மேலும் அறிய

Karunanidhi birthday: ‛மறையவில்லை... மறைந்திருந்து பார்க்கிறீர்கள்’ கருணாநிதி பிறந்த நாளில் ஸ்டாலின் உருக்கம்!

‛‛உங்களது வார்ப்பான நான், இந்த ஜூன் 3ல் உங்களை வெற்றிச் செய்தியோடு சந்திக்க வருகிறேன். 'வாழ்த்துகள் ஸ்டாலின்' என்று சொல்வீர்களா தலைவரே...’’ என உருக்கமாக பேசியுள்ளார் ஸ்டாலின்!

தேர்தலில் திமுகவுக்கு வாக்களிக்காதவர்களின் பாராட்டையும்கூட இப்போது பெற்று தலைநிமிர்ந்துவருவதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி பொங்க தெரிவித்திருக்கிறார்.
தமிழக முன்னாள் முதல்வரும், முதல்வர் ஸ்டாலினின் தந்தையுமான மு.கருணாநிதியின் 98வது பிறந்தநாள் இன்று கடைபிடிக்கப்படுகிறது.
இதனையொட்டி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது முகநூல் பக்கத்தில் காணொலி ஒன்றை வெளியிட்டிருக்கிறார். தமிழக முதல்வராகிவிட்ட நிலையில் தனது உழைப்பை சுட்டிக்காட்டி ஒரு தந்தையின், கழகத்தின் மூத்த தலைவரின், முன்னாள் முதல்வரின் ஆசியைக் கோரும் வகையில் அந்த காணொலி வடிவமைக்கப்பட்டுள்ளது.


Karunanidhi birthday: ‛மறையவில்லை... மறைந்திருந்து பார்க்கிறீர்கள்’ கருணாநிதி பிறந்த நாளில் ஸ்டாலின் உருக்கம்!
அதில் முதல்வர் பேசியிருப்பதாவது:
திருவாரூரில் கருவாகி, தமிழகத்தையே தனதூராக்கிய தலைவர்களுக்கெல்லாம் தலைவர், முதல்வர்களுக்கு எல்லாம் முதல்வர். முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களே, இன்று நீங்கள் பிறந்த ஜீன் 3. இது உங்கள் பிறந்தநாள் மட்டுமல்ல. உயிரினும் மேலான உங்களின் கோடிக்கணக்கான உடன்பிறப்புகள் அனைவரும் புத்துணர்ச்சி பெற்ற நாள். அதனால்தான் கழகத்தின் கண்மணிகளாம் கருப்பு சிவப்புத் தொண்டர்கள் அனைவருக்கும் தனித்தனிப் பிறந்தநாள்கள் இல்லை. எல்லோர்க்கும் பிறந்தநாள் இந்த ஜூன் 3 தான்.
வங்கக் கடலோரம் வாஞ்சை மிகு தென்றலின் தமிழ்த் தாலாட்டில், உங்களுக்குக் கண்ணான அண்ணனாம் பேரறிஞருக்குப் பக்கத்தில் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கும் எங்களது ஆருயிர்த் தலைவரே. இந்த ஜூன் 3 - நான் கம்பீரமாக வருகிறேன். உங்களுக்குக் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றி விட்டேன் என்று சொல்லத் தலைநிமிர்ந்து வருகிறேன்.
ஈரோட்டில் அன்றொருநாள் நான் ஏற்றுக் கொண்ட உறுதிமொழியை உடன்பிறப்புகளின் துணையோடு நிறைவேற்றிக் காட்டிவிட்டேன் என்பதை நெஞ்சை நிமிர்த்திச் சொல்ல வருகிறேன்.

தலைவருக்குக் கொடுத்த வாக்குறுதியை ஒரு தொண்டன் நிறைவேற்றிக் காட்ட வேண்டும் என்பதற்காகவே உழைத்தேன். நீங்கள் மறையவில்லை, மறைந்து இருந்து என்னைக் கவனிப்பதாகத் தான் எப்போதும் நினைப்பேன். இப்போதும் கவனித்துக் கொண்டுதான் இருப்பீர்கள்...
கோட்டையைக் கைப்பற்றிய அடுத்த நாளே கொரோனாவை விரட்டப் போராடிக் கொண்டு இருக்கிறோம். உழைப்பு, உழைப்பு, உழைப்பு என்று என்னை நீங்கள் உருவகப்படுத்தினீர்கள். (இந்த இடத்தில், பின்னணியில் ஸ்டாலின் என்றால் உழைப்பு, உழைப்பு, உழைப்பு என்றொரு மாநாட்டில் கருணாநிதி பேசிய ஆடியோ ஒலிக்கப்படுகிறது)
அதற்கு உண்மையாக இருக்கவே உழைத்துக் கொண்டு இருக்கிறேன்.
அன்றொரு நாள் விழுப்புரத்தில் சொன்னீர்கள், யாரிடம் இருந்து பாராட்டு வரவில்லையோ அவர்கள் பாராட்டும் வகையில் நடந்துகொள் என்று. உண்மையில் தலைவரே, தேர்தலில் நமக்கு வாக்களிக்கத் தவறியவர்கள் பலரது பாராட்டையும் இப்போது கழகத்துக்கு வாங்கித் தரும் வகையில் செயல்பட்டு வருகிறேன். செயல்படுகிறேன் என்றால் தனிப்பட்ட நானல்ல, என்னுள் இருந்து நீங்கள் தான் செயல்பட வைத்துக் கொண்டு இருக்கிறீர்கள்.
உங்கள் சொல் எனக்கு சாசனம். உங்கள் வாழ்க்கை எனக்குப் பாடம். உங்கள் பாராட்டே எனக்கு உயிர்விசை. உங்கள் குரலே எனக்கு தேனிசை.
உங்களது வார்ப்பான நான் இந்த ஜூன் 3 உங்களை வெற்றிச் செய்தியோடு சந்திக்க வருகிறேன். 'வாழ்த்துகள் ஸ்டாலின்' என்று சொல்வீர்களா தலைவரே.
இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் உருக்கமாக, நெகிழ்ச்சியகாப் பேசியிருக்கிறார். சமூகவலைதளங்களில் இந்தக் காணொலி வைரலாகி வருகிறது.

தலைப்பு செய்திகள்

"விவசாயிகளை வஞ்சிக்கிறது அரசு" – தஞ்சாவூரில் சீறிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி
மகாமக விழாவுக்காக தனி அலுவலர் நியமனம்... கும்பகோணத்தில் பணிகள் தீவிரம்: அமைச்சர் வினோத்ரவி தகவல்
மகாமக விழாவுக்காக தனி அலுவலர் நியமனம்... கும்பகோணத்தில் பணிகள் தீவிரம்: அமைச்சர் வினோத்ரவி தகவல்
Thangami vs EPS : எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
DMK:பதவிகள் பறிப்பு, புதிய பொறுப்பு - கலக்கத்தில் உ.பிக்கள் - ஆக. 22 திமுக செயற்குழு அறிவிப்பு
பதவிகள் பறிப்பு, புதிய பொறுப்பு - கலக்கத்தில் உ.பிக்கள் - ஆக. 22 திமுக செயற்குழு அறிவிப்பு

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Masoud Pezeshkian to India: இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?
இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?
Online Property Registration: பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
Thangami vs EPS : எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
TASMAC Liquor Ban: குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
Alloy Wheel or Steel Wheel: அலாய் வீலா அல்லது ஸ்டீல் வீலா.? உங்க வாகனத்துக்கு எது பெஸ்ட் சாய்ஸ்.? பயணத் தரம் மாறுமா.? முழு விவரங்கள்
அலாய் வீலா அல்லது ஸ்டீல் வீலா.? உங்க வாகனத்துக்கு எது பெஸ்ட் சாய்ஸ்.? பயணத் தரம் மாறுமா.? முழு விவரங்கள்
அதிகாரம், ஆணவப்பசி, வஞ்சம், வன்மம்: மக்களுக்கே சாபமா? திமுகவை சரமாரியாக சாடிய தவெக!
அதிகாரம், ஆணவப்பசி, வஞ்சம், வன்மம்: மக்களுக்கே சாபமா? திமுகவை சரமாரியாக சாடிய தவெக!
Iran Mocks Trump: 'விரைவில் குப்பையில்...' ட்ரம்ப்பை வச்சு செய்த ஈரானிய ஊடகங்கள்; உணவு லாரியில் சென்றதை வைத்து கேலி
'விரைவில் குப்பையில்...' ட்ரம்ப்பை வச்சு செய்த ஈரானிய ஊடகங்கள்; உணவு லாரியில் சென்றதை வைத்து கேலி
Embed widget