மேலும் அறிய
Advertisement
எறிபந்து போட்டி.... கிணற்றில் மூழ்கிய பெண்...வாலிபர் கொலை .. இன்னும் பல மதுரை செய்திகள் !
நகை, பணத்து திற்காக கொலை செய்து எரிக்கப்பட்ட தாய், மகள் எலும்பு களை தடயவியல் ஆய்வுக்கு அனுப்பி வைத்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
1. ராமநாதபுரம் மாவட்டம் எமனேசுவரம் போலீஸ் நிலையத்தில் மதுரை வாலிபர் இறந்த சம்பவத்தில் நீண்டநாட்களாக தலைமறைவாக இருந்த 2 போலீசார் நேற்று ராமநாதபுரம் கோர்ட்டில் சரண் அடைந்தனர்.
2. மாநில எறிபந்து கழகம், மாவட்ட எறிபந்து கழகம் சார்பில், மாநில அளவிலான 19 வது சீனியர் எறிபந்து போட்டி ராமநாதபுரத்தில் நடந்தது. 3 நாள் போட்டியில் சென்னை, கோவை, ஈரோடு, சேலம், நெல்லை, கன்னியாகுமரி, கரூர், திண்டுக்கல் உள்பட 43 அணிகள் பங்கேற்றன. ஆடவர் பிரிவு இறுதி ஆட்டத்தில் சென்னை அணியை கரூர் வென்றது.
3. சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே மோட்டார் அறையுடன் கிணற்றுக்குள் புதைந்த பெண் உயிரிழந்தார், இவரது உடல் மீட்கப்பட்டது.
4. சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அருகே சட்டத் துறை அமைச்சர் ரகுபதியின் பாதுகாப்பு வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 5 போலீஸார் காயமடைந்தனர்.
5. சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் அருகே உயர் நீதிமன்ற உத்தரவுப்படி அடைக்கப்பட்ட கால்வாயைத் திறக்க வலியுறுத்தி, கிராம மக்கள் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். மேலும்பொதுப் பணித்துறை அதிகாரிகளின் மெத்தனத்தால் இரு கிராம மக்கள் இடையே மோதல் போக்கு ஏற்பட் டுள்ளது.
6. ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தில் நகை, பணத்து திற்காக கொலை செய்து எரிக்கப்பட்ட தாய், மகள் எலும்பு களை தடயவியல் ஆய்வுக்கு அனுப்பி வைத்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
7. தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுக செயல்பாடுகள் குறித்து இழுவைப்படகு மூலம் பார்வையிட்டார்.
8. நெல்லை திசையன்விளையில் புதிதாக அமையவிருக்கும் மதுபானக்கடையை தடுத்து நிறுத்த வலியுறுத்தி அப்பகுதியை சேர்ந்த ஆண்கள் மற்றும் பெண்கள் மதுபாட்டில்களுடன் ஆட்சியர் அலுவலகம் வந்து மதுகுடிக்கும் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். மது பாட்டில்களை பறிமுதல் செய்த காவல்துறையினர் ஆட்சியரை சந்தித்து மனு அளிக்க ஏற்பாடு செய்தனர்.
9. நெல்லை மாவட்டத்தில் கைபேசியை தவறவிட்ட மற்றும் தொலைந்ததாக பெறப்பட்ட புகாரின் அடிப்படையில் இதுவரை 39 லட்சத்து, 74 ஆயிரத்து 735 ரூபாய் மதிப்பிலான 315 கைபேசிகள் மீட்கப்பட்டு உரியவரிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது என்றும் தற்போது மேலும் 70 கைப்பேசிகள் பறிமுதல் செய்யப்பட்டு நேற்று உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது என்றும் இதன் மதிப்பு 10,46,500 ரூபாய் ஆகும் என மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சரவணன் தெரிவித்தார்.
10. மதுரை மாவட்டத்தில், நேற்று மட்டும் 7 நபர்களுக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 75600-ஆக உயர்ந்துள்ளது. அதே போல் 7 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் சிகிச்சை பெற்று வீடு திரும்பியோர் எண்ணிக்கை 74341-ஆக அதிகரித்துள்ளது. நேற்று உயிரிழப்பில்லை என்பது ஆறுதல். இதனால் மதுரை மாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 1186 இருக்கிறது. இந்நிலையில் 73 நபர்கள் கொரோனா பாதிப்பால் மதுரையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதை படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - ஒருவர் கை பக்குவத்தில் ஊரே சமைக்கும் எண்ணெய் சுக்கா! இது தான் மதுரையோடு பக்கா!
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
ஐபிஎல்
ஐபிஎல்
கிரிக்கெட்
ஐபிஎல்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion