மேலும் அறிய

Puducherry Kannan: புதுச்சேரியின் பிரபலமான அரசியல் தலைவர் திடீர் மறைவு.. முழு விவரம்..

புதுச்சேரி அரசின் முன்னாள் சபாநாயகரும், எம்.பி.,யுமான கண்ணன் உடல்நலக்குறைவால் மறைந்தார். அவரது மறைவுக்கு பல்வேறு கட்சிகளின் தலைவர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர். 

புதுச்சேரி அரசின் முன்னாள் சபாநாயகரும், எம்.பி.,யுமான கண்ணன் உடல்நலக்குறைவால் மறைந்தார். அவரது மறைக்கு பல்வேறு கட்சிகளின் தலைவர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர். 

புதுச்சேரி அரசியலில் ஆளுமை மிக்கவராக திகழ்ந்தவர்களில் ஒருவர் முன்னாள் சபாநாயகர் கண்ணன். இவர் காங்கிரஸ் கட்சியில் அமைச்சர், எம்.பி.,யாகவும் பதவி வகித்துள்ளார். ஒரு கட்டத்தில் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி 2 முறை புதிய கட்சி தொடங்கிய கண்ணன், 2016 ஆம் ஆண்டு தேர்தலில் அதிமுகவில் இணைந்தார். இதன்பின்னர் அக்கட்சியில் இருந்து விலகி பாஜகவில் சேர்ந்தார். தொடர்ந்து கடந்த ஜூலை மாதம் மணிப்பூர் சம்பவத்தை தொடர்ந்து பாஜகவுக்கு தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என சொல்லி அக்கட்சியில் இருந்து கண்ணன் விலகினார். 

இதனிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு நுரையீரல் தொற்று காரணமாக அங்குள்ள ஈஸ்ட் கோஸ்ட் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்தார். வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வந்த கண்ணனை புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி மருத்துவமனையில் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். இப்படியான நிலையில் முன்னாள் சபாநாயகர் கண்ணன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். நிமோனியாவால் அவர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதனைத் தொடர்ந்து கண்ணனின் மகன் விக்னேஷ் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில், ‘கடந்த நவம்பர் 1 ஆம் தேதி இரத்த அழுத்தம் குறைவு மற்றும் சுவாச கோளாறு காரணமாக புதுச்சேரி மூலக்குளத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் தந்தை கண்ணன் தொடர் சிகிச்சையில் இருந்து வந்தார். அவருக்கு நுரையீரல் தொற்று ஏற்பட்டு சுவாசிப்பசில் சிக்கல் ஏற்பட்ட காரணத்தால் மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனளிக்காமல் உயிரிழந்தார்’ என தெரிவிக்கப்பட்டிருந்தது. 

கண்ணன் மறைவுக்கு புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள், தொண்டர்கள், பொதுமக்கள் என பலரும் சமூக வலைத்தளங்கள் வாயிலாக இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அவரது இறுதிச்சடங்குகள் அரசு மரியாதையுடன் இன்று நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"மாணவி பாலியல் வன்கொடுமைக்கு தி.மு.க.தான் காரணம்" அண்ணாமலை பகிரங்க குற்றச்சாட்டு!
Accident: காலையிலே சோகம்! ஜிஎஸ்டி சாலையில் பிரிந்த 3 உயிர் - பீதியில் வாகன ஓட்டிகள்
Accident: காலையிலே சோகம்! ஜிஎஸ்டி சாலையில் பிரிந்த 3 உயிர் - பீதியில் வாகன ஓட்டிகள்
இதென்ன கொடுமை! மதுரையில் நாய்கள் கடித்து 32 பேர் மரணம் - என்னப்பா சொல்றீங்க?
இதென்ன கொடுமை! மதுரையில் நாய்கள் கடித்து 32 பேர் மரணம் - என்னப்பா சொல்றீங்க?
Sam Konstas : தம்பி நீ அடிச்சது யார் தெரியுமா.. பும்ராவை ஆஃப் செய்த 19 வயது இளைஞர்! யார் இந்த சாம் கோன்ஸ்டாஸ்?
Sam Konstas : தம்பி நீ அடிச்சது யார் தெரியுமா.. பும்ராவை ஆஃப் செய்த 19 வயது இளைஞர்! யார் இந்த சாம் கோன்ஸ்டாஸ்?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

RN Ravi Delhi Visit: ”ஸ்டாலின் சொல்றத கேளுங்க!” RN.ரவிக்கு பறந்த ORDER! மோடியின் திடீர் முடிவு?Anna University Issue: அண்ணா பல்கலை. விவகாரம் குற்றவாளி குறித்து திடுக் தகவல்!  கைதானவர் யார்?Sri Ram Krishna Profile: தமிழனை அழைத்த TRUMP WHITE HOUSE-ல் முக்கிய பதவி! யார் ஸ்ரீராம் கிருஷ்ணன்?Anna University Student Sexual Assault |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"மாணவி பாலியல் வன்கொடுமைக்கு தி.மு.க.தான் காரணம்" அண்ணாமலை பகிரங்க குற்றச்சாட்டு!
Accident: காலையிலே சோகம்! ஜிஎஸ்டி சாலையில் பிரிந்த 3 உயிர் - பீதியில் வாகன ஓட்டிகள்
Accident: காலையிலே சோகம்! ஜிஎஸ்டி சாலையில் பிரிந்த 3 உயிர் - பீதியில் வாகன ஓட்டிகள்
இதென்ன கொடுமை! மதுரையில் நாய்கள் கடித்து 32 பேர் மரணம் - என்னப்பா சொல்றீங்க?
இதென்ன கொடுமை! மதுரையில் நாய்கள் கடித்து 32 பேர் மரணம் - என்னப்பா சொல்றீங்க?
Sam Konstas : தம்பி நீ அடிச்சது யார் தெரியுமா.. பும்ராவை ஆஃப் செய்த 19 வயது இளைஞர்! யார் இந்த சாம் கோன்ஸ்டாஸ்?
Sam Konstas : தம்பி நீ அடிச்சது யார் தெரியுமா.. பும்ராவை ஆஃப் செய்த 19 வயது இளைஞர்! யார் இந்த சாம் கோன்ஸ்டாஸ்?
TN Rains: மழை நகராக மாறிய தலைநகர்! இன்னைக்கு எந்த மாவட்டத்துல எல்லாம் மழை? இதுதான் லிஸ்ட்
TN Rains: மழை நகராக மாறிய தலைநகர்! இன்னைக்கு எந்த மாவட்டத்துல எல்லாம் மழை? இதுதான் லிஸ்ட்
Watch Video: அண்ணன் இங்கயே ஆரம்பிச்சுட்டாரு! சாம் கோன்ஸ்டாசை இடித்து தள்ளிய விராட் கோலி!
Watch Video: அண்ணன் இங்கயே ஆரம்பிச்சுட்டாரு! சாம் கோன்ஸ்டாசை இடித்து தள்ளிய விராட் கோலி!
விவசாயிகளுக்கு ஹேப்பி நியூஸ்.. 10,000 வேளாண் கூட்டுறவு சங்கம் தொடங்கியாச்சு!
விவசாயிகளுக்கு ஹேப்பி நியூஸ்.. 10,000 வேளாண் கூட்டுறவு சங்கம் தொடங்கியாச்சு!
Rasipalan December 26: மேஷத்திற்கு கடன் பிரச்னை குறையும்; ரிஷபத்திற்கு பணவரவு - உங்க ராசி பலன்?
Rasipalan December 26: மேஷத்திற்கு கடன் பிரச்னை குறையும்; ரிஷபத்திற்கு பணவரவு - உங்க ராசி பலன்?
Embed widget