தமிழகத்தில் ஏற்றுமதி நிறுவனங்கள் செயல்பட அனுமதிக்கக்கூடாது - ராமதாஸ் வலியுறுத்தல்

தமிழ்நாட்டில் ஏற்றுமதி நிறுவனங்கள் செயல்பட அனுமதிக்க கூடாது என்று தமிழக அரசுக்கு பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் இன்று வெளியிட்ட அறிக்கையில், “தமிழ்நாட்டில்  கோவை, திருப்பூர், மதுரை உள்ளிட்ட 8 மாவட்டங்கள் தவிர, மீதமுள்ள 30 மாவட்டங்களில் ஏற்றுமதி நிறுவனங்களை திறப்பதற்கு அரசு அனுமதி அளித்துள்ளது. இந்த முடிவு மிகவும் ஆபத்தானது.

இந்தியாவிலேயே தினசரி கொரோனா தொற்று அதிகம் உள்ள மாநிலமாக தமிழ்நாடு விளங்குகிறது. தமிழ்நாட்டில் தினசரி கொரோனா தொற்றுகளின் எண்ணிக்கை குறையத் தொடங்கியுள்ள போதிலும், அது மனநிறைவளிக்கும் வகையில் இல்லை. தினசரி கொரோனா தொற்று ஒரு சில மாவட்டங்களில் குறைந்தால், வேறு சில மாவட்டங்களில் அதிகரித்துக் கொண்டிருக்கிறது.  இது அடுத்தடுத்த நாட்களில் அதிகரிப்பதற்கான வாய்ப்புகளும் உள்ளன. கொரோனா பரவல் விஷயத்தில் தமிழ்நாடு இன்னும் ஆபத்தான காலகட்டத்தைத் தாண்டவில்லை. இத்தகைய சூழலில் அவசர, அவசரமாக ஏற்றுமதி நிறுவனங்கள் செயல்பட தமிழக அரசு அனுமதித்தது ஏன்?தமிழகத்தில் ஏற்றுமதி நிறுவனங்கள் செயல்பட அனுமதிக்கக்கூடாது - ராமதாஸ் வலியுறுத்தல்

சட்டப்பேரவை அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் கூட இது குறித்து விவாதிக்கப்படாத நிலையில், இந்த  யோசனையை யார் வழங்கியது? கொரோனாவை ஒழிப்பதற்காக அனைத்துத் தரப்பினரும் போராடி வரும் நிலையில், அதை சீர்குலைக்கும் வகையில்  இப்படி ஓர் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது தவறு. ஏற்றுமதி நிறுவனங்களில் சமூக இடைவெளியை கடைபிடிப்பது சாத்தியமில்லை. அதனால் ஏற்றுமதி நிறுவனங்கள் மீண்டும் செயல்படத் தொடங்கினால், அவை கொரோனா பரப்பும் மையங்களாகவே  இருக்கும்.  ஏற்றுமதி நிறுவனங்கள் திறக்கப்பட்டால் சொந்த ஊர் சென்றுள்ள  தொழிலாளர்கள் மீண்டும் பணியாற்றும் இடத்திற்கு திரும்ப வேண்டியிருக்கும். அது கொரோனா பரவலை விரைவுபடுத்தும். இப்படிப்பட்டதொரு ஆபத்தை விலை கொடுத்து வாங்குவதற்கு அரசு முயலக்கூடாது. அத்தியாவசிய சேவைகள், தொடர்ந்து இயங்கும் தொழிற்சாலைகள் என்ற பெயரில் ஏராளமான ஆலைகள்

   முழு ஊரடங்கு காலத்திலும் இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளன. இந்த ஆலைகளில் மிக அதிக அளவில் கொரோனா வேகமாக பரவி வருகிறது. இந்த ஆலைகளில் பணியாற்றிய பல தொழிலாளர்கள் கடந்த சில நாட்களில் உயிரிழந்துள்ளனர்.தமிழகத்தில் ஏற்றுமதி நிறுவனங்கள் செயல்பட அனுமதிக்கக்கூடாது - ராமதாஸ் வலியுறுத்தல்

”கோவை, திருப்பூர், சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் கொரோனா வைரஸ் பரவல் கட்டுக்குள் வராததற்கு  அங்கு தொழிற்சாலைகள் செயல்படுவது தான் காரணம் என்று மருத்துவத் துறை அமைச்சர் கூறியுள்ளார். தொழிற்சாலைகள் இயங்குவதால் பரவும் கொரோனா, ஏற்றுமதி நிறுவனங்கள் செயல்படுவதாலும் பரவும்  என்பதை அரசு உணர்ந்து கொள்ள வேண்டும். ஏராளமான உயிரிழப்புகள், பொருளாதார இழப்புகள், வேதனைகள், மருத்துவப் பணியாளர்களின் அர்ப்பணிப்புடன் கூடிய உழைப்பு ஆகியவற்றால் தான் இந்த அளவுக்கு முன்னேறியிருக்கிறோம். அதை சில அவசர முடிவுகளால் சீர்குலைத்து விடக் கூடாது. தமிழ்நாட்டில் கொரோனா முழுமையாக கட்டுக்குள் கொண்டுவரப்படும் வரை ஏற்றுமதி நிறுவனங்கள் செயல்பட அனுமதிக்கக்கூடாது; பெரிய தொழிற்சாலைகளையும் மூட தமிழக அரசு ஆணையிட வேண்டும்” என்று கூறியுள்ளார்.

மேலும் படிக்க : https://tamil.abplive.com/news/india/puducherry-corona-cases-update-996-covid-new-cases-and-21-deaths-4453

Tags: Corona Tamilnadu Ramadoss pmk oppose export

தொடர்புடைய செய்திகள்

தூத்துக்குடி : இலங்கைக்கு படகில் தப்பமுயன்ற இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்தவர் கைது!

தூத்துக்குடி : இலங்கைக்கு படகில் தப்பமுயன்ற இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்தவர் கைது!

Tamil Nadu Coronavirus LIVE News :கொரோனா இறப்புகள் முறையாக பதிவு செய்யப்படுகின்றன- மத்திய அரசு

Tamil Nadu Coronavirus LIVE News :கொரோனா இறப்புகள் முறையாக பதிவு செய்யப்படுகின்றன- மத்திய அரசு

”பெண்களும் அர்ச்சகர்கள் ஆகலாம்” என்னும் அறிவிப்பு : விமர்சனங்களும், விளக்கங்களும்!

”பெண்களும் அர்ச்சகர்கள் ஆகலாம்” என்னும் அறிவிப்பு : விமர்சனங்களும், விளக்கங்களும்!

தமிழ்நாட்டில் இன்று 15,108 நபர்களுக்கு கொரோனா பாதிப்பு

தமிழ்நாட்டில் இன்று 15,108 நபர்களுக்கு கொரோனா பாதிப்பு

கரூர் : அம்மா மருந்தகம் குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே செயல்படுகிறதா? மருந்தக மேலாளர் விளக்கம்..!

கரூர் : அம்மா மருந்தகம் குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே செயல்படுகிறதா? மருந்தக மேலாளர் விளக்கம்..!

டாப் நியூஸ்

New Planets: இரண்டு எக்ஸோ கிரகங்கள் கண்டுபிடிப்பு - சிறுவனைக் குறிப்பிட்டு பாராட்டிய நாசா..!

New Planets: இரண்டு எக்ஸோ கிரகங்கள் கண்டுபிடிப்பு -  சிறுவனைக் குறிப்பிட்டு பாராட்டிய நாசா..!

வேலூர் : சிலை திருட்டுப்போவதை கேள்விப்பட்டு இருப்பீங்க : இது சிலையை வைத்துவிட்டுப்போன கதை!

வேலூர் : சிலை திருட்டுப்போவதை கேள்விப்பட்டு இருப்பீங்க : இது சிலையை வைத்துவிட்டுப்போன கதை!

Vishnu Vishal Cupping Therapy | கப்பிங் சிகிச்சை எடுத்துக்கொண்ட விஷ்ணு விஷால் : வைரலாகும் புகைப்படங்கள்..!

Vishnu Vishal Cupping Therapy  | கப்பிங் சிகிச்சை எடுத்துக்கொண்ட விஷ்ணு விஷால் : வைரலாகும் புகைப்படங்கள்..!

ராணிப்பேட்டை : 5  டாஸ்மாக் கடைகளில் தொடர் திருட்டு : ப்ளாக்கில் மது விற்று சொகுசு பைக் வாங்கியவர்கள் கைது..!

ராணிப்பேட்டை : 5  டாஸ்மாக் கடைகளில் தொடர்  திருட்டு : ப்ளாக்கில் மது விற்று சொகுசு பைக் வாங்கியவர்கள் கைது..!