(Source: ECI/ABP News/ABP Majha)
எந்த இடங்களுக்கும் செல்லலாம் - ராஜேந்திர பாலாஜிக்கு உச்சநீதிமன்றம் தளர்வு...!
அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கான ஜாமீன் நிபந்தனையில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.
பண மோசடி வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு விதிக்கப்பட்டிருந்த ஜாமீன் நிபந்தனையில் தளர்வு அளிக்கப்பட்டது.
ஆவினில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பண மோசடி செய்த புகாரில் கைதான ராஜேந்திர பாலாஜி முன்னதாக நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்தார்.
இந்நிலையில், முன்னதாக நிபந்தனை ஜாமீனில் தளர்வு கோரி ராஜேந்திர பாலாஜி தொடர்ந்த மனு இன்று (செப்.12) விசாரணைக்கு வந்தது.
அதன்படி, ராஜேந்திர பாலாஜி தமிழ்நாட்டில் எந்த இடங்களுக்கும் செல்லலாம் எனினும், விருதுநகர் மாவட்டத்தை விட்டு வெளியே செல்லும்போது விசாரணை அதிகாரியிடம் தெரிவிக்க வேண்டுமென உச்ச நீதிமன்றம் நிபந்தனை அளித்துள்ளது
மேலும் பாஸ்போர்ட்டை புதுப்பித்துக் கொள்ளளவும் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
முன்னாள் பால்வளத்துறை அமைச்சரான ராஜேந்திர பாலாஜி ஆவின் உள்ளிட்ட துறைகளில் வேலை வாங்கி தருவதாக கூறி 3 கோடி ரூபாய் வரை பணம் பெற்று மோசடி செய்ததாக வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கில் ராஜேந்திர பாலாஜி கோரிய முன்ஜாமின் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்யப்பட்டது.
இதனைத்தொடர்ந்து அவர் தலைமறைவானார். இதனையடுத்து, அவரை கைது செய்ய தனிப்படைகள் அமைக்கப்பட்டு, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். 20 நாட்களாக தேடுதல் வேட்டையில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வந்த நிலையில் ஜனவரி 5ஆம் தேதி கர்நாடகாவில் வைத்து காவல் துறையினர் அவரை சுற்றி வளைத்து கைது செய்தனர். தொடர்ந்து ஸ்ரீவில்லிபுத்தூரில் மாவட்ட குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
View this post on Instagram
அதிமுகவில் ஏற்கெனவே உள்கட்சிப் பூசல் நடந்து வருகிறது. முன்னதாக இன்று (செப்.12) அதிமுக தலைமை அலுவலக சாவியை ஈபிஎஸ்ஸுக்கு வழங்கியதை எதிர்த்த ஓபிஎஸ்ஸின் மேல்முறையீடு மனுவையும் உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.