரோமோஷன்..அத பத்தி ஏன் பேசனும்?" சூடான விஜய் சேதுபதி
விஜய் பங்கேற்ற நிகழ்ச்சியில் திருமா பங்கேற்க கூடாது என நான் அழுத்தம் கொடுத்தேனா? - அமைச்சர் எ.வ.வேலு  விளக்கம்
விஜய் பங்கேற்ற நிகழ்ச்சியில் திருமா பங்கேற்க கூடாது என நான் அழுத்தம் கொடுத்தேனா? - அமைச்சர் எ.வ.வேலு விளக்கம்
மதுரை மக்களே உஷார்.. நாளை (17-12-2024) மின்தடை செய்யப்படவுள்ள பகுதிகள் விவரம் இதோ
மதுரை மக்களே உஷார்.. நாளை (17-12-2024) மின்தடை செய்யப்படவுள்ள பகுதிகள் விவரம் இதோ
CM Stalin: மைனாரிட்டி பாஜக அரசே..! அராஜகம், சர்வாதிகாரம் - கொந்தளித்த முதலமைச்சர் ஸ்டாலின், காரணம் என்ன?
CM Stalin: மைனாரிட்டி பாஜக அரசே..! அராஜகம், சர்வாதிகாரம் - கொந்தளித்த முதலமைச்சர் ஸ்டாலின், காரணம் என்ன?
Embed widget