மேலும் அறிய

தமிழ்வழியில் படித்தவர்களின் இட ஒதுக்கீட்டுக்கு எதிரான வழக்கைத் திரும்பப்பெறவேண்டும் - ராமதாஸ்

உயர்நீதிமன்றத்தில் செய்யப்பட்டுள்ள மேல்முறையீட்டை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் உடனடியாக திரும்பப்பெற வேண்டும் என்று ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது, “தமிழக அரசுப்பணிக்கான கல்வித்தகுதி முழுவதையும், தமிழ் வழியில் படித்தவர்களுக்கு மட்டும் தமிழ் வழியில் பயின்றவர்களுக்கு 20 சதவீத இடஒதுக்கீடு வழங்க வகை செய்யும் சட்டத்திருத்தத்தை பின்தேதியிட்டு செயல்படுத்த வேண்டும் என்ற உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மேல்முறையீடு செய்திருக்கிறது. இது தமிழ்வழியில் படித்த மாணவர்களுக்கு வேலைவாய்ப்பில் இழைக்கப்படும் மிகப்பெரிய சமூக அநீதி.

தமிழ்வழியில் படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பில் 20 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் சட்டம் 2010-ஆம் ஆண்டு அப்போதைய தி.மு.க. ஆட்சியில் நிறைவேற்றப்பட்டது. ஆனால், தமிழ்நாட்டில் பெரும்பாலான பணிகளுக்கு பட்டப்படிப்பு அடிப்படைத் தகுதியாக நிர்ணயிக்கப்பட்டிருப்பதால் ஏற்கனவே பள்ளிக்கல்வி முதல் பட்டப்படிப்பு வரை ஆங்கில வழியில் படித்த பலரும், ஏதேனும் ஒரு பட்டப்படிப்பை மட்டும் அஞ்சல் வழியில் தமிழ்மொழியில் படித்துவிட்டு அரசுத்துறை வேலைவாய்ப்புகளில் 20 சதவீத இட ஒதுக்கீட்டைப் பெற்று பயனடைந்து வருகின்றனர். இதைத் தடுக்கும் வகையில், பள்ளிக்கல்வி முதல் கல்லூரி கல்வி வரை அனைத்து நிலைகளிலும் தமிழ் வழியில் படித்தவர்களுக்கு மட்டுமே 20 சதவீத இடஒதுக்கீட்டை வழங்கும் வகையில் சட்டமசோதா தமிழக சட்டசபையில் கடந்தாண்டு மார்ச் 16-ந் தேதி நிறைவேற்றப்பட்டது.

தமிழ்வழியில் படித்தவர்களின் இட ஒதுக்கீட்டுக்கு எதிரான வழக்கைத் திரும்பப்பெறவேண்டும் - ராமதாஸ்

இந்த சட்டத்திற்கு 9 மாதப் போராட்டத்திற்கு பிறகே தமிழக ஆளுநரின் ஒப்புதல் பெறப்பட்டது. தமிழ்வழியில் பயின்றவர்களுக்கான இட ஒதுக்கீடு முறைகேடாக பயன்படுத்தப்படுவதை எதிர்த்து தொடரப்பட்ட ஒரு வழக்கை விசாரித்த மதுரை உயர்நீதிமன்றம், தமிழ்வழிக் கல்விக்கான 20 சதவீத இட ஒதுக்கீடு சட்டத்திருத்தத்தை 20.1.2020 அன்று வெளியிடப்பட்ட டி.என்.பி.எஸ்.சி. முதல் தொகுதி பணிக்கான போட்டித்தேர்வில் இருந்து செயல்படுத்தும்படி 22.03.2021 அன்று தீர்ப்பளித்தது.

உயர்நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு தமிழ் வழியில் படித்த மாணவர்களுக்கு நீதிவழங்கும் நோக்குடன் வழங்கப்பட்ட தீர்ப்பாகும். தமிழக அரசுக்கு 18 துணை ஆட்சியர், 19 காவல் துணைகண்காணிப்பாளர் உள்ளிட்ட 69 முதல் தொகுதி அதிகாரிகளைத் தேர்ந்தெடுப்பதற்காக அறிவிக்கப்பட்ட போட்டித் தேர்விலும் இந்த தீர்ப்பின் அடிப்படையில் தமிழ் வழியில் படித்தவர்களுக்கான இட ஒதுக்கீட்டை வழங்குவதுதான் சரி.

தமிழ்வழியில் படித்தவர்களின் இட ஒதுக்கீட்டுக்கு எதிரான வழக்கைத் திரும்பப்பெறவேண்டும் - ராமதாஸ்

ஆனால், அதற்கு மாறாக உயர்நீதிமன்றத்தில் அரசுப்பணியாளர் தேர்வாணையம் மேல்முறையீடு செய்திருக்கிறது. இதற்காக தேர்வாணையம் கூறியுள்ள காரணங்கள் ஏற்க முடியாதவை. தமிழக அரசின் புதிய சட்டத்தை பின்தேதியிட்டு செயல்படுத்தினால், பட்டப்படிப்பு வரை ஆங்கிலத்தில் படித்து, கூடுதலாக ஒரு பட்டப்படிப்பை தமிழில் படித்து தமிழ் இட ஒதுக்கீட்டை முறைகேடாக அனுபவிக்க முயல்பவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்று தேர்வாணையம் கூறுகிறது. தமிழ் இட ஒதுக்கீட்டை தடுக்கவேண்டும் என்பதுதான் புதிய சட்டத்தின் நோக்கம். அவ்வாறு இருக்கும்போது சட்டம் இயற்றப்பட்ட தேதிக்கு முன்பாக போட்டித்தேர்வு அறிவிக்கப்பட்டு விட்டது என்ற ஒரே காரணத்திற்காக தமிழ் இட ஒதுக்கீடு ஆங்கில வழியில் படித்தவர்களால் சூறையாடப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. இந்த அநீதிக்கு தேர்வாணையம் துணை போகக்கூடாது. 2016-19 காலகட்டத்தில் முதல் தொகுதி பணிகளில் தமிழ் வழியில் படித்தவர்களுக்கு ஒதுக்கப்பட்ட 22 பணிகளில் 11 பணிகளை ஒன்றாம் வகுப்பில் இருந்து பட்டப்படிப்பு வரை ஆங்கில வழியில் படித்து, இறுதியில் பெயரளவில் ஒரு பட்டப்படிப்பை அஞ்சல் வழியில் தமிழில் படித்தவர்கள் கைப்பற்றியுள்ளனர். இது மிகப்பெரிய சமூக அநீதி. அத்தகைய அநீதி மீண்டும் இழைக்கப்படுவதை அனுமதிக்கக்கூடாது.

தமிழ்வழியில் படித்தவர்களின் இட ஒதுக்கீட்டுக்கு எதிரான வழக்கைத் திரும்பப்பெறவேண்டும் - ராமதாஸ்

புதிய சட்டத்தின்படி முதல் தொகுதி தேர்வு நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டால் 3 மாவட்ட துணைஆட்சியர்கள், 2 காவல் துணை கண்காணிப்பாளர்கள், 3 கூட்டுறவுத்துணை பதிவாளர்கள், 2 ஊரக வளர்ச்சித்துறை உதவி இயக்குனர்கள் என மொத்தம் 10 முதல் தொகுதி பணிகள் ஒன்றாம் வகுப்பு பட்டப்படிப்பு வரை தமிழில் படித்தவர்களுக்கு மட்டும் கிடைக்கும். தமிழ் வழியில் படித்தவர்களுக்காக 20 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவதற்கான சட்டத்திருத்தத்தை பின்தேதியிட்டு செயல்படுத்த வேண்டும் என்ற தீர்ப்பை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் செய்யப்பட்டுள்ள மேல்முறையீட்டை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் உடனடியாக திரும்பப்பெற வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

புயல் எங்கே உள்ளது? நாளை எங்கெல்லாம் விடுமுறை ? ரெட் அலர்ட் எங்கு: முக்கிய வானிலை அப்டேட்.!
புயல் எங்கே உள்ளது? நாளை எங்கெல்லாம் விடுமுறை ? ரெட் அலர்ட் எங்கு: முக்கிய வானிலை அப்டேட்.!
TN Rain; கனமழை எதிரொலி மயிலாடுதுறை மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு நாளை இரண்டாவது நாளாக விடுமுறை...!
இரண்டாவது நாளாக நாளை மயிலாடுதுறை மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை...!
EVM Tampered: ”தோல்வியடைந்தால் மட்டும் EVMல் மோசடியா; வென்றால் இல்லை” உச்சநீதிமன்றம் காட்டம்? சொன்னது யாரை ? 
EVM Tampered: ”தோல்வியடைந்தால் மட்டும் EVMல் மோசடியா; வென்றால் இல்லை” உச்சநீதிமன்றம் காட்டம்? சொன்னது யாரை ? 
Viduthalai 2 Trailer : வெற்றிமாறன் இயக்கியுள்ள விடுதலை 2 பட டிரைலர் இதோ
Viduthalai 2 Trailer : வெற்றிமாறன் இயக்கியுள்ள விடுதலை 2 பட டிரைலர் இதோ
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”தெலுங்குல பேச முடியாது.. தமிழ்ல தான் பேசுவேன்”அல்லு அர்ஜுன் THUGLIFEபள்ளியில் சாதியா? PAINT-ஐ எடுத்த அன்பில்! அரசுப் பள்ளியில் அதிரடி”அரசியலில் உன் மகன் காலி!” பழி தீர்த்த DK சிவக்குமார்! கதறும் அமைச்சர் குமாரசாமி!அடிதடியில் இறங்கிய அதிமுகவினர்! செல்லூர் ராஜூ vs டாக்டர் சரவணன்! நடந்தது என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
புயல் எங்கே உள்ளது? நாளை எங்கெல்லாம் விடுமுறை ? ரெட் அலர்ட் எங்கு: முக்கிய வானிலை அப்டேட்.!
புயல் எங்கே உள்ளது? நாளை எங்கெல்லாம் விடுமுறை ? ரெட் அலர்ட் எங்கு: முக்கிய வானிலை அப்டேட்.!
TN Rain; கனமழை எதிரொலி மயிலாடுதுறை மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு நாளை இரண்டாவது நாளாக விடுமுறை...!
இரண்டாவது நாளாக நாளை மயிலாடுதுறை மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை...!
EVM Tampered: ”தோல்வியடைந்தால் மட்டும் EVMல் மோசடியா; வென்றால் இல்லை” உச்சநீதிமன்றம் காட்டம்? சொன்னது யாரை ? 
EVM Tampered: ”தோல்வியடைந்தால் மட்டும் EVMல் மோசடியா; வென்றால் இல்லை” உச்சநீதிமன்றம் காட்டம்? சொன்னது யாரை ? 
Viduthalai 2 Trailer : வெற்றிமாறன் இயக்கியுள்ள விடுதலை 2 பட டிரைலர் இதோ
Viduthalai 2 Trailer : வெற்றிமாறன் இயக்கியுள்ள விடுதலை 2 பட டிரைலர் இதோ
Akhil Akkineni Engaged: நாக சைதன்யா திருமணத்திற்கு முன் இரண்டாவது மகன் அகிலுக்கு நிச்சயதார்த்தத்தை முடித்த நாகர்ஜுனா - அமலா!
Akhil Akkineni Engaged: நாக சைதன்யா திருமணத்திற்கு முன் இரண்டாவது மகன் அகிலுக்கு நிச்சயதார்த்தத்தை முடித்த நாகர்ஜுனா - அமலா!
TN Rain: சீக்கிரமா வீட்டுக்கு போயிருங்க.! இன்று இரவு 34 மாவட்டங்களில் மழை இருக்கு மக்களே.!
TN Rain: சீக்கிரமா வீட்டுக்கு போயிருங்க.! இன்று இரவு 34 மாவட்டங்களில் மழை இருக்கு மக்களே.!
அதிகாரிகளிடம் சரமாரியான கேள்விகளை எழுப்பிய அதிமுக கவுன்சிலர் - சேலத்தில் பரபரப்பு
அதிகாரிகளிடம் சரமாரியான கேள்விகளை எழுப்பிய அதிமுக கவுன்சிலர் - சேலத்தில் பரபரப்பு
DMK VS PMK:
"வேறு வேலை இல்லை" அனல் பறக்கும் அரசியல் களம்.. முதலமைச்சர் கோபத்தின் பின்னணி ?
Embed widget