மேலும் அறிய

ரூ. 21 கோடி.. அம்மா உணவகங்களில் தரமான உணவு.. அமைச்சர்களுக்கு பறந்த உத்தரவு.. ஸ்டாலின் அதிரடி!

ஏழை எளியோர் பயன்பெறும் வகையில், அம்மா உணவகங்களில் சுவையான தரமான உணவை தயாரித்து வழங்கவும் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுறித்தியுள்ளார்.

அம்மா உணவகங்களைத் தொடர்ந்து சிறப்பாக நடத்த தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார். சமையலறை மற்றும் உணவுக் கூடத்தை தூய்மையாகப் பராமரிக்கவும், ஏழை எளியோர் பயன்பெறும் வகையில், சுவையான தரமான உணவை தயாரித்து வழங்கவும் முதலமைச்சர் அறிவுறித்தியுள்ளார்.

21 கோடி ரூபாய் செலவில் சென்னையில் உள்ள அம்மா உணவகங்களை மேம்படுத்திட ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. தங்கள் பகுதிகளில் உள்ள அம்மா உணவகங்களுக்கு அவ்வப்போது நேரில் சென்று ஆய்வுசெய்து தேவையான உதவிகளை செய்து தருமாறு அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் உள்ளாட்சிப் பிரதிநிதிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், "பெருநகர சென்னை மாநகராட்சியில் 200 கோட்டங்களிலும், 7 அரசு மருத்துவமனைகளிலும் சென்ற ஆட்சிக் காலத்தில் துவங்கப்பட்ட 388 அம்மா உணவகங்கள் தற்போது தொடர்ந்து செயல்பட்டு ஏழை எளியோருக்கு பயனளிப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் இந்த அரசு எடுத்து வருகின்றது.

மேற்கூறிய உணவகங்களின் மூலம் நாளொன்றுக்கு  சராசரியாக சுமார் ஒரு லட்சத்து ஐயாயிரம் பயனாளிகள் உணவு அருந்தும் நிலையில், ஒரு ஆண்டில்  சுமார் நான்கு கோடி  முறை உணவு வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

அம்மா உணவங்களுக்கு தேவைப்படும் அரிசி, கோதுமை  ஆகியவை மானிய விலையில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம் மூலமாகவும், மளிகை பொருட்கள், காய்கறிகள், சமையல் எரிவாயு உருளைகள் போன்றவை திருவல்லிக்கேணி நகரக் கூட்டுறவு சங்கத்தின் மூலமாகவும் வழங்கப்பட்டு வருகின்றன. மேலும், தயிர் ஆவின் நிறுவனத்திடம் பெறப்படுகிறது.

இந்த உணவகங்களில் பணிபுரியும் மகளிர் சுயஉதவிக் குழு உறுப்பினர்களுக்கு நாளொன்றுக்கு 300 ரூபாய் அளிக்கப்பட்டு வருகிறது. இதற்காக கடந்த மூன்றாண்டுகளில் 148.4 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. மேற்கூறிய பல்வேறு செலவினங்களுக்கும் 2021 மே மாதம் முதல் இதுவரை வரை சென்னை மாநகராட்சியால் சுமார் 400 கோடி ரூபாயும், அரிசி மற்றும் கோதுமைக்கான தமிழ்நாடு அரசின் மானியமாக 69 கோடி ரூபாயும் என, மொத்தமாக 469 கோடி ரூபாய் செலவிடப்பட்டு இந்த உணவகங்கள் தொடர்ந்து சிறப்பாக செயல்பட இந்த அரசு வழிவகுத்துள்ளது. 

இன்று (19.7.2024) சென்னை மாநகராட்சி 122ஆவது வார்டில் உள்ள தேனாம்பேட்டை பகுதியில் செயல்பட்டு வரும் அம்மா உணவகத்தை ஸ்டாலின் நேரில் சென்று பார்வையிட்டார்கள். அந்த உணவகம் செயல்படும் முறை, வழங்கப்படும் உணவின் தரம் ஆகியவற்றை சோதனை செய்ததோடு, அங்கு உணவருந்த வந்த பயனாளிகளோடும் உரையாடினார்கள்.

பல்வேறு அம்மா உணவகங்களில் உள்ள பாத்திரங்கள் மற்றும் சமையல் கருவிகள் பழுதடைந்த நிலையில் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து இவற்றை மாற்றி புதிய பாத்திரங்கள் மற்றும் கருவிகளை 7 கோடி ரூபாய் செலவில் வழங்கிட ஆணையிட்டார்கள். மேலும், 14 கோடி ரூபாய் செலவில் இந்த உணவகங்களை புனரமைத்திடவும் ஆணையிட்டுள்ளார்கள். 

தங்கள் பகுதிகளில் உள்ள அம்மா உணவகங்களுக்கு அவ்வப்போது நேரில் சென்று ஆய்வுசெய்து தேவையான உதவிகளை செய்து தருமாறு அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் உள்ளாட்சிப் பிரதிநிதிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்கள்" என கூறப்பட்டுள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Anganwadi Job: எழுத்து தேர்வே கிடையாது- நிரந்தர அரசு வேலை- 7783 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்- எப்படி?
Anganwadi Job: எழுத்து தேர்வே கிடையாது- நிரந்தர அரசு வேலை- 7783 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்- எப்படி?
Annamalai Slams: இந்த ஊழல் இந்தியாவையே உலுக்கும்.. தமிழக அரசியல் சரித்திரத்தை மாற்றும்.. அண்ணாமலை கூறியது என்ன?
இந்த ஊழல் இந்தியாவையே உலுக்கும்.. தமிழக அரசியல் சரித்திரத்தை மாற்றும்.. அண்ணாமலை கூறியது என்ன?
Italy Teacher Suspended: என்னமா.. இப்படி பண்ணிட்டியே மா.? ஆபாச மாடலாகவும் பணியாற்றிய பள்ளி ஆசிரியை.. எங்கு தெரியுமா.?
என்னமா.. இப்படி பண்ணிட்டியே மா.? ஆபாச மாடலாகவும் பணியாற்றிய பள்ளி ஆசிரியை.. எங்கு தெரியுமா.?
ADMK Survey :  ”எடப்பாடியின் ரகசிய சர்வே – ஜெயிக்கிறவங்களுக்குதான் சீட்” பின்னணியில் Ex. உளவுத்துறை..!
ADMK Survey : ”எடப்பாடியின் ரகசிய சர்வே – ஜெயிக்கிறவங்களுக்குதான் சீட்” பின்னணியில் Ex. உளவுத்துறை..!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Sivaangi Krishnakumar | சன் டிவியில் இணைந்த சிவாங்கிவிஜய் டிவி உடன் சண்டையா?அடுத்தடுத்து வெளியேறும் பிரபலங்கள்Ambur Accident News | ஒரே SPOT... 3 விபத்துகள் சுக்கு நூறாய் போன Tourist Van திகில் CCTV காட்சிகள்Velmurugan | திமுக கூட்டணிக்கு Bye! அன்புமணி ராமதாசுக்கு தூது! வேல்முருகன் ப்ளான் என்ன?Ilayaraja : இளையராஜாவிற்கு பாரத ரத்னா? சிம்பொனி-யால் உயரிய இடம்! ரசிகர்கள் உற்சாகம்! | Bharat Ratna

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Anganwadi Job: எழுத்து தேர்வே கிடையாது- நிரந்தர அரசு வேலை- 7783 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்- எப்படி?
Anganwadi Job: எழுத்து தேர்வே கிடையாது- நிரந்தர அரசு வேலை- 7783 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்- எப்படி?
Annamalai Slams: இந்த ஊழல் இந்தியாவையே உலுக்கும்.. தமிழக அரசியல் சரித்திரத்தை மாற்றும்.. அண்ணாமலை கூறியது என்ன?
இந்த ஊழல் இந்தியாவையே உலுக்கும்.. தமிழக அரசியல் சரித்திரத்தை மாற்றும்.. அண்ணாமலை கூறியது என்ன?
Italy Teacher Suspended: என்னமா.. இப்படி பண்ணிட்டியே மா.? ஆபாச மாடலாகவும் பணியாற்றிய பள்ளி ஆசிரியை.. எங்கு தெரியுமா.?
என்னமா.. இப்படி பண்ணிட்டியே மா.? ஆபாச மாடலாகவும் பணியாற்றிய பள்ளி ஆசிரியை.. எங்கு தெரியுமா.?
ADMK Survey :  ”எடப்பாடியின் ரகசிய சர்வே – ஜெயிக்கிறவங்களுக்குதான் சீட்” பின்னணியில் Ex. உளவுத்துறை..!
ADMK Survey : ”எடப்பாடியின் ரகசிய சர்வே – ஜெயிக்கிறவங்களுக்குதான் சீட்” பின்னணியில் Ex. உளவுத்துறை..!
Fair Delimitation : ”அழைத்த மு.க.ஸ்டாலின் – தமிழ்நாட்டில் குவிந்த தலைவர்கள்” யார், யார் தெரியுமா..?
”அழைத்த மு.க.ஸ்டாலின் – தமிழ்நாட்டில் குவிந்த தலைவர்கள்” யார், யார் தெரியுமா..?
CUET UG 2025: மாணவர்களே.. இன்றே கடைசி- க்யூட் தேர்வுக்கு விண்ணப்பித்து விட்டீர்களா? வழிகாட்டல் இதோ!
CUET UG 2025: மாணவர்களே.. இன்றே கடைசி- க்யூட் தேர்வுக்கு விண்ணப்பித்து விட்டீர்களா? வழிகாட்டல் இதோ!
KKR vs RCB: 17 ஆண்டுகள் தீராத வலி... மீண்டும் மோதும் RCB-KKR! 2008-ல் நடந்தது என்ன?
KKR vs RCB: 17 ஆண்டுகள் தீராத வலி... மீண்டும் மோதும் RCB-KKR! 2008-ல் நடந்தது என்ன?
Coimbatore Airport: பிரமாண்டமாகும் கோவை விமான நிலையம், சர்வதேச பயணங்களுக்கான வசதிகள் - ஓட்டல் டூ சாலை
Coimbatore Airport: பிரமாண்டமாகும் கோவை விமான நிலையம், சர்வதேச பயணங்களுக்கான வசதிகள் - ஓட்டல் டூ சாலை
Embed widget