மேலும் அறிய

"நவீன எமர்ஜென்சி.. அடக்குமுறைக்கு அடிபணிய மாட்டார்கள்" கொதிக்கும் தமிழக பாஜக!

அமைதியான மக்கள் புரட்சி மூலம் திமுக என்ற கட்சி அரசியலில் இருந்து அப்புறப்படுத்தப்படும் என தமிழக பாஜக தெரிவித்துள்ளது.

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளான சம்பவம் தமிழகத்தில் தொடர் அதிர்வலைகளை ஏற்படுத்தி வரும் நிலையில், எதிர்க்கட்சிகள் தங்கள் போராட்டத்தை தீவிரப்படுத்தியுள்ளன. ஆனால், அனுமதி இன்றி போராட்டம் நடத்துவதாகக் கூறி தமிழக அரசு அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்து வருகிறது.

இந்த நிலையில், இந்த விவகாரத்தில் திமுக அரசின் மீது கடும் குற்றச்சாட்டுகளை முன்வைத்த தமிழக பாஜக, "நவீன எமர்ஜென்சி அடக்குமுறைக்கு மக்கள் அடிபணிய மாட்டார்கள்" என தெரிவித்துள்ளது. இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள தமிழக பாஜகவின் செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத், "பெண்ணுரிமைக்கு எதிரான, வல்லூறுகளின், திராவிட மாடல் திமுக ஆட்சியை, தமிழகப் பெண்களே அகற்றுவர்.

விஸ்வரூபம் எடுக்கும் அண்ணா பல்கலைக்கழக வழக்கு:

திமுக அரசு மூன்றாண்டுகளாக பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. பெண் குழந்தைகள், கல்லூரி மாணவிகள், நடுத்தர பெண்கள் முதியவர்கள் என்ற பாகுபாடு இல்லாமல் அனைவருமே திமுக அரசின் நிர்வாக சீர்கேட்டால், காவல்துறையின் மெத்தனத்தால் நாள்தோறும் பாதிக்கப்படுவது தொடர் கதை ஆகி வருகிறது.

பொறுத்து பொறுத்து பார்த்த தமிழக மக்கள், அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் கொடுமையை கண்டித்து  தன் எழுச்சியாக தன்முனைப்புடன் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நீதியை நிலைநாட்ட வேண்டிய திமுக அரசும், சட்டத்தை அமல்படுத்த வேண்டிய தமிழக காவல்துறையும், கடமையை செய்யாமல் சோரம் போக வேண்டிய சூழ்நிலையை உருவாக்கியது "கயவனா? கயவர்களா?  " யார் அவர்? " ஏன் இந்த மாபாதகம் ?" என்கிற கேள்வியை தமிழக மக்களின் மனதில் எரிமலையாய் வெடித்ததை தொடர்ந்து அனைத்து கட்சிகளுமேதற்பொழுது திமுக அரசை எதிர்த்து போராட்டம் செய்து வருகின்றன.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் சாட்டையடி போராட்டம் திமுக அரசில் பெண்களுக்கு எதிரான வன்முறைக்கு முடிவு கட்டுவது ஒவ்வொருவரின் கடமை என்பதை உணர்ந்து, தமிழகத்தின் சமூக நல இயக்கங்கள், கல்லூரி மாணவ, மாணவிகள், அனைத்து அரசியல் கட்சிகள், பெண்ணுரிமை சங்கங்கள் அனைத்துமே களத்தில் இறங்கி போராட்டம் நடத்துவதை அராஜகத்தோடு திமுக அரசின் காவல்துறை நசுக்க முற்படுவது சட்டவிரோதமானது.

கொதிக்கும் தமிழக பாஜக:

இன்று தமிழக பாஜக மகளிர் அணி சார்பாக மதுரையில் இருந்து சென்னை நோக்கி நீதி கேட்டு நெடும் பயணம் தொடங்க முற்படும்போது தேசிய செயற்குழு உறுப்பினர் குஷ்பு மற்றும் தமிழக பாஜக மகளிர் அணி தலைவி உமாரதி தலைமையில் பாஜக மகளிர் அணியினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களில் இருந்து போராட்டத்தில் கலந்து கொள்ள மதுரையை நோக்கி கிளம்பிய பாஜக மகளிர் அணியினர் முன்னிரவில் தடுத்து நிறுத்தி கைது செய்யப்பட்டுள்ளனர்.

மக்கள் விரோத திமுக அரசு எதிர்த்து போராட்டத்தில் ஈடுபடும் தமிழக பாஜகவின் மீதும் மற்ற கட்சிகள் மீதும் காவல்துறையின் தொடர் அடக்கு முறையை பயன்படுத்தி மிரட்டுவது, தடுக்க நினைப்பது, வழக்கு பதிவு, கைது செய்வது என்று நவீன எமர்ஜென்சி காலத்தை நினைவுபடுத்து போல் செயல்படுவதை தமிழக முதல்வர் ஸ்டாலின் நிறுத்திக் கொள்ள வேண்டும். இல்லையென்றால் அமைதியான மக்கள் புரட்சி மூலம் திமுக என்ற கட்சி அரசியலில் இருந்து அப்புறப்படுத்தப்படும்" என குறிப்பிட்டுள்ளார்.

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Actor Ajith:
Actor Ajith: "இனி நடிக்கமாட்டேன்" அஜித் தந்த ஷாக்! பேரதிர்ச்சியில் ரசிகர்கள்
நேற்று ”யார் அந்த சார்” பேட்சுடன் அதிமுக; இன்று ”இவன்தான் அந்த சார்” பலகையுடன் திமுக: பரபரப்பில் சட்டப்பேரவை
நேற்று ”யார் அந்த சார்” பேட்சுடன் அதிமுக; இன்று ”இவன்தான் அந்த சார்” பலகையுடன் திமுக: பரபரப்பில் சட்டப்பேரவை
விவசாயிகளே! காட்டுப்பன்றிகளை இனி சுட்டுத் தள்ளலாம் - யாருக்கு அந்த அதிகாரம்?
விவசாயிகளே! காட்டுப்பன்றிகளை இனி சுட்டுத் தள்ளலாம் - யாருக்கு அந்த அதிகாரம்?
Ind W Vs Ire W; அசால்டாக அடித்த இந்தியா... அயர்லாந்தின் இளம் கேப்டன் கேபியின் ஆட்டம் வீண்...
Ind W Vs Ire W; அசால்டாக அடித்த இந்தியா... அயர்லாந்தின் இளம் கேப்டன் கேபியின் ஆட்டம் வீண்...
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Taiwan Couple Marriage in India : அம்மி மிதித்து..அருந்ததி பார்த்து திருமணம் செய்த தைவான் தம்பதிTirupati Stampede |  Pawan  VS Jagan Mohan டவுன் டவுன் ஜெய் ஜெய் கோஷம் போர்களமான திருப்பதி HOSPITALSeeman Periyar Issue : Vadakalai Vs Thenkalai fight : வடகலை Vs தென்கலை”யார் பெரியவா..?”களேபரமான காஞ்சிபுரம் கோயில்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Actor Ajith:
Actor Ajith: "இனி நடிக்கமாட்டேன்" அஜித் தந்த ஷாக்! பேரதிர்ச்சியில் ரசிகர்கள்
நேற்று ”யார் அந்த சார்” பேட்சுடன் அதிமுக; இன்று ”இவன்தான் அந்த சார்” பலகையுடன் திமுக: பரபரப்பில் சட்டப்பேரவை
நேற்று ”யார் அந்த சார்” பேட்சுடன் அதிமுக; இன்று ”இவன்தான் அந்த சார்” பலகையுடன் திமுக: பரபரப்பில் சட்டப்பேரவை
விவசாயிகளே! காட்டுப்பன்றிகளை இனி சுட்டுத் தள்ளலாம் - யாருக்கு அந்த அதிகாரம்?
விவசாயிகளே! காட்டுப்பன்றிகளை இனி சுட்டுத் தள்ளலாம் - யாருக்கு அந்த அதிகாரம்?
Ind W Vs Ire W; அசால்டாக அடித்த இந்தியா... அயர்லாந்தின் இளம் கேப்டன் கேபியின் ஆட்டம் வீண்...
Ind W Vs Ire W; அசால்டாக அடித்த இந்தியா... அயர்லாந்தின் இளம் கேப்டன் கேபியின் ஆட்டம் வீண்...
ஃபாலோ பண்ணா 5 ஆண்டு; வன்கொடுமைக்கு 14 ஆண்டு- மரண தண்டனையும் உண்டு! பெண்களுக்காக நிறைவேறியது புது சட்டம்!
ஃபாலோ பண்ணா 5 ஆண்டு; வன்கொடுமைக்கு 14 ஆண்டு- மரண தண்டனையும் உண்டு! பெண்களுக்காக நிறைவேறியது புது சட்டம்!
Pratika Rawal: பயங்கர திறமையா இருக்கே! இந்திய கிரிக்கெட்டின் புதிய ஸ்டார் - யார் இந்த 2 கே கிட் ப்ரதிகா ராவல்?
Pratika Rawal: பயங்கர திறமையா இருக்கே! இந்திய கிரிக்கெட்டின் புதிய ஸ்டார் - யார் இந்த 2 கே கிட் ப்ரதிகா ராவல்?
TN Rain: உசார் மக்களே.! நாளை மறுநாள் 5 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை
உசார் மக்களே.! நாளை மறுநாள் 5 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை
Alert: பொங்கல் விடுமுறை.. பைக்ல போறவங்க உஷார்.. தயவு செஞ்சு இந்த தப்பை பண்ணாதீங்க..!
Alert: பொங்கல் விடுமுறை.. பைக்ல போறவங்க உஷார்.. தயவு செஞ்சு இந்த தப்பை பண்ணாதீங்க..!
Embed widget