(Source: ECI/ABP News/ABP Majha)
TN 10th Result 2024 LIVE: வெளியானது 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் - முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து
Tamil Nadu 10th Result 2024 LIVE Updates: 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் தொடர்பான விவரங்களை உடனடியாக அறிய, ஏபிபி நாடு செய்தி இணையதளத்துடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.
LIVE
Background
Tamil Nadu 10th Result 2024 LIVE Updates: 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியானது.
10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்:
தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தின் கீழ் பயின்ற 10-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள், கடந்த மார்ச் மாதம் 26ம் தேதி தொடங்கி ஏப்ரல் 8 ஆம் தேதி வரை நடைபெற்றது. இதில் 12,616 பள்ளிகளைச் சேர்ந்த 4,47,061 மாணவிகள் மற்றும், 4,47,203 மாணவர்கள் என மொத்தம் 8,94,264 மாணவ, மாணவியர் தேர்வு எழுதினர். அதோடு, 28 ஆயிரத்து 827 தனித்தேர்வர்கள், 235 சிறைவாசிகள் பொதுத்தேர்வை எழுதினர். இந்த தேர்வானது, 4 ஆயிரத்து 107 மையங்களில் நடைபெற்றது. இதையடுத்து விடைத்தாள்களை திருத்தும் பணிகள் அனைத்தும் நிறைவடைந்த நிலையில், இன்று காலை 9.30 மணியளவில் சென்னை டி.பி.ஐ வளாகத்தில் இருக்கும் அரசு தேர்வுகள் மையத்தில் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன.
முடிவுகளை அறிந்துகொள்வது எப்படி?
மாணவ, மாணவியர்கள் தங்களது 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை எளிதில் அறிந்துகொள்ள, பள்ளிக்கல்வித்துறை பல்வேறு ஏற்பாடுகளை செய்துள்ளது. அதன்படி,
- காலை 9.30 மணிக்கு வெளியாகும் தேர்வு முடிவுகளை, http://tnresults.nic.in அல்லது http://dge.tn.gov.in ஆகிய இணையதள முகவரிகள் வாயிலாக மாணவர்கள் வீட்டிலிருந்தபடியே தெரிந்துகொள்ளலாம் என அரசு தேர்வுகள் ஆணையம் தெரிவித்துள்ளது.
- மாணவர்கள் ஏற்கனவே பதிவு செய்துள்ள செல்போன் எண்ணுக்கு தேர்வு முடிவுகள் குறுஞ்செய்தி மூலம் அனுப்பி வைக்கப்படும்.
- மாநிலம் முழுவதும் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் செயல்படும் தேசியத் தகவலியல் மையங்களில் (National Informatics Centres) 10ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகளை அறியலாம்.
- அனைத்து நூலகங்களிலும் கட்டணம் இல்லாமல், தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.
- மாணவர்கள் தாங்கள் தேர்வு எழுதிய பள்ளிகளில் தேர்வு முடிவுகளையும் அறிந்துகொள்ளவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கடந்தாண்டு எஸ்.எஸ்.எல்.சி., தேர்ச்சி விவரம்:
கடந்தாண்டு தமிழ்நாட்டில் நடைபெற்ற பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதிய, 9,14, 320 பேர் தேர்வு எழுதினர். அதில் மாணவர்கள் 88.16% மற்றும் மாணவிகள் 94.64% சதவிகிதம் என மொத்தமாக 91.39% மாணாக்கர்கள் தேர்ச்சி பெற்றனர். மாணவர்களை விட மாணவியர்கள் 6.50% அதிகம் தேர்ச்சி பெற்றனர். 10,808 மாற்றுத்திறனாளிகள் தேர்வெழுதிய நிலையில், 9,703 பேர் தேர்ச்சி பெற்றர். இதேபோல் 264 சிறைவாசிகள் 10 ஆம் வகுப்பு தேர்வை எழுதியதில், 112 பேர் தேர்ச்சி பெற்றனர். கடந்த ஆண்டை விட நடப்பாண்டில் தேர்ச்சி விகிதம் 0.16 சதவிகிதம் உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
முதலமைச்சர் ஸ்டாலின் மாணவர்களுக்கு வாழ்த்து..!
Tamil Nadu 10th Result 2024: 10ம் பொதுத்தேர்வு முடிவுகள் தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், “மேல்நிலைக் கல்விக்கு நுழைவு வாயிலாய் அமையும் பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ள அனைத்து மாணவர்களுக்கும் வாழ்த்துகள்! மாணவச் செல்வங்களே... உங்களது எதிர்காலத்தைத் திட்டமிட்டு வடிவமைத்துக் கொள்வதற்கான அடித்தளத்தை வலிமையாக அமைத்துக் கொள்ளுங்கள்! குறைவான மதிப்பெண் பெற்றவர்கள் அடுத்த வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்! மேல்நிலைக் கல்வி - தொழிற்கல்வி எனப் பல்வேறு வாய்ப்புகள் உள்ளன. உங்களது பாதைக்கு வழிகாட்ட #நான்_முதல்வன் உள்ளிட்ட நமது அரசின் திட்டங்கள் உள்ளன. கல்வி எனும் அறிவாயுதம் உங்களுக்கு என்றும் துணையாக அமையட்டும்!” என்று குறிப்பிட்டுள்ளார்.
மறுகூட்டல்/ மறுமதிப்பீடு எப்போது?
Tamil Nadu 10th Result 2024: 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீட்டிற்கு மாணவர்கள் வரும் 15ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என தேர்வுத்துறை அறிவித்துள்ளது.
சிறைவாசிகள் 87.69% பேர் தேர்ச்சி
Tamil Nadu 10th Result 2024: 10ம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதிய 260 சிறைவாசிகளில், 228 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
ஜுலை 2ம் தேதி முதல் துணைத்தேர்வுகள்..
Tamil Nadu 10th Result 2024: 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் வெற்றி வாய்ப்பை இழந்த மாணவர்களுக்கான உடனடி துணைத்தேர்வுகள் ஜுலை 2ம் தேதி முதல் தொடங்க உள்ளது. இதற்காக நாளை முதல் விண்ணப்பிக்கலாம்.
சரிந்த சென்னை - தேர்ச்சி விகிதத்தில் 37வது இடம்
Tamil Nadu 10th Result 2024: 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், சென்னை வருவாய் மாவட்டத்தைச் சேர்ந்த அரசுப்பள்ளிகள் வெறும் 79.07 சதவிகித தேர்ச்சியை மட்டுமே பதிவு செய்துள்ளன. அதாவது மாநில அளவில் சென்னை 37வது இடத்தில் உள்ளது.