TN 10th Result Centums:கணிதத்தில் கலக்கிய மாணவர்கள் - எவ்வளவு பேர் எந்த பாடத்தில் சதம்? பாடவாரியாக லிஸ்ட் இதோ!
Tamil Nadu 10th Result 2024 Centum Scorers: 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தமிழ் மொழி பாடத்தில் 8 பேர் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்றும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
தமிழ்நாட்டில் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு வெளியான நிலையில் தமிழ் மொழி பாடத்தில் 8 பேர் சதம் அடித்துள்ளனர். பாட வாரியா சதம் எடுத்த மாணவர்களின் எண்ணிக்கை பற்றி விரிவாக பார்க்கலாம்.
1. | தமிழ் மொழி பாடம் | 8 |
2. | ஆங்கிலம் | 415 |
3. | கணிதம் | 20,691 |
4. | அறிவியல் | 5104 |
5. | சமூக அறிவியல் | 4428 |
தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தின் கீழ் பயின்ற 10-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள், கடந்த மார்ச் மாதம் 26ம் தேதி தொடங்கி ஏப்ரல் 8 ஆம் தேதி வரை நடைபெற்றது. இதில் 12,616 பள்ளிகளைச் சேர்ந்த 8,94,264 மாணவ, மாணவியர் எழுதினர். மாணவிகளின் எண்ணிக்கை: 4,47,061 மாணவர்களின் எண்ணிக்கை: 4,47,203.
அதோடு, 28 ஆயிரத்து 827 தனித்தேர்வர்கள், 235 சிறைவாசிகள் பொதுத்தேர்வை எழுதினர். இந்த தேர்வானது, 4 ஆயிரத்து 107 மையங்களில் நடைபெற்றது. இதையடுத்து விடைத்தாள்களை திருத்தும் பணிகள் அனைத்தும் நிறைவடைந்த நிலையில், இன்று காலை 9.30 மணியளவில் சென்னை டி.பி.ஐ வளாகத்தில் இருக்கும் அரசு தேர்வுகள் மையத்தில் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.
முடிவுகளை, http://tnresults.nic.in அல்லது http://dge.tn.gov.in ஆகிய இணையதள முகவரிகள் வாயிலாக மாணவர்கள் வீட்டிலிருந்தபடியே தெரிந்துகொள்ளலாம். அதேபோல், மாணவர்கள் ஏற்கனவே பதிவு செய்துள்ள செல்போன் எண்ணுக்கு தேர்வு முடிவுகள் குறுஞ்செய்தி மூலம் அனுப்பி வைக்கப்பட்டது.
9 லட்சத்து 10 ஆயிரத்து 24 பேரில் 8.18 லட்சம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு 10ம் வகுப்புபொதுத்தேர்வில் 91.39% மாணாக்கர்கள் தேர்ச்சி பெற்று இருந்த நிலையில், நடப்பாண்டில் 91.55 சதவிகிதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டை காட்டிலும் 0.16 % கூடுதலாக தேர்ச்சி பெற்றுள்ளனர்.
TN 10th Result 2024 LIVE: வெளியானது 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் - Fail ஆனவர்கள் இதை மறக்காதீங்க!