மேலும் அறிய

''அரசியலுக்கு வரலாமா, வேண்டாமா? என ஆலோசிக்கவுள்ளேன்'' - ரஜினிகாந்த்

அரசியலுக்கு வரலாமா வேண்டாமா என ஆலோசிக்கவுள்ளேன் என ரஜினி தெரிவித்துள்ளார்

அரசியலுக்கு வரலாமா வேண்டாமா என ஆலோசிக்கவுள்ளேன் என  ரஜினி தெரிவித்துள்ளார். இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அவர்,  மக்கள் மன்றத்தை தொடரலாமா? அதன் செயல்பாடுகள் என்ன என்பதை மக்கள் மன்ற நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை செய்ய உள்ளேன். மேலும் எதிர்காலத்தில் அரசியலுக்கு வரலாமா வேண்டாமா என்பது குறித்தும் அவர்களிடம் ஆலோசிக்கவுள்ளேன் என்றார்.

2020 டிசம்பர் 31ல் கட்சித் தொடங்குவது தொடர்பான அறிவிப்பை வெளியிட உள்ளதாக ரஜினி அறிவித்தார். அதனைத் தொடர்ந்து ஹைதராபாத்தில் 'அண்ணாத்த' படப்பிடிப்பில் கலந்து கொண்டார். அதன் பின்னர் கொரொனா குறுக்கே வந்தது. பின்னர் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. கொரோனா நெகட்டிவ் என்றாலும் தனிமைப்படுத்திக்கொண்டார் ரஜினி. உடல் பரிசோதனை, ஓய்வு என அரசியலுக்கு இடைவெளி விட்ட ரஜினி ஒரு அறிக்கை விட்டு அரசியல் பேச்சை முடித்து வைத்தார். ரஜினியின் டிவிட்டர் பக்கத்தில் வந்து விழுந்த அந்த அறிக்கையில், 

'அரசியலுக்கு வரலாமா, வேண்டாமா? என ஆலோசிக்கவுள்ளேன்'' - ரஜினிகாந்த்

"என்னை வாழவைக்கும்‌ தெய்வங்களான தமிழக மக்களுக்கு எனது அன்பான வணக்கம்‌, ஜனவரியில்‌ கட்சி தொடங்குவேன்‌ என்று அறிவித்து மருத்துவர்களின்‌ அறிவுரையையும்‌ மீறி 'அண்ணாத்த' படப்பிடிப்பில்‌ கலந்து கொள்ள ஹைதராபாத்‌ சென்றேன்‌. கிட்டத்தட்ட 120 பேர்‌ கொண்ட படக்‌ குழுவினருக்கு தினமும்‌ கொரோனா பரிசோதனை செய்து ஒவ்வொருவரையும்‌ தனிமைப்படுத்தி, முகக்‌ கவசம்‌ அணிவித்து, மிகவும்‌ ஜாக்கிரதையாகப் படப்பிடிப்பை நடத்தி வந்தோம்‌.

இவ்வளவு கட்டுப்பாட்டோடு இருந்தும்‌ 4 பேருக்கு கொரோனா இருக்கிறது என்று தெரிய வந்தது. உடனே இயக்குநர்‌ படப்பிடிப்பை நிறுத்தி எனக்கு உட்பட அனைவருக்கும்‌ கொரோனா பரிசோதனை செய்வித்தார்‌. எனக்கு கொரோனா நெகடிவ்‌ வந்தது. ஆனால்‌ எனக்கு இரத்தக்‌ கொதிப்பில்‌ அதிக ஏற்றத்‌ தாழ்வு இருந்தது. மருத்துவ ரீதியாக எக்காரணத்தைக்‌ கொண்டும்‌ எனக்கு ரத்தக்‌ கொதிப்பில்‌ தொடர்ந்து ஏற்றத்‌ தாழ்வு இருக்கக்‌ கூடாது, அது என்னுடைய மாற்று சிறுநீரகத்தைக் கடுமையாகப் பாதிக்கும்‌. ஆகையால்‌ என்னுடைய மருத்துவர்களின்‌ அறிவுரைப்படி அவர்களின்‌ மேற்பார்வையில்‌ மூன்று நாட்கள்‌ மருத்துவமனையில்‌ கண்காணிப்பில்‌ இருக்க நேரிட்டது.நான்‌ கட்சி‌ ஆரம்பித்த பிறகு ஊடகங்கள்‌, சமூக வலைத்தளங்கள்‌ மூலமாக மட்டும்‌ பிரச்சாரம்‌ செய்தால்‌ மக்கள்‌ மத்தியில்‌ நான்‌ நினைக்கும்‌ அரசியல்‌ எழுச்சியை உண்டாக்கித்‌ தேர்தலில்‌ பெரிய வெற்றியைப் பெற முடியாது. இந்த யதார்த்தத்தை அரசியல்‌ அனுபவம்‌ வாய்ந்த யாரும்‌ மறுக்கமாட்டார்கள்‌.

நான்‌ மக்களைச் சந்தித்து கூட்டங்களைக் கூட்டி, பிரச்சாரத்திற்குச் சென்று ஆயிரக்கணக்கான ஏன்‌ லட்சக்கணக்கான மக்களைச் சந்திக்க வேண்டியிருக்கும்‌. 120 பேர்‌ கொண்ட குழுவிலேயே கொரோனா பாதிப்பு ஏற்பட்டு நான்‌ மூன்று நாட்கள்‌ மருத்துவமனையில்‌ மருத்துவர்களின்‌ கண்காணிப்பில்‌ இருக்க நேர்ந்தது. இப்போது இந்த கொரோனா உருமாறி புது வடிவம்‌ பெற்று இரண்டாவது அலையாக வந்து கொண்டிருக்கிறது.

'அரசியலுக்கு வரலாமா, வேண்டாமா? என ஆலோசிக்கவுள்ளேன்'' - ரஜினிகாந்த்

தடுப்பூசி வந்தால்கூட நோய்‌ எதிர்ப்புச் சக்தியைக் குறைக்கும்‌ Immuno Suppressant மருந்துகளைச் சாப்பிடும்‌ நான்‌, இந்த கொரோனா காலத்தில்‌ மக்களைச் சந்தித்து, பிரச்சாரத்தின்‌ போது என்‌ உடல்நிலையில்‌ பாதிப்பு ஏற்பட்டால்‌ என்னை நம்பி என்கூட வந்து என்னுடன்‌ அரசியல்‌ பயணம்‌ மேற்கொண்டவர்கள்‌ பல சிக்கல்களையும்‌ சங்கடங்களையும்‌ எதிர்கொண்டு, மனரீதியாகவும்‌ பொருளாதார ரீதியாகவும்‌ பல துன்பங்களைச் சந்திக்க நேரிடும்‌.

என்‌ உயிர்‌ போனாலும்‌ பரவாயில்லை, நான்‌ கொடுத்த வாக்கை தவற மாட்டேன்‌, நான்‌ அரசியலுக்கு வருவேன்‌ என்று சொல்லி இப்பொழுது அரசியலுக்கு வரவில்லை என்று சொன்னால்‌ நாலு பேர்‌ நாலுவிதமா என்னைப் பற்றிப் பேசுவார்கள்‌ என்பதற்காக என்னை நம்பி என்‌ கூட வருபவர்களை நான்‌ பலிகடா ஆக்க விரும்பவில்லை. ஆகையால்‌ நான்‌ கட்சி ஆரம்பித்து, அரசியலுக்கு வர முடியவில்லை என்பதை மிகுந்த வருத்தத்துடன்‌ தெரிவித்துக்‌ கொள்கிறேன்‌.  என்றார். இந்த நிலையில் மீண்டும் அரசியல் புள்ளிக்கு அருகில் மீண்டும் புள்ளி வைத்து தொடர் புள்ளியாக்கியுள்ளார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

CM MK Stalin: கோவையில் ஓவர்; அடுத்து விருதுநகர் மக்கள் ரெடியா! - பக்கா திட்டங்கள் வரும் முதல்வர் ஸ்டாலின்!
CM MK Stalin: கோவையில் ஓவர்; அடுத்து விருதுநகர் மக்கள் ரெடியா! - பக்கா திட்டங்கள் வரும் முதல்வர் ஸ்டாலின்!
TN MRB Recruitment: தமிழக சுகாதாரத் துறையில் அரசுப் பணி; விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு- முழு தகவல்!
TN MRB Recruitment: தமிழக சுகாதாரத் துறையில் அரசுப் பணி; விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு- முழு தகவல்!
ட்ரம்ப் வெற்றி…! எலான் மஸ்க், அமேசான் ஜெஃப்-க்கு ஜாக்பாட்! சொத்துமதிப்பு லிஸ்ட்டை பாருங்க!
ட்ரம்ப் வெற்றி…! எலான் மஸ்க், அமேசான் ஜெஃப்-க்கு ஜாக்பாட்! சொத்துமதிப்பு லிஸ்ட்டை பாருங்க!
பக்தர்கள் வெள்ளத்தில் நடைபெற்ற எலந்தங்குடி வெற்றி விநாயகர் கோயில் குடமுழுக்கு....!
பக்தர்கள் வெள்ளத்தில் நடைபெற்ற எலந்தங்குடி வெற்றி விநாயகர் கோயில் குடமுழுக்கு....!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

NTK Cadres Fight : ‘’ஏய்..நீ வெளிய போடா!’’நாதக நிர்வாகிகள் கடும் மோதல்! போர்க்களமான PRESSMEETVCK vs PMK : ’’அப்பா மாதிரியே புள்ள..வன்னிய விரோதி ஸ்டாலின்!’’ ராமதாஸ் ஆவேசம்Maharashtra Rahul Gandhi : காங்கிரஸ் உக்கிரம் ஆட்சியை பிடிக்க ஒரே FORMULA கட்டம் கட்டிய ராகுல்!S Ve Sekar : ”வாயத் தொறந்தாலே பொய்! அண்ணாமலைக்கு தகுதியே இல்ல” வெளுத்துவாங்கும் எஸ்.வி.சேகர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM MK Stalin: கோவையில் ஓவர்; அடுத்து விருதுநகர் மக்கள் ரெடியா! - பக்கா திட்டங்கள் வரும் முதல்வர் ஸ்டாலின்!
CM MK Stalin: கோவையில் ஓவர்; அடுத்து விருதுநகர் மக்கள் ரெடியா! - பக்கா திட்டங்கள் வரும் முதல்வர் ஸ்டாலின்!
TN MRB Recruitment: தமிழக சுகாதாரத் துறையில் அரசுப் பணி; விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு- முழு தகவல்!
TN MRB Recruitment: தமிழக சுகாதாரத் துறையில் அரசுப் பணி; விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு- முழு தகவல்!
ட்ரம்ப் வெற்றி…! எலான் மஸ்க், அமேசான் ஜெஃப்-க்கு ஜாக்பாட்! சொத்துமதிப்பு லிஸ்ட்டை பாருங்க!
ட்ரம்ப் வெற்றி…! எலான் மஸ்க், அமேசான் ஜெஃப்-க்கு ஜாக்பாட்! சொத்துமதிப்பு லிஸ்ட்டை பாருங்க!
பக்தர்கள் வெள்ளத்தில் நடைபெற்ற எலந்தங்குடி வெற்றி விநாயகர் கோயில் குடமுழுக்கு....!
பக்தர்கள் வெள்ளத்தில் நடைபெற்ற எலந்தங்குடி வெற்றி விநாயகர் கோயில் குடமுழுக்கு....!
திருமணம் நடக்காத விரக்தி: தற்கொலை செய்து கொண்ட பொறியியல் பட்டதாரி
திருமணம் நடக்காத விரக்தி: தற்கொலை செய்து கொண்ட பொறியியல் பட்டதாரி
”திமுகவை அழிக்க கிளம்பி வந்தவர்களுக்கு..” : தஞ்சையில், விஜய் அரசியல் குறித்து சீறிய உதயநிதி..
”திமுகவை அழிக்க கிளம்பி வந்தவர்களுக்கு..” : தஞ்சையில், விஜய் அரசியல் குறித்து சீறிய உதயநிதி..
முதல்வர் மருந்தகம் தொடங்க ஆசையா? விண்ணப்பிப்பது எப்படி? முழு தகவலும் உள்ளே
முதல்வர் மருந்தகம் தொடங்க ஆசையா? விண்ணப்பிப்பது எப்படி? முழு தகவலும் உள்ளே
Ration Shop Recruitment 2024: இன்றே கடைசி; ரேஷன் கடை பணிக்கு விண்ணப்பிச்சீங்களா? நேர்காணல் மட்டும்தான்- ரூ.29 ஆயிரம் சம்பளம்
இன்றே கடைசி; ரேஷன் கடை பணிக்கு விண்ணப்பிச்சீங்களா? நேர்காணல் மட்டும்தான்- ரூ.29 ஆயிரம் சம்பளம்
Embed widget