மேலும் அறிய

ADMK MLA Resign: அதிர்ச்சி! அதிமுக எம்எல்ஏ-க்கள் 3 பேர் திடீர் ராஜினாமா - யார்? யார்?

அதிமுக-வில் உட்கட்சி மோதல் வெடித்து வரும் சூழலில் வேலுமணிக்கு ஆதரவான 3 எம்எல்ஏ-க்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.

அதிமுக-வில் உட்கட்சி மோதல் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், தற்போது புதிய அதிர்ச்சி அந்த கட்சி தொண்டர்களுக்கு உருவாக உள்ளது. 

3 எம்எல்ஏ-க்கள் ராஜினாமா:

எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக சிவி சண்முகம், எஸ்பி வேலுமணி தரப்பு எம்எல்ஏ-க்கள் போர்க்கொடி தூக்கிய நிலையில், வேலுமணி ஆதரவு எம்எல்ஏ-க்கள் 3 பேர் திடீரென ராஜினாமா செய்துள்ளனர். தாராபுரம் எம்எல்ஏ சத்யபாமா, பெருந்துறை எம்எல்ஏ ஜெயக்குமார் மற்றும் மதுராந்தகம் எம்எல்ஏ மரகதம் குமரவேல் இன்று தங்களது பதவியை ராஜினாமா செய்துள்ளனர். இது அதிமுக-வினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது.

ராஜினாமா கடிதம்:

இந்த 3 எம்எல்ஏ-க்களும் தங்களது ராஜினாமா கடிதத்தை சபாநாயகர் ஜேசிடி பிரபாகரை தலைமைச் செயலகத்தில் உள்ள அவரது அறையில் நேரில் சந்தித்து அளித்தனர். அவர்களது ராஜினாமா கடிதத்தை சபாநாயகர் ஏற்றுக்கொண்டார். 

அதிமுக-வில் நடந்து வரும் சிவி சண்முகம், எஸ்பி வேலுமணி மற்றும் எடப்பாடி பழனிசாமி மோதல் காரணமாக தங்களது அரசியல் எதிர்காலம் கேள்விக்குறியாகிவிடும் என்ற காரணத்தால் இவர்கள் தற்போது தங்களது எம்எல்ஏ-க்கள் பதவியை ராஜினாமா செய்து தவெக-வில் ஐக்கியமாகியுள்ளனர். 

யார்? யார்?

மதுராந்தகம் எம்எல்ஏ-வாக இருந்த மரகதம் குமரவேல் தவெக வேட்பாளர் எழில் கேத்ரின் எழில்மலையை காட்டிலும் 7 ஆயிரம் வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார். தாராபுரம் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்த சத்யபாமா திமுக வேட்பாளர் இந்திராணியைக் காட்டிலும் 16 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பெருந்துறை எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்த ஜெயக்குமார் திமுக வேட்பாளர் வெங்கடாச்சலத்தைக் காட்டிலும் 10 ஆயிரம் வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார்.

அதிமுக-வில் நடப்பது என்ன?

தமிழ்நாட்டின் சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாகிய பிறகு அதிமுக கடந்த தேர்தலைக் காட்டிலும் இந்த தேர்தலில் மிகவும் குறைந்த தொகுதிகளை வெற்றி பெற்றது. 47 தொகுதிகள் மட்டுமே அதிமுக வெற்றி பெற்றிருந்த சூழலில் அதிமுக-வில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக சிவி சண்முகம், எஸ்பி வேலுமணி தரப்பினர் திரும்பினர். 

தவெக அமைச்சரவையில் இடம் கிடைக்கும் என்று எடப்பாடி பழனிசாமி அதிருப்தி எம்எல்ஏ-க்கள் இருந்த நிலையில், யாருக்கும் விஜய் இடம் அளிக்கவில்லை. இந்த சூழலில், சிவி சண்முகம், எஸ்பி வேலுமணி தரப்பு எம்எல்ஏ-க்கள் சிலர் எடப்பாடி பழனிசாமி பக்கமே ஐக்கியமாகி வருகின்றனர். இதனால், அடுத்தடுத்த நாட்களில் அதிமுக-வில் இன்னும் உட்கட்சி மோதல் வெடிக்கும் என்றே கருதப்படுகிறது.

Advertisement

தலைப்பு செய்திகள்

சிவகங்கையில் 18ஆம் நூற்றாண்டு கல்வெட்டில் மறைந்த நில தான வரலாறு!
சிவகங்கையில் 18ஆம் நூற்றாண்டு கல்வெட்டில் மறைந்த நில தான வரலாறு!
CM Vijay: பட்ஜெட் கூட்டத்தொடர் முடியட்டும்... பறிபோகப்போகும் பதவி..! அச்சத்தில் அமைச்சர்கள்!
CM Vijay: பட்ஜெட் கூட்டத்தொடர் முடியட்டும்... பறிபோகப்போகும் பதவி..! அச்சத்தில் அமைச்சர்கள்!
ஆடி பரணியும் கிருத்திகையும் ஒரே நாளில்! வல்லக்கோட்டை கோயிலில் காத்திருக்கும் பேரதிசயம்!
ஆடி பரணியும் கிருத்திகையும் ஒரே நாளில்! வல்லக்கோட்டை கோயிலில் காத்திருக்கும் பேரதிசயம்!
விவசாயிகளுக்கு சூப்பர் நியூஸ்! 90% மானியத்தில் மின் இணைப்பு - உடனே விண்ணப்பியுங்கள்!
விவசாயிகளுக்கு சூப்பர் நியூஸ்! 90% மானியத்தில் மின் இணைப்பு - உடனே விண்ணப்பியுங்கள்!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: பட்ஜெட் கூட்டத்தொடர் முடியட்டும்... பறிபோகப்போகும் பதவி..! அச்சத்தில் அமைச்சர்கள்!
CM Vijay: பட்ஜெட் கூட்டத்தொடர் முடியட்டும்... பறிபோகப்போகும் பதவி..! அச்சத்தில் அமைச்சர்கள்!
Seeman: தவெக பட்ஜெட் வெற்று அறிக்கை... வெட்கக்கேடு - விஜய் அரசின் நிதிநிலை அறிக்கை விமர்சித்த சீமான்
Seeman: தவெக பட்ஜெட் வெற்று அறிக்கை... வெட்கக்கேடு - விஜய் அரசின் நிதிநிலை அறிக்கை விமர்சித்த சீமான்
MK Stalin on Budget: ‘'Blast Blast'-ஆக மக்கள் எதிர்பார்த்த பட்ஜெட்.. ‘Waste Waste' ஆக இருக்கு.!“ - விளாசிய மு.க. ஸ்டாலின்
‘'Blast Blast'-ஆக மக்கள் எதிர்பார்த்த பட்ஜெட்.. ‘Waste Waste' ஆக இருக்கு.!“ - விளாசிய மு.க. ஸ்டாலின்
Hyundai Creta EV On EMI: 475 கிமீ ரேஞ்ச் தரும் ஹூண்டாய் கிரெட்டா EV கார ரூ.2 லட்சம் முன்பணத்தில் வாங்கினால் EMI எவ்வளவு வரும்.?
475 கிமீ ரேஞ்ச் தரும் ஹூண்டாய் கிரெட்டா EV கார ரூ.2 லட்சம் முன்பணத்தில் வாங்கினால் EMI எவ்வளவு வரும்.?
தஞ்சை அரண்மனையில் தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்!
தஞ்சை அரண்மனையில் தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்!
ஒரே சார்ஜில் 150 கி.மீட்டர் மைலேஜ்.. வரப்போகிறது Ather Konarc இ ஸ்கூட்டர்! விலை எவ்ளோ?
ஒரே சார்ஜில் 150 கி.மீட்டர் மைலேஜ்.. வரப்போகிறது Ather Konarc இ ஸ்கூட்டர்! விலை எவ்ளோ?
Aadi Krithigai 2026: அரோகரா..! ஆடிக்கிருத்திகை நாளையா? நாளை மறுநாளா? விரதம் இருப்பது எப்படி?
Aadi Krithigai 2026: அரோகரா..! ஆடிக்கிருத்திகை நாளையா? நாளை மறுநாளா? விரதம் இருப்பது எப்படி?
iPhone 17 Pro Max Discount: ஏங்க, ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ்ல ரூ.17,000 தள்ளுபடிங்க.! அருமையான வாய்ப்ப விட்றாதீங்க; எங்க வாங்குறது.?
ஏங்க, ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ்ல ரூ.17,000 தள்ளுபடிங்க.! அருமையான வாய்ப்ப விட்றாதீங்க; எங்க வாங்குறது.?
Embed widget