TN Corona LIVE Updates : தமிழ்நாட்டிலும் முழு ஊரடங்கு அறிவிக்க வேண்டும் - ரவிக்குமார் எம்.பி
TN Corona Cases LIVE Updates: மருத்துவ அவசர நிலைக்காலம் என்பதால் 50% படுக்கைகளை ஒதுக்கீடு செய்து வரும் தனியார் மருத்துவமனைகள் கூடுதலாகவும் படுக்கைகளை ஒதுக்கீடு செய்ய வேண்டும் - மு.க ஸ்டாலின் வேண்டுகோள்
LIVE
Background
Corona Virus Latest News in Tamil: கோவிட்-19-க்கு எதிரான போரில் முக்கிய முன்னேற்றமாக, பிஎம் கேர்ஸ் நிதியுதவியுடன் இரண்டு அதிக சக்தி வாய்ந்த ஆக்சிஜன் உற்பத்தி ஆலைகள் புதுதில்லி எய்ம்ஸ் மற்றும் ஆர்எம்எல் மருத்துவமனையில் ஒரே வாரத்தில் நிறுவப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்தது.
கோவிட்-19 சிகிச்சை மருத்துவமனைகளில் தீ விபத்து சம்பவங்கள் ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய உள்துறை அறிவுறுத்தியுள்ளது.
இதுதொடர்பாக, அனைத்து மாநில தலைமை செயலாளர்களுக்கு, மத்திய உள்துறை செயலாளர் அனுப்பியுள்ள கடிதத்தில், " கோடைக்காலத்தில் அதிக வெப்பம், பராமரிப்பு குறைவு, மின்னழுத்தம், இவற்றின் ஏதோ ஒன்றின் காரணமாக சமீபத்தில் தீ விபத்து சம்பவங்கள் ஏற்பட்டு உயிர் சேதமும், பொருட் சேதமும் ஏற்பட்டது. இதனால் அனைத்து மருத்துவமனைகளிலும், தீ பாதுகாப்பு நடவடிக்கைகளை உறுதி செய்ய, மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் சுகாதாரத்துறை, மின்துறை, தீயணைப்புத்துறை அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டு, விரிவான செயல் திட்டத்தை தயாரிக்க வேண்டும்.
தமிழ்நாட்டிலும் முழு ஊரடங்கு அறிவிக்க வேண்டும் - ரவிக்குமார் எம்.பி
கேரளாவில் மே 8 முதல் முழு ஊரடங்கு அறிவித்துவிட்டார் அம்மாநில முதல்வர் பினராயி விஜயன். தமிழ்நாட்டிலும் அதுபோல் அறிவிக்கவேண்டும். தாமதிக்கும் ஒவ்வொரு நாளும் நோயின் பரவலை அதிகமாக்கும் என விழுப்புரம் மக்களவை உறுப்பனர் ரவிக்குமார் எம்.பி தெரிவித்தார்.
280 மெட்ரிக் டன் அளவினை விட ஒரு டன் கூட உயர்த்தவில்லை- சு. வெங்கடேசன் குற்றச்சாடு
தமிழகத்திக்கான ஆக்சிஜன் தேவை 500 மெட்ரிக் டன்னாக அதிகரித்த பின்பும், ஏற்கனவே ஒதுக்கீடு செய்த 280 மெட்ரிக் டன் அளவினை விட ஒரு டன் கூட உயர்த்தாமல் மறு உத்தரவு பிறப்பித்திருக்கும் ஒன்றிய அரசு, தமிழக மக்களின் உயிரோடு விளையாடுகிறது. உடனடியாக 500 மெட்ரிக் டன் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என மதுரை நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் சு. வெங்கடேசன் தெரிவித்தார்.
வரும் 8ம தேதி முதல் கேரளாவில் முழு ஊரடங்கு அமல்
கொரோனா இரண்டாவது அலையை கருத்தில் கொண்டு, கேரளாவில் வரும் 8ம் முதல் 16ம் தேதி வரை மாநிலம் தழுவிய பொது முடக்கநிலை அமல்படுத்தப்படுவதாக முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்தார்.
முன்னாள் மத்திய அமைச்சர் அஜித் சிங் கோவிட்- 19 னால் உயிரிழப்பு
முன்னாள் மத்திய அமைச்சர் அஜித் சிங் கொரோனா நோய்த் தொற்று காரணமாக உயிரிழந்தார். அவருக்கு வயது 82. முன்னாள் பாரதப் பிரதமர் சரண் சிங்கின் மகனாவார்.
பாரதிய லோக் தள கட்சி:
1974 ஆண்டின் இறுதியில் இந்திரா காந்தி தலைமையிலான இந்திய தேசிய காங்கிரசு கட்சியை அனைத்திந்திய அளவில் வீழ்த்துவதற்காக 1974-இல் சுதந்திரா கட்சி, ஒடிசாவின் உத்கல் காங்கிரஸ், பாரதிய கிரந்தி தளம், சம்யுக்த சோசலிஸ்ட் கட்சி, பிரஜா சோசலிஸ்ட் கட்சி போன்ற ஏழு பெரிய வலதுசாரி அரசியல் கட்சிகள் ஒன்றாக இணைந்து பாரதிய லோக் தளம் உருவாக்கப்பட்டது. பாரதிய லோக் தள கட்சியின் தலைவராக சரண் சிங் நியமிக்கப்பட்டார்.
1975-1977 வரையிலான காலங்களில் காங்கிரசில், இந்திரா காந்தியின் அரசு கொண்டு வந்த எமர்ஜென்சியை எதிர்த்து ஜெயபிரகாஷ் நாராயணன் அவர்கள் தலைமையில் 1977-இல் பாரதிய ஜனசங்கம் மற்றும் நிறுவன காங்கிரசு கட்சிகள் பாரதிய லோக் தளத்துடன் இணைந்து ஜனதா கட்சியை துவக்கினர்.
1977 இந்தியப் பொதுத் தேர்தலை சந்தித்த ஜனதா கட்சி, இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியை வீழ்த்தி, காங்கிரஸ் கட்சி அல்லாத இந்திய மத்திய அரசின் ஆட்சியை மொரார்ஜி தேசாய் தலைமையில் நிறுவப்பட்டது.
சரண் சிங்கின் மறைவிற்குப் பின்னர், பாரதிய லோக் தள கட்சியை அவரது மகன் அஜித் சிங், ராஷ்டிரிய லோக் தளம் என்று பெயர் மாற்றி கட்சியை நடத்தினார்.
சேலம் உருக்காலையில் உள்ள ஆக்ஸிஜன் தயாரிக்கும் கட்டமைப்பை மேம்படுத்த வேண்டும்
சேலம் உருக்காலையில் உள்ள ஆக்ஸிஜன் தயாரிக்கும் கட்டமைப்பை மேம்படுத்தி மருத்துவ பயன்பாட்டிற்கு பயன்படுத்த நடவடிக்கை எடுக்கவும்,அன்னப்பூர்ணா மற்றும் விநாயகா மிஷன் மருத்துவ கல்லூரிகளில் படுக்கை அறைகளை அரசே ஏற்று கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்த வேண்டும் என சேலம் மக்களவை உறுப்பினர் எஸ். ஆர் பார்த்திபன் கோரிக்கை வைத்துள்ளார்.