மேலும் அறிய
ஆதிதிராவிடர் & பழங்குடியினருக்கு மானியக் கடன்.. விண்ணப்பிப்பது எப்படி?
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இனத்தைச் சார்ந்தவர்கள் தாட்கோ மூலம் செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டங்களின் கீழ் பயன்பெற விண்ணப்பிக்கலாம்.

கடன் உதவி
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) சார்பாக செயல்படுத்தப்படும் வாழ்வாதார திட்டங்கள் மூலம் மானியத்துடன் கூடிய கடனுதவி பெற, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விண்ணப்பதாரர்கள் இ-சேவை மையம் வாயிலாக விண்ணப்பித்து பயன்பெறலாம்.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த திட்டம்
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) சார்பாக செயல்படுத்தப்படும் வாழ்வாதார திட்டங்கள் மூலம் மானியத்துடன் கூடிய கடன் உதவி பெற, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விண்ணப்பதாரர்கள் தமிழ்நாடு அரசு இ-சேவை மையம் மூலமாக எளிய முறையில் விண்ணப்பித்திடலாம். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த முதலமைச்சரின்- ஆதிதிராவிட மற்றும் பழங்குடியினர் சமூக பொருளதார மேம்பாட்டிற்காக தொழில் முனைவுத் திட்டம், நன்னிலம் மகளிர் நில உடமை திட்டம் மற்றும் PM-AJAY போன்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
தாட்கோ மூலம் செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டங்களின் கீழ் பயன்பெறலாம்
இத்திட்டங்களில் பயன்பெற விண்ணப்பதாரர்கள் இணையதளம் மற்றும் மாவட்ட மேலாளர் அலுவலகம் வாயிலாக விண்ணப்பங்களை பதிவு செய்து வருகிறார்கள். இதனை எளிமைப்படுத்தும் விதமாக, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர்கள், அவர்கள் வசிக்கும் பகுதிக்கு அருகாமையிலுள்ள தமிழ்நாடு அரசு இ-சேவை மையத்தின் வாயிலாக தாட்கோ மூலம் செயல்படுத்தப்படும் CM-ARISE, PM-AJAY மற்றும் நன்னிலம் மகளிர் நில உடமை திட்டம் ஆகியவைகளின் கீழ் விண்ணப்பிப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. எனவே, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இனத்தைச் சார்ந்தவர்கள் தாட்கோ மூலம் செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டங்களின் கீழ் பயன்பெற தமிழ்நாடு அரசு இ-சேவை மையங்கள் மூலமாக விண்ணப்பிக்கலாம் என சிவகங்கை மாவட்ட ஆட்சித்தலைவர் கா.பொற்கொடி, தெரிவித்துள்ளார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
Advertisement
தலைப்பு செய்திகள்
பொழுதுபோக்கு
தமிழ்நாடு
பொழுதுபோக்கு
அரசியல்
Advertisement
Advertisement





















