மாணவிகளுக்கு பாலியல் தொல்லை : 11-ஆம் தேதிக்குள் ஆஜராக சிவசங்கர் பாபாவுக்கு சம்மன்

பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ள சிவசங்கர் பாபா, வரும் 11-ஆம் தேதிக்குள் ஆஜராக வேண்டும் என்று குழந்தைகள் பாதுகாப்பு நல உரிமை ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள கேளம்பாக்கத்தில் அமைந்துள்ளது தனியார் சர்வதேச உண்டு உறைவிடப்பள்ளி. இந்த பள்ளியை சிவசங்கர் பாபா என்பவர் நிர்வகித்து வருகிறார். இவர் மீது கடந்த சில தினங்களுக்கு முன்பு அந்த பள்ளியில் பயின்று வெளியேறி இரு மாணவிகள் பாலியல் குற்றச்சாட்டுகளை கூறினார். மேலும், அந்த மாணவிகள் சிவங்கர் பாபா தான் கடவுள் ஸ்ரீ கிருஷ்ணரின் அவதாரம் என்று கூறிக்கொண்டும், பள்ளியில் படிக்கும் மாணவிகள் பலரையும் கோபிகைகள் என்று மூளைச்சலவை செய்து அவர்களுடன் உறவில் ஈடுபட்டு வந்ததாகவும் குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர்.மாணவிகளுக்கு பாலியல் தொல்லை : 11-ஆம் தேதிக்குள் ஆஜராக சிவசங்கர் பாபாவுக்கு சம்மன்

இதையடுத்து, அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அனைத்து தரப்பினரும் சமூக வலைதளங்களில் வலுவாக குரல் கொடுக்கத் தொடங்கினர். குற்றம்சாட்டிய மாணவிகள் இருவரும் அங்கிருந்து தப்பித்து வந்துள்ளதாகவும் அதிர்ச்சி தகவல்களை தெரிவித்தனர். இதையடுத்து, தமிழ்நாடு குழந்தைகள் நல பாதுகாப்பு ஆணைய அதிகாரி சரஸ்வதி ரங்கசாமி தலைமையில் 4 பேர் கொண்ட குழுவினர், பள்ளியில் நேற்று சோதனை நடத்தினர். அப்போது, திருப்போரூர் காவல் நிலைய காவல்துறையினரும் சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனை நடந்தபோது ஆசிரமத்தில் சிவசங்கர் பாபா இல்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில், மாணவிகள் அளித்த பாலியல் குற்றச்சாட்டில் முகாந்திரம் இருப்பதாக கருதுவதால், வரும் 11-ஆம் தேதிக்குள் இந்த புகார் குறித்த விரிவான விசாரணைக்கு சிவசங்கர் பாபா நேரில் ஆஜராக வேண்டும் என்று இன்று அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

சிவசங்கர் என்ற இயற்பெயர் கொண்ட இவர், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தான் ஸ்ரீகிருஷ்ணரின் அவதாரம் என்று தன்னுடைய பெயரை சிவசங்கர் பாபா என்று மாற்றி வைத்துக் கொண்டார். பின்னர், தன்னுடைய பக்தர்கள் இருவர் இலவசமாக வழங்கிய இடத்தில்தான் இந்த பள்ளியை கட்டி நிர்வகித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இதுமட்டுமின்றி, சிவசங்கர் பாபா அங்கு பயிலும் மாணவிகள் அனைவரையும் கடந்த ஜென்மத்தில் நீங்கள் எல்லாம் கோபிகைகளாக பிறந்தீர்கள் என்று மூளைச்சலவை செய்து பாலியல் தொல்லைகள் அளித்து வந்ததாகவும், வெளிநாடு சென்றால்கூட சிறுமிகளை அழைத்துச் செல்வதை வாடிக்கையாக வைத்திருந்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.மாணவிகளுக்கு பாலியல் தொல்லை : 11-ஆம் தேதிக்குள் ஆஜராக சிவசங்கர் பாபாவுக்கு சம்மன்

சென்னையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தனியார் பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் மீது பாலியல் குற்றச்சாட்டுகள் ஆதாரங்களுடன் வெளியான நிலையில் அவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். இதையடுத்து தொடர்ச்சியாக சென்னையில் மேலும் சில பள்ளிகளில் ஆசிரியர்கள் சிலர் மீது பாலியல் குற்றச்சாட்டுகள் வெளியானது. இந்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக காவல்துறையினர் வழக்குகள் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இந்த நிலையில், சிவசங்கர் பாபா மீதும் விரைவில் பாலியல் குற்றச்சாட்டு அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சிவசங்கர் பாபா மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பிரபல பாடகி சின்மயி டுவிட்டரில் கடந்த சில தினங்களுக்கு முன்பு வலியுறுத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க : Karunanidhi birthday: ‛மறையவில்லை... மறைந்திருந்து பார்க்கிறீர்கள்’ கருணாநிதி பிறந்த நாளில் ஸ்டாலின் உருக்கம்!

Tags: Sexual Harassment shivshangar baba school girls summon

தொடர்புடைய செய்திகள்

Me Too : ”நோ” சொல்லியும் நடந்தது : ஐ.ஆர்.எஸ் அதிகாரி பூ.கொ.சரவணன் மீது குவியும் புகார்கள்!

Me Too : ”நோ” சொல்லியும் நடந்தது : ஐ.ஆர்.எஸ் அதிகாரி பூ.கொ.சரவணன் மீது குவியும் புகார்கள்!

திருவண்ணாமலை : குறைந்துவரும் கொரோனா தொற்று மற்றும் இறப்பு எண்ணிக்கை..

திருவண்ணாமலை : குறைந்துவரும் கொரோனா தொற்று மற்றும் இறப்பு எண்ணிக்கை..

கோவை : கஞ்சாவுக்கு அடிமையானதால் விபரீதம் : கடத்தப்பட்ட டிக்டாக் சிறுமிகள் திண்டுக்கல்லில் மீட்பு

கோவை : கஞ்சாவுக்கு அடிமையானதால் விபரீதம் : கடத்தப்பட்ட டிக்டாக் சிறுமிகள் திண்டுக்கல்லில் மீட்பு

முன்னாள் அமைச்சர் மணிகண்டன் முன்ஜாமீன் கோரிய மனு ஒத்திவைப்பு!

முன்னாள் அமைச்சர் மணிகண்டன் முன்ஜாமீன் கோரிய மனு ஒத்திவைப்பு!

Tamil Nadu Coronavirus: கோவை ஈரோட்டில் அதிகரிக்கும் கொரோனா.. 400ஐ தாண்டிய உயிரிழப்பு

Tamil Nadu Coronavirus: கோவை ஈரோட்டில் அதிகரிக்கும் கொரோனா.. 400ஐ தாண்டிய உயிரிழப்பு

டாப் நியூஸ்

Tamil Nadu Coronavirus LIVE News : தமிழ்நாட்டில் இன்று 17,321 பேருக்கு உறுதியான கொரோனா தொற்று.

Tamil Nadu Coronavirus LIVE News : தமிழ்நாட்டில் இன்று 17,321 பேருக்கு உறுதியான கொரோனா தொற்று.

பட்டியலின மக்களை கோவிலுக்குள் விடாமல் தடுத்த சம்பவம் : அமைச்சருக்கு கடிதம் எழுதிய ரவிக்குமார் எம்.பி.,

பட்டியலின மக்களை கோவிலுக்குள் விடாமல் தடுத்த சம்பவம் : அமைச்சருக்கு கடிதம் எழுதிய ரவிக்குமார் எம்.பி.,

‛உன் உருவமும்... உன் கலரும்...’ குக் வித் கோமாளி தீபா சங்கர் சந்தித்த சங்கடங்கள்!

‛உன் உருவமும்... உன் கலரும்...’ குக் வித் கோமாளி தீபா சங்கர் சந்தித்த சங்கடங்கள்!

மம்தா பேனர்ஜிக்கும் சோசலிசத்துக்கும் கல்யாணம்! ஒரு ஸ்வீட் Talk!

மம்தா பேனர்ஜிக்கும் சோசலிசத்துக்கும் கல்யாணம்! ஒரு ஸ்வீட் Talk!