திருப்பதி தேவஸ்தானத்திற்கு எதிரான வழக்கு: சேலம் நுகர்வோர் நீதிமன்றம் ரூ. 45 லட்சம் நஷ்டஈடு வழங்க உத்தரவு.
உத்தரவு பிறப்பித்து இரண்டு மாத காலத்தில் திருப்பிக் கொடுக்க வேண்டும் என்றும் இல்லாவிட்டால் ஆறு சதவீதம் வட்டியுடன் சேர்த்து தர வேண்டும்.

சேலம் மாவட்டம் அழகாபுரம் மணிமேகலை தெருவில் வசித்து வரும் ஹரிபாஸ்கர் என்பவர் கடந்த 2006 ஆம் ஆண்டு திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் மேல் சாத்து வாஸ்திர சேவை என்ற தரிசனத்திற்காக இரண்டு நபர்கள் ரூ. 12,250 பணம் கொடுத்து பதிவு செய்துள்ளனர். இந்த இரண்டு நபர்களுக்கும் தரிசனம் செய்ய ஜூலை 10 ஆம் தேதி 2020 ஆம் ஆண்டு தேதி ஒதுக்கப்பட்டு அந்த தேதியில் ரசீது கொடுக்கப்பட்டுளளது. ஆனால் அந்த கால கட்டத்தில் கொரோனா நோய் தொற்று இருந்த காரணத்தினால் அப்பொழுது தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் மேல் சாத்து வாஸ்திர சேவை என்ற தரிசனம் செய்ய வேறு தேதி அறிவிக்கப்படும் என்று சொல்லப்பட்டது. பின்னர் அதற்கான வாய்ப்பு இல்லை என்றும், வேறு தரிசனம் செய்ய தேதி தரப்படும் என்று தேவஸ்தானத்தின் மூலம் அறிவிப்பு அனுப்பப்பட்டது. ஆனால் 17 ஆண்டுகளுக்கு காத்திருந்தும் தரிசனம் செய்ய வாய்ப்பு அளிக்கப்படவில்லை என்பது தேவஸ்தானத்தின் சேவை குறைபாடு என்று கூறி, கடந்த மே மாதம் ஐந்தாம் தேதி சேலத்தை சேர்ந்த ஹரிபாஸ்கர் என்பவர் செல்வகீதன் என்ற வழக்கறிஞர் மூலம் சேலம் நுகவோர் குறை தீர்மான நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. கடந்த 2022 ஆம் ஆண்டு 18 ஆம் தேதி ஆகஸ்ட் மாதம் நீதிமன்றத்தின் மூலம் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
அந்த உத்தரவில் ஒரு ஆண்டு காலத்தில் மனுதாரரக்கு, மேல் சாத்தும் வாசிட சேவை என்ற தரிசனம் செய்ய வாய்ப்பு கொடுக்க வேண்டும், இல்லாவிட்டால் ரூ. 45 லட்சம் நஷ்ட ஈடு தொகை சேவை குறைபாடு மற்றும் மன உளைச்சலுக்காக வழங்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேற்படி தரிசனமாக கட்டிய ரூ. 12,250 தொகையும் உத்தரவு பிறப்பித்து இரண்டு மாத காலத்தில் திருப்பிக் கொடுக்க வேண்டும் என்றும் இல்லாவிட்டால் ஆறு சதவீதம் வட்டியுடன் சேர்த்து தர வேண்டும் என்று சேலம் நுகர்வோர் குறை தீர்மான நீதிமன்றத்தின் மூலமாக தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

